Fri Sep 11, 2026 | 11:30 PM IST

Expert

என்ன செய்தாலும் வெயிட் லாஸ் பண்ண முடியாததுக்கு இந்த ஒரு உறுப்பு தான் காரணம்.. அதுக்கு இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க

உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் உடல் உறுப்பாக கல்லீரல் அமைகிறது. கல்லீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் உடல் எடையைக் குறைப்பதற்கு கல்லீரலைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். இதில் குறிப்பாக, எடை அதிகரிப்பு விரைவில் நடக்கக்கூடிய விஷயமாகும். எடை அதிகரிப்பு விரைவில் நடப்பது போல, எடையிழப்பு விரைவில் நடக்காது. உண்மையில், எடையை இழப்பதற்கு பலரும் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.

ஆனால் கடுமையான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் இன்னும் சில முயற்சிகள் செய்தும் உடல் எடையிழப்பு கடினமாக இருக்கலாம். உண்மையில், இந்த கடுமையான முயற்சிகள் எடையிழப்பைத் துரிதப்படுத்தாமல், கடினமானதாக மாற்றுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது, உடலில் உள்ள முக்கிய உறுப்பாக விளங்கும் கல்லீரல் ஆகும். பொதுவாக, கல்லீரல் நம் உடலில் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எடையிழப்பைத் தடுக்கும் கல்லீரல்

கல்லீரல் ஆனது உடல் எடை இழப்பைத் தடுக்கும் ஒரு உறுப்பாக விளங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும், அதை அடைய முடியாததற்கு முக்கிய காரணமாக கல்லீரல் அமைகிறது. கல்லீரல் உடல் எடையிழப்பைத் தடுக்கும் முக்கிய உறுப்பாகக் கருதப்படுகிறது. எனவே, கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைப்பதும் அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: டக்கு டக்குனு வெய்ட்டு குறையனுமா.? அதான் பாதாம் பிசின் இருக்கே.. இப்படி பட்டும் சாப்பிடுங்க..

இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்க முடியும். இதில் கல்லீரல் ஏன் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் கல்லீரலை நச்சு நீக்கவும் உதவும் குறிப்புகள் குறித்து தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து நிபுணராக விளங்கும் ராமிடகவுர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நிபுணரின் கருத்து

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, “உங்கள் எடை இழப்பைத் தடுக்கும் இந்த ஒரு உறுப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது தான் கல்லீரல்” என்று குறிப்பிடுகிறார்.

கல்லீரல் எவ்வாறு கொழுப்பை எரிக்க உதவுகிறது?

ஊட்டச்சத்து நிபுணர் கூறியதாவது, உங்கள் கல்லீரல் உங்கள் உடலின் கொழுப்பை எரிக்கும் முதலாளி.

  • மந்தமாக இருந்தால் உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது
  • ஈஸ்ட்ரோஜன் அனுமதி கூட பாதிக்கப்படும் (ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம்)
  • உடல் உப்புசம், எடை அதிகரிப்பு மற்றும் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி பிடிவாதமான கொழுப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடை குறையவில்லை என்றால் தவறு உங்கள் டயட்டில் தான்! இந்த 5 உணவுகளை உடனே நிறுத்துங்கள்!

எடை இழப்பை துரிதப்படுத்த 5 மிகவும் பயனுள்ள கல்லீரல் நச்சு நீக்க மருந்துகள்

எடையிழப்பைத் துரிதப்படுத்த மிகவும் பயனுள்ள கல்லீரல் நச்சு நீக்கிகளைப் பயன்படுத்தலாம்.

  • தினமும் காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு எலுமிச்சை நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி பித்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • இரவில் 1 தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம் உட்கொள்ள வேண்டும். இவை கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  • தினமும் பீட்ரூட் சாற்றை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், பீட்ரூட் சாற்றில் உள்ள பீட்டெய்ன் ஆனது கல்லீரல் நச்சு நீக்க நொதிகளை ஆதரிக்க உதவுகிறது.
  • மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு தண்ணீர் அல்லது பாலில் ஒரு சிட்டிகை சேர்ப்பது சக்திவாய்ந்த கல்லீரல் சுத்தப்படுத்தி, ஈஸ்ட்ரோஜனை சமநிலைப்படுத்துகிறது.
  • முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற சிலுவை காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இது கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் மற்றும் உடலில் இருந்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை அகற்றவும் உதவுகிறது.

View this post on Instagram

A post shared by dt.ramitakaur | Maternal And Child Nutritionist | (@dt.ramitakaur)

குறிப்பு

மேலும் நிபுணர் தனது பதிவில், “ஒரே ஒரு மருந்து அல்லது சூப்பர்ஃபுட் மட்டும் உங்கள் பிரச்சனையை சரிசெய்யாது, எனவே நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ண வேண்டும் மற்றும் நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு, 40-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலும், எந்தவொரு உடல் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் சமமாக முக்கியம், யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க மறக்காதீர்கள்” என்று கூறி தனது பதிவை முடித்தார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இப்படி செய்தால் 30 நாளில் உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் விளக்கம்..

Image Source: Freepik

Read Next

எடை அதிகரிக்க முடியவில்லையா? மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறும் புத்திசாலித்தனமான வழிகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 30, 2025 16:57 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content