Skin care Tips: வீட்டில் செய்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த விஷயங்களை கவனிக்கவும்!

  • SHARE
  • FOLLOW
Skin care Tips: வீட்டில் செய்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த விஷயங்களை கவனிக்கவும்!


Precautions for Homemade Face Packs: இப்போதெல்லாம் மக்கள் சந்தையில் கிடைக்கும் அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தவே பெரும்பாலும் விரும்புகிறார்கள். தங்களின் சருமத்தை பராமரிக்க வீட்டிலேயே ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்துகிறார்கள்.

வீட்டில் தயார் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

பொருட்களை சரிபார்க்கவும் (Check Ingredients)

ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு முன், அதில் சேர்க்கப்படும் பொருட்களை சரிபார்க்கவும். அதாவது, ஃபேஸ் பேக் செய்ய நீங்கள் கலக்கும் விஷயங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உதாரணமாக, உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி அல்லது சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தக்கூடாது. பல சமயங்களில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை உபயோகிப்பது முகத்தை கெடுத்துவிடும். எனவே, முதலில் ஃபேஸ் பேக்கில் உள்ளவற்றைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

ஃபேஸ் பேக்கை தூசி மற்றும் அழுக்கிலிருந்து பாதுகாக்கவும் (Protect Face Pack From Dirt)

சந்தையில் கிடைக்கும் ஃபேஸ் பேக்குகள் ஒரு பாட்டில் அல்லது குப்பியில் அடைக்கப்படுகின்றன. ஆனால், நாம் வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரிக்கும் போது, ஒரு கிண்ணத்தை வைத்துப் பயன்படுத்துவோம். திறந்த வெளியில் ஃபேஸ் பேக்கை வைத்திருப்பதால், அதன் மீது தூசி படிகிறது. எனவே, எப்போதும் ஃபேஸ் பேக்கை முடி இறுக்கமான கொள்கலனில் வைத்து குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

ஃபேஸ் பேக் போடுவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்யவும் (Clean Your Face)

ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அழுக்கான முகத்தில் ஃபேஸ் பேக் போடுவதால் சருமத்தில் தொற்று ஏற்படலாம். எனவே, ஃபேஸ் பேக் போடுவதற்கு முன், சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யுங்கள். இதற்குப் பிறகு முகத்தில் ஃபேஸ் பேக் போடவும். உங்கள் முகத்தில் பருக்கள் அல்லது வேறு ஏதேனும் தொற்று இருந்தால், தொற்று நீங்கிய பிறகு காத்திருந்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள்.

ஃபேஸ் பேக் போடுவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள் (Do Patch Test)

ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். பல சமயங்களில், இயற்கையான மூலப்பொருட்கள், சொறி, அரிப்பு, எரியும் உணர்வு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே, முதலில் சிறிய பகுதிகளாக ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த முயற்சிக்கவும். 24 மணி நேரத்திற்குள் சருமத்தில் எந்த எதிர்வினையும் இல்லை என்றால், முகத்தில் ஒரு ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

தவறான பொருட்களை கலக்க வேண்டாம் (Avoid Mixing Wrong Ingredients)

வீட்டில் ஃபேஸ் பேக் தயாரிக்கும் போது, ​​தவறான பொருட்களை கலக்காதீர்கள். இதனால் தொற்று ஏற்படலாம். உதாரணமாக, அத்தியாவசிய எண்ணெயை ரோஸ் வாட்டரில் கலக்கக்கூடாது. இது தோலில் எதிர்வினையை ஏற்படுத்தலாம். உங்கள் தோல் உணர்திறன் கொண்டதாக இருந்தால், உங்கள் முகத்தில் வைட்டமின் சி கொண்ட பழங்கள் அல்லது பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Remove Dark Circles: கருவளையத்தை ஒரே வாரத்தில் நீக்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சியுங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version