Sat Sep 12, 2026 | 02:22 AM IST

Expert

Back Pain: பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற இவற்றை பின்பற்றுங்க!

How to Relieve Back Pain After Giving Birth: கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் முக்கியமான காலகட்டம். இது அவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றக்கூடியது. குழந்தை பிறந்த பிறகு, பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிலர் எடையை அதிகரிக்க துவங்குவார்கள், சிலர் எடை குறைப்பை சந்திப்பார்கள்.

குறிப்பாக பல பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு கடுமையான முதுகுவலியை எதிர்கொள்கிறார்கள். இது கர்ப்பத்திற்குப் பிறகு மிகவும் பொதுவானது. அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், பீதி அடைய வேண்டாம். உணவியல் நிபுணர் ரமித் கவுர் பரிந்துரைத்த சில வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களை பற்றி நமக்கு விளக்கியுள்ளார். இவை உங்களுக்கு முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Back Pain in Pregnancy: கர்ப்பத்தின் போது தீரா முதுகு வலியை தீர்க்க இதை செய்யுங்க!

முதுகுவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் 10 வாழ்க்கை மாற்றங்கள்

  • பிரசவத்திற்குப் பின் 6 மாதங்களுக்குப் பிறகு, குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு லேசான நடைபயிற்சி, யோகா போன்றவற்றை வழக்கமாக்குங்கள்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், முதுகை வளைக்காமல் மார்பை மேல்நோக்கி தூக்கி பால் ஊட்ட வேண்டும்.
  • பிரசவத்திற்குப் பிறகு குழந்தையை இடுப்பில் தூக்க வேண்டாம். ஏனெனில், அவ்வாறு செய்வது உங்கள் முதுகில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது முதுகுவலியை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Pregnancy Swimming: கர்ப்பிணிகள் நீச்சல் பயிற்சி செய்வது பிரசவத்திற்கு நல்லதா?

  • எந்தவொரு பொருளையும் தூக்க அல்லது உங்கள் மடியில் குழந்தையைப் பிடிக்க, இடுப்பில் இருந்து வளைப்பதற்குப் பதிலாக, உங்கள் முழங்கால்களை வளைத்து தூக்குங்கள்.
  • மலச்சிக்கல் பிரச்சனையும் பலருக்கு முதுகு வலியை ஏற்படுத்தும். இந்நிலையில், உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளுடன் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
  • பிரசவத்திற்குப் பிறகு கால்சியம் இல்லாததால், பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். இதைத் தவிர்க்க ராகி, எள், மோர், பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • முதுகுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், திராட்சை, பிளம்ஸ், பருப்பு, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இவை உடலில் ஏற்படும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
  • புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முதுகு வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Healthy Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதுதான்.!

  • ஒமேகா 3 நிறைந்த உணவுகளான அக்ரூட் பருப்புகள், நெய், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த உணவுகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை, இது முதுகு வலியைப் போக்க உதவும்.
  • தினமும் இரவில் தூங்கும் முன் மஞ்சள் கலந்த பால் குடிக்கவும். மஞ்சள் பாலை உட்கொள்வதால் முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்

தேவையான பொருள்:

தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.
ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை:

  • முதலில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
  • பிறகு அதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் சேர்க்கவும்.
  • இப்போது குளிர்விக்க அறை வெப்பநிலையில் வைக்கவும்.
  • எண்ணெய் தயாராக உள்ளது, அதை உங்கள் இடுப்பில் வலி உள்ள இடத்தில் மெதுவாக தடவி மசாஜ் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்பிணிகள் கவனத்திற்கு… ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள், தீர்வுகள் இதோ!

பிரசவத்திற்குப் பிறகு இடுப்பு அல்லது முதுகுவலி ஏற்படுவது பொதுவானது, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் நிலை மோசமாக இருந்தால், கண்டிப்பாக ஒருமுறை மருத்துவரை அணுகவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Healthy Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதுதான்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content