Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Doctor Verified

எடை குறையவில்லை என்றால் தவறு உங்கள் டயட்டில் தான்! இந்த 5 உணவுகளை உடனே நிறுத்துங்கள்!

எடை குறையாமல் சோர்வடைகிறீர்களா? உங்கள் வளர்சிதை மாற்றம் (Metabolism) மெதுவாக காரணம் இந்த 5 உணவுகள் தான்! உணவியல் நிபுணர் கூறும் முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் மாற்று ஆரோக்கியமான வழிகள் இங்கே.

பலர் தினமும் கடுமையான டயட், உடற்பயிற்சி போன்ற முயற்சிகளை எடுத்தாலும் எடை குறையாமல் தவிக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் — மெதுவாக இயங்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolic Rate). வளர்சிதை மாற்றம் மெதுவாக இருந்தால், கலோரிகள் உடலில் எரியாமல் கொழுப்பாக சேமிக்கப்படும். இது எடை அதிகரிப்பு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள், சோர்வு, செரிமானப் பிரச்சினைகள் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

இந்த நிலைக்கு முக்கிய காரணமாக சில உணவுகள் அடிக்கடி சாப்பிடப்படுகின்றன என்பதை டெல்லி ஹோலி ஃபாமிலி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சனா கில் விளக்குகிறார். இங்கே வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் 5 முக்கிய உணவுகள் பற்றி அறிந்துகொள்வோம்.

வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் உணவுகள்

பாக்கெட் பழச்சாறுகள்

பலர் டெட்ரா பாக்கெட் பழச்சாறுகள் ஆரோக்கியமானவை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதற்கு மாறாகும். இவ்வகை பானங்களில் சர்க்கரை அளவு மிக அதிகம், மேலும் நீண்ட நாள் கெடாமல் இருக்க பாதுகாப்புச் சேர்க்கைகள் (Preservatives) சேர்க்கப்படுகின்றன.

இவை வளர்சிதை மாற்றத்தை பாதித்து, இன்சுலின் அளவை மாற்றி, உடலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். இதற்கு மாற்றாக, தேங்காய் நீர், எலுமிச்சை நீர், துளசி – புதினா மூலிகை பானங்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

நிறைவுற்ற கொழுப்புகள்

பாலூட்டிகள் சார்ந்த பொருட்கள் (மாட்டிறைச்சி, வெண்ணெய், பனீர் போன்றவை) நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats) அதிகமாகக் கொண்டுள்ளன. இவை இதய நோய், உடல் பருமன், ஹார்மோன் சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இதற்கு பதிலாக, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், அவகாடோ எண்ணெய் போன்ற அன்சாசுரேட்டட் கொழுப்புகள் உட்கொள்ளுங்கள். இவை உங்கள் வளர்சிதை மாற்றத்தைச் செயல்படுத்தி, உடல் கொழுப்பை குறைக்கும்.

வறுத்த சிப்ஸ்

வறுத்த சிப்ஸ் அல்லது டீப் ஃப்ரைட் ஸ்நாக்ஸ் வளர்சிதை மாற்றத்தை கடுமையாக பாதிக்கக்கூடும். அவை ஸ்டார்ச், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் Trans fats நிறைந்தவை. இதனால் உடல் கொழுப்பு சேர்ந்து, செரிமானம் மந்தமாகிறது.

இன்றைய "பேக் செய்யப்பட்ட சிப்ஸ்" என்ற பெயரில் விற்கப்படும் பல பொருட்களிலும் பாதுகாப்புகள் இருப்பதால் அவை உண்மையில் ஆரோக்கியமானவை அல்ல. இதற்கு மாற்றாக, வறுத்த கடலை, முளை கட்டிய தானியம், சுண்டல், ஏர் பாப் செய்யப்பட்ட மக்காச்சோளம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தால் மாதம் இருமுறை பீரியட்ஸ் வருமா? மருத்துவர் தரும் விளக்கம் இதோ

அதிக உப்பு

உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் சோடியம் அளவை உயர்த்தி, நீரிழிவு, வீக்கம், ஹார்மோன் சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் அதிகரிப்பு வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, கலோரிகளை எரிக்க முடியாமல் செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி நூடுல்ஸ், சாஸ், மற்றும் டின்னில் விற்கப்படும் உணவுகள் அனைத்தும் அதிக உப்பைக் கொண்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக வீட்டில் சமைத்த மிதமான உப்பு உணவுகள், எலுமிச்சைச் சாறு அல்லது மிளகு சுவையூட்டிகள் பயன்படுத்தலாம்.

அதிக இனிப்பு

சிலர் உணவுக்குப் பிறகு இனிப்பைத் தவிர்க்க முடியாமல் சாப்பிடுவார்கள். ஆனால் அதிக இனிப்புகள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்குகின்றன.

இதற்கு மாற்றாக சர்க்கரைக்கு பதிலாக திராட்சை (Raisins), தேன், அல்லது பழங்களுடன் தயிர் எடுத்துக்கொள்ளலாம். இயற்கையான இனிப்புகள் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும்.

வளர்சிதை மாற்றத்தை வேகமாக வைத்திருக்க உதவும் சிறு வழிகள்:

* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

* புரதம் நிறைந்த உணவு சேர்க்கவும்

* தினசரி குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும்

* மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கம் பெறவும்

இறுதியாக..

எடை குறைக்க முடியாததற்கு காரணம் எப்போதும் உங்களின் முயற்சிகள் அல்ல. சில நேரங்களில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் தான் தடையாக இருக்கும். அதனால், மேலே கூறிய இந்த 5 உணவுகளைத் தவிர்த்து, இயற்கை மற்றும் வீட்டிலே தயாரிக்கப்படும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால், எடை குறைப்பு தானாகவே எளிதாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவலுக்காக மட்டுமே. இதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மருத்துவரின் ஆலோசனையை மாற்றாது. எந்தவொரு உடல் நலப் பிரச்சினைக்கும் முன், உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும்.

Read Next

ஒரு நாளில் 500 கலோரி எரித்தால் போதுமா.? மருத்துவரின் விளக்கம் இதோ..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 18:45 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content