$
Drinking Water Level: ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
இதற்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலருக்கு குழப்பம் இருக்கிறது. சமீபத்தில், டாக்டர் ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
பொதுவாக ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. பெண்களுக்கு 2.7 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிப்பது சரி என்று கருதப்படுகிறது, ஆனால் இது மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடும்.
சில நேரங்களில் இந்த அளவு கோடை காலத்தில் அதிகமாகவும், சில சமயங்களில் குளிர்காலத்தில் மக்கள் குறைவாகவும் தண்ணீர் குடிப்பார்கள். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் அனைத்து பாகங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாழ்க்கை முறை சார்ந்து மாறுபடும்
நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவும் உங்கள் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. இது மக்களின் உடல் திறன் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்தது. சிலர் தினமும் உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளிலின் மூலமாகவே அதிக தண்ணீரை உடலுக்கு பெறுவார்கள். பலருக்கு இத்தகைய சூழல் அமைவதில்லை. அதேபோல் நீங்கள் பார்க்கும் வேலை முறையையும் கருத்தில் கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
சிலர் அமர்ந்த இடத்தில் வேலை செய்வார்கள், சிலர் உணவகத்தில் அடுப்பு அருகில் வேலை செய்வார்கள். வீட்டு பெண்களும் அடுப்பு அருகிலேயே சூட்டில் வேலை செய்வார்கள். இத்தகைய நபர்கள் தங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். இதுவே பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
Pic Courtesy: FreePik