Doctor Verified

முகப்பருவால் அவதியா? நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ..

நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் சரும ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இன்னும் சில உணவுகள் சருமத்தை மேம்படுத்தலாம். இதில் முகப்பருவைக் கட்டுப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து தோல் மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
முகப்பருவால் அவதியா? நீங்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ..


இன்று பலரும் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகின்றனர். சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க விரும்பி சீரம், கிரீம் மற்றும் லோஷன் போன்ற பல்வேறு பொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சில சரும பொருள்களில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். அதே சமயம், இந்த பொருள்கள் தற்காலிக தீர்வுகளைத் தருவதாகும். நிரந்தர தீர்வுகளைத் தராது. இந்நிலையில், பலரும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று சீரான உணவுமுறைகளைக் கையாள்வதாகும். ஏனெனில், சருமத்திற்கு வெளிப்பூச்சாக பயன்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர, அதை உள்ளிருந்தும் பாதுகாப்பது அவசியமாகிறது.

அதன் படி, சரும ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில், நாம் சில உணவுகளை எடுத்துக் கொள்வதும், சில உணவுகளைத் தவிர்ப்பதும் முக்கியமாகும். ஆம். உண்மையில், நாம் எடுத்துக் கொள்ளும் சில ஆரோக்கியமற்ற உணவுகளால் சருமத்தில் முகப்பருக்கள் தோன்றும். இது அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். எனினும், சருமத்தைப் பராமரிப்பதற்கும், முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் சில ஆரோக்கியமான உணவுகள் உதவுகிறது. இதில் சருமத்தைப் பொலிவாக்க நாம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து தோல் மருத்துவர் மோனிஷா அரவிந்த் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

முகப்பருக்கள் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவுகள்

அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, உடலில் உடனடியாக இன்சுலின் சுரப்பு நடைபெறுகிறது. இவ்வாறு உடனடியாக நடக்கும் போது, சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும். அது மட்டுமல்லாமல், வீக்கத்தையும் அதிகரித்து பருக்களை உருவாக்குகிறது. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் சுரப்பு மெதுவாக நடந்து, பருக்கள் உருவாவதைக் குறைக்கிறது.

முழு தானிய ரொட்டி, காய்கறிகள் மற்றும் சில பழங்களில் குறைந்த கிளைசெமிக் உணவுகள் உள்ளன. மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்களில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது. எனினும், இதை அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Small Pimples: முகத்தில் உள்ள சிறிய பருக்களால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

அன்றாட உணவில் சீரான அளவிலான வைட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் ஏ

வைட்டமின்களில் மிகவும் முக்கியமாக வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ இரண்டும் முகப்பரு உள்ளவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய வைட்டமின்களாகும். மீன் இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றில் வைட்டமின் ஏ உள்ளன. ஆனால், இந்த விலங்கு மூலத்திலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் ரெட்டினாய்டு என்றும், தாவர மூலத்திலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் கெரட்டினாய்டு என்றும் அழைக்கப்படுகிறது. முகப்பரு உள்ளவர்களுக்கு இவை இரண்டுமே முக்கியமாகும். மேலும் வைட்டமின் ஏ தாவர உணவு மூலமான ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிஸ்தா போன்றவற்றில் உள்ளது.

வைட்டமின் ஈ

பெரும்பாலான மக்கள் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை நேரடியாக சருமத்திற்கு தடவுவர். எனினும், வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். கீரை, அவகேடோ, நிலக்கடலை, பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

ஜிங்க்

தாதுக்களைப் பொறுத்த வரை, முகப்பருவைக் குறைப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக சில உணவுகள் 100% ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருந்தால், அதிலிருந்து 70% நம் உடலுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அதே போல, இன்னும் சில 150கிராம் ஊட்டச்சத்துக்களைப் பெற்றிருந்தால் அதில் 30கிராம் மட்டுமே கிடைக்கும். எனவே, எந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை விட, உடல் எவ்வளவு உட்கிரகிக்கிறது என்பதைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.

அவ்வாறு தாவர மூலத்திலிருந்து பெறும் ஜிங்க்கை விட, விலங்கு மூலத்திலிருந்து பெறும் ஜிங்கின் அளவு உடல் அதிகம் எடுத்துக் கொள்கிறது. பாதாம், கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், தயிர் போன்ற தாவர மூலங்களில் ஜிங்க் உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: முகம் பளிச்சென்று இருக்க.. கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க..

ஒமேகா கொழுப்பு அமிலங்கள்

முகப்பருவைக் கட்டுப்படுத்த ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உதவுகிறது. மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளில் ஒமேகா 3 ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும், சியா விதைகள், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் நல்ல அளவிலான ஒமேகா-3 உள்ளது. வால்நட்ஸ், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளில் ஒமேகா-6 உள்ளது.

செலினியம்

மீன், இறைச்சி போன்ற விலங்கு உணவுகளிலும், முந்திரி, கேரட், பருப்பு வகைகள், கீரை, பீச், வாழைப்பழம் மற்றும் கிரீன் டீ போன்ற தாவர உணவுகளிலும் செலினியம் உள்ளது. இவை முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய தாதுக்கள் ஆகும்.

நார்ச்சத்துக்கள்

குடல் ஆரோக்கியத்தின் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியமாகும். இதற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உதவுகிறது. முழு தானிய உணவுகள், கேரட், பெர்ரி, பேரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் உள்ளது.

முகப்பருக்களை உண்டாக்கும் உணவுகள்

வெள்ளை அரிசி - இது முகப்பருக்களை உண்டாக்கும் உணவாகும். இதை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. எனினும், இதை கட்டுப்படுத்துவது முக்கியம்

பால் பொருள்கள் - பால் பொருள்கள் முகப்பருக்களை ஏற்படுத்தாது என்றாலும், முகப்பரு உள்ளவர்கள் எடுத்துக் கொள்வது நிலைமையை மோசமாக்கலாம்.

சாக்லேட் - பால் மற்றும் சர்க்கரை கலந்த சாக்லேட்டுகள் முகப்பருவை ஏற்படுத்தக்கூடும்.

மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் - மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக்கூடிய எண்ணெய்களை பயன்படுத்துவது முகப்பருக்களை உண்டாக்குகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு ஏற்படும் முகப்பரு புள்ளிகளை நீக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்

Image Source: Freepik

Read Next

ஆரோக்கியமான சருமத்திற்கான ஹெல்தி ஃபுட்.. டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரை..

Disclaimer