தமிழ்நாட்டில் HIV தொற்று 0.16% ஆக குறைவு.! 39 ஆண்டுப் போராட்டத்தின் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் தகவல்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பில், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று 2002ல் 1.11% இருந்து 2023–24ல் 0.16% ஆகக் குறைந்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள், நம்பிக்கை மையங்கள், குழந்தைகளுக்கான நிதி உதவிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்ட முழு விவரம்.
  • SHARE
  • FOLLOW
தமிழ்நாட்டில் HIV தொற்று 0.16% ஆக குறைவு.! 39 ஆண்டுப் போராட்டத்தின் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் எச்.ஐ.வி (HIV) தொற்று தாக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதாகவும், 2002ஆம் ஆண்டில் 1.11% ஆக இருந்தது தற்போது 2023–24 நிதியாண்டில் 0.16% ஆக குறைந்துள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தேசிய சராசரியான 0.23%-ஐ விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


முக்கியமான குறிப்புகள்:-


1986ஆம் ஆண்டு முதன் முதலாக சென்னையில் எச்.ஐ.வி நோய் கண்டறியப்பட்டதிலிருந்து 39 ஆண்டுகளாக தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நீண்டகாலப் பணியின் பலனாக இன்று தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

what-is-the-theme-significance-and-history-of-world-AIDS-Day-2023-02

உலக எய்ட்ஸ் தினம் 2024 – மையக்கருத்து

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டின் கருப்பொருள் - “இடையூறுகளைக் கடந்து, எச்.ஐ.வி–எய்ட்ஸ் எதிர்வினைகளை மாற்றுவது.” இந்த கருப்பொருள் 2030க்குள் எய்ட்ஸை முழுமையாக ஒழிக்க உலக நாடுகள் எடுத்துள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: World AIDS Day 2025: உலக எய்ட்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தடுப்பு நடவடிக்கைகள் — புள்ளிவிவரங்களுடன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் செயல்பாடுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன:

  • 2,600 ‘நம்பிக்கை மையங்கள்’

எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன.

  • 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் (ART Centres)

எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை.

  • 172 இணை ART மையங்கள்

மாவட்ட அளவில் தொடர்ச்சியான சிகிச்சை வசதிகள்.

  •  கர்ப்பிணிகளுக்கான கட்டாய பரிசோதனை

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் தாய்–குழந்தை நோய் பரவலைத் தடுக்க மாநிலம் முன்னணியில் உள்ளது.

what-are-the-symptoms-of-hiv-in-men-02

குழந்தைகளுக்கான அரசின் முக்கிய உதவித் திட்டம்

HIV பாதிக்கப்பட்ட மற்றும் அதன் தாக்கத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, மாதாந்திர ரூ.1000 நிதி உதவி வழங்கப்படுகிறது. 7,618 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

விழிப்புணர்வு பிரசாரங்கள் — 2.3 லட்சம் இளைஞர்களை சென்றடைந்தது

இந்த ஆண்டில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 2.30 லட்சம் பேருக்கு நேரடி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. செஞ்சுருள் சங்கங்கள் வழியாக பால்வினை நோய்கள் பற்றிய அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 4 தொற்றுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.!  தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..

புதிய இலக்கு: HIV இல்லா தமிழ்நாடு

HIV பாதிப்பில் உள்ளவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு பாகுபாடின்றி ஆதரவு வழங்கவும், அனைவரிடமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். “புதிய HIV தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது தொடர்பாக மாநிலம் உறுதியேற்றியுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

what-is-world-aids-day-and-who-are-most-at-risk-for-aids-main

இறுதியாக..

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தாக்கம் 0.16% என்ற தேசிய அளவிலும் குறைவான நிலையில் இருப்பது - தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்க, பரிசோதனை சேவைகள், சிகிச்சை அணுகுமுறை விழிப்புணர்வு பிரசாரங்கள் - என்ற நான்கு தளங்களின் கூட்டுச்சாதனையாகும். 2030க்குள் எய்ட்ஸை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் இது முக்கிய மைல்கல்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பகிர்வுக்கானது மட்டுமே. எச்.ஐ.வி குறித்து சந்தேகங்கள் அல்லது அறிகுறிகள் இருந்தால் நெருக்கமான அரசு மருத்துவமனை அல்லது ART மையத்தில் உடனடியாக ஆலோசனை பெறவும்.

Read Next

குளிர்ந்த நீரா..? சூடான நீரா..? – எந்த நீரில் குளிப்பது நல்லது..? முழு விளக்கம் இங்கே..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 01, 2025 12:12 IST

    Published By : Ishvarya Gurumurthy