Fri Sep 11, 2026 | 10:46 PM IST

Doctor Verified

Best vs Worst Breakfast Foods.! உங்கள் காலை உணவில் என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக்கூடாது.? மருத்துவர் விளக்கம்..

காலை உணவில் அதிக சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பூரி, பாவ் பாஜி போன்றவை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதற்கு பதிலாக முட்டை, ஓட்ஸ், தோசை, காய்கறி ஓம்லெட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

“காலை உணவு ராஜாவைப் போல இருக்க வேண்டும்” என்று பழமொழி உள்ளது. ஆனால் நிஜத்தில், நாம் பெரும்பாலும் சுவைக்காகவே காலை உணவை தேர்வு செய்கிறோம். இதனால் பலர் காலை உணவில் சர்க்கரை அதிகம், எண்ணெய் அதிகம், புரதம் குறைவான உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதுவே நாள் முழுவதும் சோர்வு, குடல் சுகம் குறைவு மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது என்று காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி எச்சரிக்கிறார். அவரின் விளக்கப்படி, எந்த காலை உணவை தவிர்க்க வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

தவிர்க்க வேண்டிய காலை உணவுகள்

* சர்க்கரை நிறைந்த சீரியல் – குழந்தைகள் விரும்பினாலும், அதிக சர்க்கரை காரணமாக இன்சுலின் அளவை பாதித்து, அதிக பசி, உடல் பருமனை ஏற்படும்.

* சுவை சேர்க்கப்பட்ட தயிர் (Flavored Yogurt) – ஆரோக்கியம் போல தோன்றினாலும், உண்மையில் சர்க்கரை நிறைந்தது.

* வெள்ளை ரொட்டி மற்றும் பட்டர் – சத்துக்கள் குறைவாக, வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இதில் உள்ளது.

* காலை பேஸ்ட்ரிகள் (டோனட், மஃபின்) – அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கை உள்ளது.

* அதிகம் செயலாக்கப்பட்ட இறைச்சிகள் (பேகன், சாசேஜ்) – இதில் உள்ள கொழுப்பு, உப்பு குடல் மற்றும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* பூரி + உருளைக்கிழங்கு – இதில் எண்ணெய் சத்து அதிகம். காலையில் சாப்பிட்டால் கல்லீரல், குடல் பாதிப்பு ஏற்படும்.

* பராட்டா + சண்ணா – இதில் அதிக எண்ணெய் இருப்பதால், செரிமானத்தை கடுமையாக்கும்.

* ஜாம் + டோஸ்ட் – இதில் சர்க்கரை அதிகம்; சத்துக்கள் குறைவு.

* பாவ் பாஜி – இதில் வெண்ணெய் நிறைந்தது. மேலும் கார்போஹைட்ரேட் அதிகம்.

* பிஸ்கட் + தேநீர் – இந்தியர்களின் பொதுவான பழக்கம், ஆனால் வயிறு காலியாக இருக்கும்போது செரிமான சிக்கல்கள்.

இந்த பதிவும் உதவலாம்: மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் - எது நல்லது? எவ்வளவு சாப்பிடலாம்? மருத்துவர் விளக்கம்..

சாப்பிட வேண்டிய சிறந்த காலை உணவுகள்

* காய்கறி ஓம்லெட் + முழுதானிய பரோட்டா – இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

* ஸ்க்ராம்பிள் எக்ஸ், பசலைக்கீரை, ஹோல் கிரெயின் டோஸ்ட் – இவை சத்தான கூட்டணி.

* ஓட்ஸ், ஆளி விதை, வாழைப்பழ துண்டுகள் – இதில் நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

* முட்டை, அவகாடோ, ஸ்ப்ரெளட்ஸ் டோஸ்ட் – இதில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளன.

* டோஃபு ஸ்க்ராம்பிள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் குடைமிளகாய் – இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளது.

* இனிப்பு சேர்க்காத கெஃபிர் + வால்நட் + மாதுளை – குடல் நுண்ணுயிர்களுக்கு நன்மை.

* பச்சைபயிறு அடை, புதினா சட்னி மற்றும் தயிர் – இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது.

* தோசை, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி - இது பாரம்பரியனது மற்றும் சத்தானதும் கூட.

* முழுதானிய டோஸ்ட், ஹம்மஸ், தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில் – இந்த மத்தியதரைக் கடல் உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

* கிரேக் யோகர்ட், பேரிக்காய் மற்றும் சியா விதை – இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

மருத்துவரின் முக்கிய அறிவுரை

* காலை உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்தால், நீண்ட நேரம் பசி வராது.

*இந்திய உணவுகள் (தோசை, இட்லி, சாம்பார், அடை) கூட சரியான முறையில் தயாரித்தால் உலகின் சிறந்த காலை உணவாகும்.

இறுதியாக..

காலை உணவு நாளை முழுவதையும் பாதிக்கும் சக்தி கொண்டது. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து, சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்தால் குடல், கல்லீரல், இதயம் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவர் பகிர்ந்த ஆரோக்கிய அறிவுரைகளை அடிப்படையாகக் கொண்டது. எந்த உணவுமுறையையும் மாற்றுவதற்கு முன், தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

Read Next

ஹைப்போ தைராய்டிசத்தை ரிவர்ஸ் செய்ய டாப் 7 சிறந்த வழிகள் இதோ.. நிபுணர் தரும் டிப்ஸ்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 25, 2025 17:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content