Skin Infections: முகப்பரு இருந்தா இதெல்லாம் செய்யாதீங்க. இந்த சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்

  • SHARE
  • FOLLOW
Skin Infections: முகப்பரு இருந்தா இதெல்லாம் செய்யாதீங்க. இந்த சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்


தோல் நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும் நாம் செய்யும் சில தவறுகள்

முகத்தில் பருக்கள் அல்லது தோல் நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படும் போது, நாம் செய்யு ம் சில தவறுகளால் தொற்று அதிகமாகி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் சரும நோய்த்தொற்று இருக்கும் போது எந்தெந்த தவறுகளைச் செய்கிறோம் என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Remove Acne Scars: முகப்பருக்களை நீக்க பின்பற்ற வேண்டிய இயற்கையான முறைகள்

மோசமான சுகாதாரம்

கைகளைத் தவறாமல் அல்லது முழுமையாகக் கழுவாததன் மூலம், தோலில் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை குவிவதற்கு வாய்ப்புள்ளது. அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்டு, பின் உடலில் முகம் அல்லது பிற உடல் பாகங்களைத் தொடுவதால், இந்த நோய்க்கிருமிகள் உடலுக்குள் சென்று, தோல் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

தனிப்பட்ட பொருள்களைப் பகிர்வது

துண்டுகள், மேக்கப் பயன்பாடுகள், ரேஸர்கள், ஆடைகள் போன்ற தனிப்பட்ட பொருள்களைப் பகிர்வதால், தனிநபர்களிடையே நோய்த்தொற்றுக்களான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மாற்றம் ஏற்படலாம். எனவே சரும பராமரிப்பில் ஈடுபடும் தனிப்பட்ட பொருள்களைப் பகிர்வதைத் தடுப்பதன் மூலம் தோல் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

ஈரப்பதத்தைப் புறக்கணிப்பது

ஈரப்பதம் கொண்ட காலணிகள் அல்லது வியர்வையுடன் கூடிய ஆடைகள் போன்றவற்றை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் கால் போன்ற பூஞ்சை தொற்றுகள் மற்றும் ஃபோலிகுலிடிஸ் போன்ற பாக்டீரியா தொற்றுக்கள் இத்தகைய நிலைமைகளில் செழித்து வளரக்கூடியதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

அழுக்கு ஆடைகளை அணிவது

அழுக்கடைந்த அல்லது துவைக்கப்படாத ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, அதில் பாக்டீரியாக்கள், வியர்வை, மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவை துணி மீது விழுந்து, தோல் நோய்த்தொற்றுக்களை உருவாக்கும் சிறந்த சூழலை உருவாக்குகிறது.

சரும அரிப்பு

சருமத்தில் அரிப்பு ஏற்படுவது சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். மீண்டும் மீண்டும் சொறிவது, தோல் உரிவதுடன், பாதுகாப்புத் தடையை உடைத்து, தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. கூடுதலாக அரிப்பு தோலின் மேற்பரப்பில் பாக்டீரியாவை அறிமுகப்படுத்தி, இம்பெடிகோ அல்லது செல்லுலிடிஸ் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும்.

தோல் நோய்த்தொற்றுகளைத் தடுப்பது மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில நல்ல பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதன் படி, சோப்பு மற்றும் தண்ணீருடன் வழக்கமான முறையில் கைகளைக் கழுவுதல், தோல் உரிதலைத் தவிர்ப்பது அல்லது சொறிதலைத் தவிர்ப்பது மற்றும் தனிப்பட்ட பொருள்களை பிரத்தியேகமாகப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். மேலும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்க ஆடைகளைச் சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: walnut Oil For Skin: வால்நட் எண்ணெயை சருமத்தில் தடவினால் என்னாகும் தெரியுமா?

தோல் தொற்று இருப்பதை உணர்ந்தால் அல்லது தோல் சிவத்தல், வீக்கம் அல்லது தொடர் எரிச்சல் ஏற்படின் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. ஆரம்ப கால நோயறிதல் மற்றும் சிகிச்சை முறையின் மூலம் தொற்று மோசமடைவதைத் தடுக்கவும், சாத்தியமான சிக்கல்களைக் குறைக்க முடியும்.

இந்த பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலமும், சரியான சுகாதார நடைமுறைகளைப் பராமரிப்பதன் மூலமும் தோல் நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் ஒட்டு மொத்த ஆரோக்கியமன சருமத்தை மேம்படுத்தலாம். உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பராமரிப்பதற்கு தடுப்பு முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

Image Source: Freepik

Read Next

Skin care Tips: வீட்டில் செய்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த விஷயங்களை கவனிக்கவும்!

Disclaimer

குறிச்சொற்கள்