Chia Seeds Benefits: சியா விதைகளில் குழந்தைகளுக்கு நிறைந்துள்ள நன்மைகள் என்ன?

  • SHARE
  • FOLLOW
Chia Seeds Benefits: சியா விதைகளில் குழந்தைகளுக்கு நிறைந்துள்ள நன்மைகள் என்ன?

சியா விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

அரைக்கப்பட்ட சியா விதைகள் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. இது வளர்ந்து வரும் செரிமான அமைப்பை மேலும் மேம்படுத்த இந்த அமைப்பு பெருமளவு உதவுகிறது. சியா விதைகள் ஒரு தேக்கரண்டியில் 1.7 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து உணவுகளில் இது மிகச்சிறந்த உணவாக காணப்படுகிறது. நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து அவசியம். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்கும்.

வலுவான பற்கள் மற்றும் எலும்புகள்

இதில் முழு பாலை விட அதிக கால்சியம் உள்ளது. கால்சியம் வலுவான பற்கள் மற்றும் எலும்புகளுக்கு இன்றியமையாதது. இது உடலில் வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் அளவை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களைப் பாதுகாக்கிறது, நோய்களைத் தடுக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

சியா விதைகளில் ஏணைய நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சியா விதைகள் ஏணைய நன்மைகளை வழங்குகிறது. குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவையும் புதிதாக கொடுப்பதற்கு முன்பு அதன் தாக்கம் மற்றும் அளவு குறித்து மருத்துவரிடம் பரிந்துரை பெறுவது நல்லது. சியா விதைகளில் இருக்கு பிற நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

எடை இழப்புக்கு உதவும்

சியா விதைகள் 14% புரதத்தால் ஆனது. எடை இழப்பு, தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பதற்கு புரதம் அவசியம். புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது உங்களை திருப்தியடையச் செய்யும். சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் சியா விதைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்த விதைகள் உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன. சியா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பலர் சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூத்திகளில் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானம் அதிகரித்து குடல் இயக்கம் மேம்படும். எடை இழப்புக்கு ஆரோக்கியமான செரிமானம் அவசியம். ஃபைபர் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது

சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதையை தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல் வடிவத்தை அளிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை உட்கொள்வது உங்களுக்கு நிறைவான உணர்வைத் தருகிறது மற்றும் உணவை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இது உங்களை குறைந்த கலோரிகளை சாப்பிட வைக்கும். இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.

image source: freepik

Read Next

Child Avoid Foods: குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன?

Disclaimer

குறிச்சொற்கள்