Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Doctor Verified

சிறுநீரக பிரச்னை இருக்கா.? இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.. மருத்துவர் எச்சரிக்கை.!

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து மருத்துவர் நித்யா வழங்கிய எச்சரிக்கை. உப்பு, அசைவம், கீரை, புரதச்சத்து உணவு ஏன் தவிர்க்க வேண்டும்? எந்த காய்கறிகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்? முழு விவரம் இங்கே.

சிறுநீரகப் பிரச்சனை (Kidney Disease) உள்ளவர்கள் உணவில் செய்யும் சிறு தவறுகளே அவர்களின் உடல்நிலையை விரைவாகத் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சிறுநீரக நோயாளிகள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எதை சேர்த்துக் கொள்ளலாம் என்பதைக் குறித்து மருத்துவர் நித்யா, டாக்டர் இண்டர்வியூ யூடியூப் சேனலில் விரிவாக விளக்கம் தெரிவித்துள்ளார்.

உப்பு – முதலில் நிறுத்த வேண்டிய முக்கிய உணவு

மருத்துவர் நித்யாவின் கூற்றுப்படி, சிறுநீரக நோயாளிகளுக்கான முதல் எதிரி ‘உப்பு’. அதிக உப்பு உட்கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை உயர்த்தும், சிறுநீரகத்தின் பணிச்சுமையை அதிகரிக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை வேகமாக சேதப்படுத்தும். எனவே, உப்பு, அதிக உப்பு கொண்ட ஸ்நாக்ஸ், துரித உணவுகள், பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

3

புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகள் – கவனமாகத் தவிர்க்க வேண்டியது

சிறுநீரகம் செயலிழக்கும் போது, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகளை வடிகட்டி வெளியேற்றும் திறன் குறையும். இதனால் யூரியா, க்ரியாடினின் உடலில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால், அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை, குறிப்பாக அசைவங்களை, முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர் நித்யா கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: கிட்னி ஹெல்தியா இருக்கனுமா.? இந்த சூப்பர் ஃபுட்ஸ் இருக்க கவலை எதுக்கு.!

கீரை வகைகள் – சிறுநீரகத்திற்கு கூடுதல் சுமை

பலர் ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் கீரையை தினமும் சாப்பிடுவார்கள். ஆனால் சிறுநீரக நோயாளிகளுக்கு, அதிக பொட்டாசியம் (Potassium), ஆக்ஸலேட் (Oxalate) கொண்ட கீரை வகைகள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை தளரச்செய்யும். எனவே, கீரை வகைகளையும் உணவில் தவிர்க்க வேண்டியது அவசியம்.

புளி – சிறுநீரக பிரச்சனையை அதிகரிக்கக்கூடியது

புளி உடலில் அமிலத்தன்மையை (Acidity) உயர்த்துகிறது. இது சிறுநீரகத்தின் வடிகட்டும் செயல்பாட்டை சிரமப்படுத்தும். அதனால், புளியை உணவில் சேர்க்காமல் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர் அறிவுறுத்துகிறார்.

Main

இறுதியாக..

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் - உப்பு, அசைவம், கீரை, அதிக புரத உணவு, புளி - இவற்றை தவிர்ப்பது மிக முக்கியம். உணவு கட்டுப்பாடே சிறுநீரகத்தை பாதுகாக்கும் முதல் மருந்து!

Disclaimer: இந்த கட்டுரை பொதுத் தகவல் மட்டுமே. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவையும் மாற்றுவதற்கு முன் உங்கள் நெடுநாள் மருத்துவரை அல்லது நெப்ராலஜிஸ்டை கண்டிப்பாக கலந்தாலோசிக்கவும்.

Read Next

தமிழ்நாட்டில் HIV தொற்று 0.16% ஆக குறைவு.! 39 ஆண்டுப் போராட்டத்தின் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் தகவல்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 01, 2025 13:21 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Dec 01, 2025 13:21 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content