தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை; அதுவும் இப்படி சாப்பிட்டால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் மயோனஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • SHARE
  • FOLLOW
தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை; அதுவும் இப்படி சாப்பிட்டால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் தெரியுமா?


தெலங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவு பொருட்களில் இந்த மயோனஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மயோனஸ் உடன் மோமோ சாப்பிட்ட பெண் பலியான நிலையில் 15 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் உடல்நல பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றதை அடுத்து தெலங்கானாவில் மயோனஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் மயோனஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசுகளில் மயோனஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சால்மோன்நெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் மயோனஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் மயோனஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சை முட்டை மூலம் தயாரிக்கப்படும் மயோனஸைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல் நலக்கோளாறுகள் என்ன?

பச்சை முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸில் சால்மோனெல்லா பாக்டீரியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எனக்கூறப்படுகிறது. ஜனவரி 2024 இல் ஆன்டிபயாடிக் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, உணவில் பரவும் நோய்க்கிருமியான சால்மோனெல்லா இரைப்பை குடல் அழற்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். இது பொதுவாக பச்சை முட்டைகளை மாசுபடுத்தும் ஒரு வகை பாக்டீரியா ஆகும்.

இதை உட்கொண்டால் குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் தீவிர ஃபுட் பாய்சனுக்கும் வழிவகுக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், சால்மோனெல்லா தொற்று நீரிழப்பு அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில், இரத்த ஓட்டத்தில் தொற்று போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் பச்சை முட்டை மூலம் தயாரிக்கப்படும் மயோனஸை அதிக நேரம் வெளியில் வைத்திருக்க முடியாது. கட்டாயம் குளிர்சாதன பெட்டியில் தான் வைத்திருக்க வேண்டி வரும், சில மணி நேரங்கள் வெளியே வைத்தால் கூட சால்மோனெல்லா அல்லது பிற பாக்டீரியாக்களை அதில் விரைவாக பரவக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

Image Source: Freepik 

Read Next

என்றும் இளமையா இருக்கணுமா? தினமும் காலையில் இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்

Disclaimer

குறிச்சொற்கள்