Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Fish Eyes Benefits: மீன் கண் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Benefits Of Eating Fish Eye: மீன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மீனில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற பல முக்கிய கூறுகள் உள்ளன. மீனில் வைட்டமின் பி12 உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் சிறந்த செயல்பாட்டிற்கும் உதவுகிறது. வைட்டமின் பி12 குறைபாட்டால் இரத்த சோகை, நீண்டகால சோர்வு போன்ற பல நோய்களை ஏற்படுத்தும் மற்றும் பிற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டு.

தற்போது, மீன் கண்கள் பல இடங்களில் உணவாக உண்ணப்படுகிறது. ஆனால், அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அசைவம் மற்றும் மீன் சாப்பிடுபவர்கள் அதை தங்கள் உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளலாம். மீன் கண்களை சாப்பிடுவதால் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும்? இதுகுறித்து, டயட் என் க்யூர் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தியிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்கள் இங்கே_

இந்த பதிவும் உதவலாம் : Cholestrol Control: கெட்ட கொழுப்புகள் கரைய இந்த உணவை தினசரி சாப்பிடுங்கள்!

சத்துக்கள் நிறைந்தது

மீனில் பல நன்மைகள் உள்ளதைப் போலவே, அதன் கண்ணிலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மீன் கண்ணில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பல நோய்களை எதிர்ப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதேபோல், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன.

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

மீனில் கொலாஜன் என்ற தனிமம் உள்ளது. கொலாஜன் என்பது ஒரு வகை புரதமாகும், இது தோல், மூட்டுகள், முடி மற்றும் நகங்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வயதாகும்போது, ​​​​உடலில் உள்ள கொலாஜன் அளவு இயற்கையாகவே குறைகிறது. ஆனால், மீன் கண்களை உணவில் ஒரு அங்கமாக்கினால், ஓரளவுக்கு சப்ளை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Janmashtami Fasting Drinks: விரதம் இருக்கும் போது சோர்வில்லாம இருக்க இந்த பானங்களை குடிக்கவும்!

நினைவாற்றலை மேம்படுத்துகிறது

நாளுக்கு நாள் வேலை அழுத்தம் மற்றும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அழுத்தம் காரணமாக, மக்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் போராடுகிறார்கள். அதே நேரத்தில், மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உதவியுடன் பலவீனமான நினைவாற்றலை மேம்படுத்தலாம்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் தகவலின்படி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வது கற்றல் திறனை மேம்படுத்துகிறது. அத்துடன் நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Chia Seeds Benefits: சியா விதைகளில் குழந்தைகளுக்கு நிறைந்துள்ள நன்மைகள் என்ன?

பல இடங்களில் மீன் கண்களை மக்கள் சாப்பிடுவதில்லை. ஆனால், இதில் பல சத்துக்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. மீன் கண்களை சாப்பிடுவதில் யாருக்கேனும் அலர்ஜி இருந்தால், அவற்றை சாப்பிடக்கூடாது. மறுபுறம், சமைப்பதற்கு முன் மீன்களின் கண்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், தொற்று பிரச்சனைகளும் ஏற்படலாம். நீங்கள் மீன் கண்களை சாப்பிட விரும்பவில்லை என்றால், அவற்றை சாப்பிட வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Honey Benefits: தித்திக்கும் தேனால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content