Green Peas Properties: புற்றுநோயை உண்டாக்கும் பச்சைப் பட்டாணி சாயம்! எப்படி கண்டறிவது?

  • SHARE
  • FOLLOW
Green Peas Properties: புற்றுநோயை உண்டாக்கும் பச்சைப் பட்டாணி சாயம்! எப்படி கண்டறிவது?


இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் இவை உடல் எடையைக் குறைக்கவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. கர்ப்பிணிகள் பச்சைப் பட்டாணி உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இது போன்ற எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த பச்சைப் பட்டாணி நமக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? ஆம். பச்சைப் பட்டாணியில் கலக்கப்படும் ஒரு இரசாயனம் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Immunity Boosting Foods: மழைக்காலத்தில் குழந்தைகளின் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த உணவுகளைக் கொடுங்க

உணவுகளில் இரசாயனம்

இன்றைய நவீன காலகட்டத்தில் உணவு கலர்ஃபுல்லாக, காரசாரமாக இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம் இந்த வரிசையில் பச்சைப் பட்டாணியும் அடங்கும். பச்சைப் பட்டாணியில் கலர் பச்சையாக தெரிய வேண்டும் என பச்சை நிற சாயத்தைச் சேர்க்கின்றனர். இதற்கு சேர்க்கும் சாயமானது மாலாசைட் கிரீன் (Malachite Green) ஆகும்.

இதற்கு உலர்ந்த பட்டாணியை நீரில் ஊறவைத்து விடுவர். அதில் மாலாசைட் கிரீனைக் கலந்து நிறமேற்றுகின்றனர். உலர்ந்த பச்சைப் பட்டாணி மட்டுமல்ல, உலராத பச்சைப் பட்டாணியைக் கூட நிறமேற்றுகின்றனர். ஆனால், இந்தக் கலப்பட உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மாலாசைட் கிரீன் என்றால் என்ன?

மாலாசைட் கிரீன் என்பது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் ஆகும். அதன் படி, ஜவுளித் தொழில், காகிதச் சாயமிடுதல், உணவு வண்ணமயமான முகவராகப் பயன்படுத்தப்படும் நன்கு அறியப்பட்ட செயற்கை சாயமாகக் கருதப்படுகிறது. இது ஒரு டிரிபெனைல்மீத்தேன் கேஷனிக் சாயமாகும். இந்த சாயமானது சுற்றுச்சூழலுக்கு மறுசீரமைக்கக்கூடியதாகவும், பல்வேறு வகையான நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு பாலூட்டிகளுக்கு அதிகளவு நச்சுத்தன்மையுடையதாகவும் காணப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்துவதுடன், மனிதர்களுக்கு பல்வேறு உறுப்பு நச்சுக்களை ஏற்படுத்தலாம். மேலும் இது நாளமில்லாச்சுரப்பியை சீர்குலைக்கும் சாயமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mint Leaves Benefits: நோயெதிர்ப்பு சக்தி முதல் மன அழுத்தம் வரை! புதினா இலை தரும் அற்புத நன்மைகள்

பச்சை பட்டாணியில் இரசாயனத்தை எவ்வாறு கண்டறிவது?

காய்கறி விற்பனையாளர்கள் காய்கறிகளில் செயற்கை வளண்ணங்களைப் பயன்படுத்துவர். இவை புதியதாகவும், கவர்ச்சியாகவும் காணப்படலாம். இந்த செயற்கை நிறங்கள் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதன் படி, செயற்கை நிறங்கள் கார்போஹைட்ரேட் மற்றும் புரத உட்கொள்ளலில் மாற்றம், சிறுகுடலில் உறிஞ்சுதல் மற்றும் அளவைக் குறைத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பச்சைப் பட்டாணியின் நிறத்தைக் கண்டறிய FSSAI சில எளிய சோதனையை பரிந்துரைத்துள்ளது.

  • இதில் பச்சை பட்டாணி மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு கிளாஸ் தண்ணீரில் அதில் பச்சைப் பட்டாணியைச் சேர்க்க வேண்டும்.
  • இதை அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
  • இந்த தண்ணீரின் நிறம் மாறினால், பச்சை பட்டாணி கலப்படம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
  • நிறம் மாறவில்லையெனில், இதன் நுகர்வு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்த எளிய சோதனை முறைகளைக் கையாள்வதன் மூலம் உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறத்தை சரிபார்க்கலாம். இவ்வாறு கலப்பட உணவினைக் கண்டறிவதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Papaya Seeds Benefits: இனி பப்பாளி விதையை தூக்கி எரியாதீங்கா! இதுல அவ்ளோ நன்மைகள் இருக்கு

Image Source: Freepik

Read Next

Cranberry Benefits: UTI பிரச்னை முதல்… புற்றுநோய் வரை… குருதிநெல்லி நன்மைகள் இங்கே…

Disclaimer