ஆரோக்கியமான சருமத்தை பெற பலரும் பலவித முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே உங்கள் சருமம் இயற்கையாகவே பளபளக்கும் என்று டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் மோகனலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் பரிந்துரைத்த சில ஹெல்தி ஃபுட்ஸ் பின்வருமாறு..
சரும் ஆரோக்கியத்திற்கான உணவுகள்
கேரட் + பீட்ரூட்
கேரட்டில் உள்ள வைட்டமின் A மற்றும் பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் இரத்தத்தை உள்ளிருந்து சுத்திகரிக்கின்றன. இதனால் முகப்பரு குறைய, சரும அடுக்குகள் சீராகி, பளபளக்கும் தோற்றம் கிடைக்கும். இந்த கலவையை ஜூஸ் வடிவில் எடுத்தால், தினசரி சரும ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சருமம் பளபளனு ஆகணுமா? இதெல்லாம் சாப்பிட்டாலே போதும்...
சியா விதைகள் + தண்ணீர்
சியா விதைகள் உடலுக்கு மிகவும் சக்தி தரக்கூடியது. ஆனால் அதை அப்படியே சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. எனவே சியா விதைகளை குறைந்தது அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குடித்தால், அதிலுள்ள ஓமேகா-3, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலில் எளிதாகச் சேர்ந்து, சருமத்திற்கும் நல்ல ஈரப்பதம் கிடைக்கிறது.
சங்குப்பூ டீ
சங்குப்பூ (Butterfly Pea) டீ, சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுவதோடு, உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. நல்ல செரிமானம் இருந்தால் சருமம் இயற்கையாகவே குளோவாகும். மேலும், இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. தினமும் ஒரு கப் சங்குப்பூ டீ குடிப்பது உடலுக்குள் இருந்து சருமத்தை நன்றாக பராமரிக்க உதவுகிறது.
View this post on Instagram
இறுதிச்சொல்..
சருமம் பளபளப்பதற்காக விலையுயர்ந்த காஸ்மெடிக் பொருட்களையே நாட வேண்டிய அவசியமில்லை. கேரட் + பீட்ரூட் ஜூஸ், சியா விதை நீர், சங்குப்பூ டீ போன்ற எளிய ஹெல்தி உணவுகளை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டால், இயற்கையாகவே சருமம் அழகாகவும் குளோவாகவும் மாறும். கூடுதலாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதுமான தண்ணீர், மற்றும் நல்ல தூக்கமும் சருமத்தின் அழகை காக்கும் முக்கிய காரணிகள்.