Sun Oct 18, 2026 | 12:12 AM IST

Nuts For Glowing Skin: சருமத்தை பளபளப்பா வைத்திருக்க இந்த நட்ஸ் எல்லாம் சாப்பிடுங்க

Nuts For Glowing Skin: சருமத்தை பளபளப்பா வைத்திருக்க இந்த நட்ஸ் எல்லாம் சாப்பிடுங்கNuts For Glowing Skin: சருமத்தை பளபளப்பா வைத்திருக்க இந்த நட்ஸ் எல்லாம் சாப்பிடுங்க

Nuts And Seeds For Skin Whitening: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் இன்று பலரும் முகம் சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் கரும்புள்ளிகள், முகச்சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் போன்றவை அடங்கும். இது வயதானவர்களுக்கு இயல்பானதாக இருப்பினும், இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினரும் இந்த சவாலை சந்தித்து வருகின்றனர்.

வயதான செயல்முறையைத் தவிர, சூரிய ஒளி, மன அழுத்தம், மாசுபாடு உள்ளிட்ட காரணிகள் சருமத்தை பாதிக்கலாம். இதற்கு வழக்கமான உணவில் நட்ஸ் மற்றும் விதைகளைச் சேர்ப்பதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். அதன் படி இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Honey For Face: உங்க முகம் தங்கம் போன்று ஜொலிக்க தேனில் இவற்றை கலந்து தடவுங்கள்!

ஏன் சருமத்திற்கு?

நட்ஸ் மற்றும் விதைகள் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், சருமத்திற்கு மிருதுவான நிறந்தை அளிக்கிறது. இது தவிர, நட்ஸ் மற்றும் விதைகளில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இவை சருமத்தை முன்கூட்டிய வயதான பிரச்சனையிலிருந்து தவிர்க்க உதவுகிறது.

சருமத்தை பளபளப்பாக்கும் நட்ஸ் மற்றும் விதைகள்

சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்திருக்க நட்ஸ் மற்றும் விதைகள் உதவுகின்றன. இதில் சருமத்தை பளபளப்பாக்க வைக்க உதவும் நட்ஸ் மற்றும் விதைகளைக் காணலாம்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இவை வீக்கத்தைக் குறைத்து சருமத்தை ஈரப்பதமாக்க மற்றும் மிருதுவாக வைக்க உதவுகிறது. ஆளிவிதையில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் லிக்னான்கள் போன்ற கலவைகள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதைகள்

இந்த விதைகளில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதுடன், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிக்கிறது. இவை முதுமை எதிர்ப்பு அறிகுறிகளான மெல்லிய கோடுகளின் தோற்றத்தைக் குறைக்கிறது. இந்த விதைகளில் உள்ள தாமிரம் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் மெலனின் உற்பத்தியை ஆதரித்து ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க

எள் விதைகள்

எள் விதைகளில் துத்தநாகம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி புரிகிறது. துத்தநாகம் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக வைப்பதுடன் சரும பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்மை தருகிறது. எள் விதைகளில் நிறைந்துள்ள செசாமால் என்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி விதைகள் துத்தநாகம் நிறைந்த நல்ல மூலமாகும். இது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதுடன், காயத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. இது முகப்பரு பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகளில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்குகிறது.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதன் வைட்டமின் ஈ சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. பாதாமில் நிறைந்துள்ள பயோட்டின் சத்துக்கள் செல் மீளுருவாக்கத்திற்கு உதவுவதுடன், ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது.

அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் பருப்புகளில் நிறைந்துள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கம் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது. வால்நட்ஸில் உள்ள துத்தநாகம் மென்மையான சருமத்தைப் பராமரிக்கவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவுகிறது. இத்துடன் அக்ரூட் பருப்பில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சருமத்தை ஈரப்பதமாக்கவும், மெல்லிய கோடுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க மேலே கூறப்பட்ட நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதை அதிகாலை அல்லது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது சருமத்தை ஒளிரச் செய்வதுடன், ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea Turmeric Face Mask: முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கா? மஞ்சளுடன் இந்த ஒரு பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

→ Papaya For Skin: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக பப்பாளி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.