Fri Sep 11, 2026 | 09:50 PM IST

Doctor Verified

குடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற 8 சிறந்த காலை உணவுகள் – AIIMS நிபுணர் பரிந்துரை

எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கியமான குடலுக்கான சிறந்த காலை உணவு விருப்பங்கள் இங்கே.

காலை உணவு என்பது நம் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் முக்கியமான உணவாகும். ஆனால், ஆரோக்கியமான குடலுக்குப் பொருத்தமான காலை உணவுகள் எவை என்பது குறித்து பெரும்பாலானோர் தெளிவாக அறிந்திருக்கமாட்டார்கள். இதற்கான விடையை, AIIMS மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தெரிவித்துள்ளார்.

இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் மட்டுமல்லாமல், உலகளவில் பரவலாக பயன்படும் சில உணவுகளும் குடல் நலனுக்குப் பெரிதும் உதவுகின்றன என அவர் கூறியுள்ளார்.

artical  - 2025-08-22T111247.350

மருத்துவரின் விவரம்

டாக்டர் சௌரப் சேத்தி, எம்.டி., எம்.பி.எச்., சான்றளிக்கப்பட்ட இரைப்பை குடல் நிபுணர், ஹெபடாலஜிஸ்ட் மற்றும் எண்டோஸ்கோபிஸ்ட் ஆவார். அவர் AIIMS-ல் பயிற்சி பெற்றார், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் MPH முடித்தார். மேலும் ஹார்வர்டில் குடல் மற்றும் ஹெபடாலஜி மற்றும் ஸ்டான்போர்டில் எண்டோஸ்கோபி துறைகளில் மேற்படிப்பும் செய்துள்ளார்.

குடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த காலை உணவுகள்

1. இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி

* Probiotics, நார்ச்சத்து, தாவர புரதம் நிறைந்தது.

* குடல் பாக்டீரியாவை வளர்க்கும் பாரம்பரிய தென்னிந்திய உணவு.

2. டோஃபு ஸ்க்ராம்பிள் மற்றும் வதக்கிய காய்கறிகள்

* தாவர புரதம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்தது.

* அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை எளிதாக்கும்.

3. கிரேக்க தயிர், பெர்ரி மற்றும் சியா விதைகள்

* Probiotics, antioxidants, Omega-3 நிறைந்தது.

* குடல் நுண்ணுயிர் சமநிலையை பாதுகாக்கும், வீக்கத்தைக் குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருந்தா பல பிரச்சனைகளைத் தள்ளி வைக்கலாம்.. அதுக்கு இந்த 6 ட்ரிங்ஸ் மட்டும் குடிங்க போதும்

4. ஓட்ஸ், ஆளிவிதை மற்றும் வாழைப்பழம்

* கரையக்கூடிய நார்ச்சத்து, Probiotics அதிகம்.

* இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

5. ஆம்லெட், மல்டிகிரைன் டோஸ்ட்

* மெலிந்த புரதம், complex carbs, வைட்டமின்கள் நிறைந்தது.

* நீண்ட நேரம் பசியைத் தணித்து, குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.

6. முட்டை, குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட கோழி, முழு கிரைன் டோஸ்ட்

* புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள்.

* அவகேடோவுடன் சேர்த்தால் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும்.

7. முழு தானிய அவகேடோ டோஸ்ட்

* நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் நிறைந்தது.

* குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையை மேம்படுத்தும்.

8. காய்கறிகள் மற்றும் வேர்க்கடலையுடன் போஹா

* நார்ச்சத்து மற்றும் தாவர புரதம் நிறைந்தது.

* லேசானது, செரிமானத்திற்கு ஏற்றது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக

“சிறந்த குடல் காலை உணவில் புரதம், probiotics, prebiotics மற்றும் பாலிபினால்கள் அடங்கியிருக்க வேண்டும்” என்று டாக்டர் சௌரப் சேத்தி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பு

இந்த பதிவு, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல் நல பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

Read Next

ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு! உங்க டயட்ல இந்த ஒரு பொருளை சேர்த்துக்கிட்டா போதும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content