Fri Sep 11, 2026 | 11:14 PM IST

Fenugreek Seeds for Hair: ஆரோக்கியமான கூந்தலை பெற வெந்தயத்தை இப்படி முடியில் தடவுங்க!

How to Use Methi for Hair: கூந்தல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும் போது, நமது அழகு மேலும் அதிகரிக்கும். ஆனால், தற்போதையை காலகட்டத்தில் பெரும்பாலும் நாம் தலை முடி பிரச்சினையை சந்திக்கிறோம். முடியை சரியாக பராமரிக்க சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி நாம் உபயோகிப்போம் ஆனால் எந்த பயனும் கிடைக்காது.

தலை முடி சம்மந்தமான பிரச்சினைக்கு காலம் காலமாக நமது பாட்டி, அம்மாக்கள் கூறும் ஒரு மூலிகை வெந்தயம். இது தலைமுடிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே வெந்தயத்தில் உள்ளது. கூடுதலாக, வெந்தய விதைகளில் புரதம் உள்ளது, இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெந்தய விதை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

வெந்தயத்தில் உள்ள பண்புகள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றையும் நீக்குகிறது. வெந்தய விதைகளை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி உபயோகிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தலைமுடியில் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது?

வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறு

வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலைமுடியில் தடவலாம். இதற்கு முதலில் வெந்தய விதையை இரவு முழுவதும் நன்கு ஊறவைக்கவும். பின்னர், அதை விழுது போல நன்கு அரைக்கவும். அதில், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும், முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் காணப்படும். வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறு தடவுவதன் மூலம் உச்சந்தலை மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Fall In Men: ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

வெந்தயம் மற்றும் தயிர்

வறண்ட மற்றும் மெலிந்த கூந்தல் பிரச்சினைக்கு வெந்தயம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். இதற்கு வெந்தய விதைகளை ஊற வைத்து கொள்ளவும். அதை பேஸ்ட் செய்து, அதனுடன் தயிர் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து சாதாரண நீரில் முடியை அலசவும். இது பொடுகுத் தொல்லையை நீக்குவதோடு, கூந்தலையும் பளபளப்பாக மாற்றும்.

வெந்தயம் மற்றும் கடுகு எண்ணெய்

வெந்தயம் மற்றும் கடுகு எண்ணெயை கூந்தலை அடர்த்தியாக்கை சிறந்த பொருள். வெந்தய விழுதில் கடுகு எண்ணெய் கலந்து தடவினால் முடி தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். வெந்தயத்தை விழுதாக அரைத்து அதில், கடுகு எண்ணெய் கலக்கவும். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் விடவும். பின்னர் லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவி இயற்கையாக உலர வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Fall Tips: கொத்து கொத்தா முடி கொட்டுதா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க!

வெந்தயம் மற்றும் ஆளிவிதை

வெந்தயம் மற்றும் ஆளி விதை கலவையை தலைமுடியில் தடவுவது நன்மை பயக்கும். இதற்கு வெந்தயம் மற்றும் ஆளி விதையை ஒன்றாக ஊறவைக்கவும். இவை இரண்டையும் அரைத்து பின் தலையில் தடவவும். 30-35 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை தண்ணீரில் கழுவவும். இது உங்கள் முடியின் பல பிரச்சனைகளை தீர்க்கும்.

Image Credit: freepik

Read Next

Hair Growth Juice: இந்த ஜூஸ்களை குடிச்சா முடி நீளமா வளருமாம் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content