Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Doctor Verified

பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? மருத்துவர்கள் கூறும் உண்மை!

பகலில் சில நிமிடங்கள் தூங்குவது இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? இதய நிபுணர் விளக்கம். சிறிய தூக்கத்தின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் மருத்துவர் அறிவுறுத்தல்கள் பற்றிய முழுமையான தகவல்.

நம் உடலுக்கு முழு ஓய்வையும் மனஅமைதியையும் அளிக்கும் சிறிய "குட்டித் தூக்கம்" பலரின் தினசரி பழக்கமாக மாறிவிட்டது. ஆனால், இதுவே உண்மையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நொய்டா கைலாஷ் மருத்துவமனை மூத்த இருதய நிபுணர் டாக்டர். அமித் ஹண்டா தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு குட்டித் தூக்கம் உண்மையிலேயே இரத்த அழுத்தத்தை குறைக்குமா?

அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி (American College of Cardiology) வெளியிட்ட ஆய்வின்படி, பகலில் சில நிமிடங்கள் தூங்குவது நம் உடலுக்கு மனஅழுத்த நிவாரணம் மற்றும் ஆற்றல் புதுப்பிப்பு வழங்குகிறது.

அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "பிற்பகல் தூக்கத்தின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 24 மணி நேர சராசரி சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் சுமார் 3 மிமீஹெச்ஜி அளவுக்கு குறைகிறது." அதாவது, 8–10 நிமிடங்கள் கூட குட்டித் தூக்கம் எடுத்தால் நமது உடலில் சிறிய அளவிலாவது இரத்த அழுத்தம் குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Main

இரத்த அழுத்தத்திற்கான குட்டித் தூக்கத்தின் முக்கிய நன்மைகள்

இரத்த அழுத்தத்தை இயற்கையாகக் குறைக்கும்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பகலில் ஒரு சிறிய தூக்கம் நன்மை தரலாம். மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, இதனால் இரத்த அழுத்தம் சராசரியாக 5 மிமீஹெச்ஜி அளவுக்கு குறையும். இது மருந்துகளால் கிடைக்கும் விளைவுகளுக்கு ஒப்பானது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், இதய நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பார்கள். ஆனால், ஒரு சிறிய தூக்கம் இதயத்தின் அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு அபாயத்தை 10% வரை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மனஅழுத்தத்தைக் குறைக்கும் திறன்

தொடர்ச்சியான வேலை மற்றும் அழுத்தமான வாழ்க்கை முறை காரணமாக மனஅழுத்தம் அதிகரிக்கும். ஆனால், பகலில் 10 நிமிடங்கள் தூங்குவதால் மனஅழுத்த ஹார்மோன்கள் குறைந்து உடல் அமைதி பெறுகிறது. இதனால் இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இதய நோயிலிருந்து புற்றுநோய் வரை.. சப்பாத்திக்கள்ளி பழம் தரும் நன்மைகள் – மருத்துவர் மைதிலி விளக்கம்.!

நிபுணர்கள் கூறும் எச்சரிக்கை

"தினசரி குட்டித் தூக்கம் பழக்கமாக மாறக்கூடாது. சில நேரங்களில் இது ஹைபோடென்ஷன் (Low BP) அபாயத்தை அதிகரிக்கலாம்" என்று டாக்டர் அமித் ஹண்டா கூறுகிறார். மேலும், சிலருக்கு பகலில் தூங்குவது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம் என்பதால், ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதை பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.

how to get sleep

முக்கிய குறிப்புகள்

* ஒரு குட்டித் தூக்கம் 8–20 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

* அதிக நேரம் தூங்கினால் தலையடைப்பு, சோர்வு போன்றவை ஏற்படலாம்.

* நீரிழப்பு இல்லாமல் இருக்க நாள் முழுவதும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.

* உயர்ந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள், மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக பழக்கமாய் தூங்கக் கூடாது.

இறுதியாக..

பகலில் சிறிய தூக்கம் உடல் மற்றும் மன நலனுக்கு உதவக்கூடியது. ஆனால், அது மிதமான அளவில் மட்டுமே இருக்க வேண்டும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படலாம், மனஅழுத்தம் குறையலாம், இரத்த அழுத்தம் சீராகும் வாய்ப்பு உண்டு. ஆனால், ஒவ்வொருவரின் உடல் பதில் வேறுபடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுவது மிக அவசியம்.

Disclaimer: இந்த கட்டுரை பொது ஆரோக்கியத் தகவலுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. இரத்த அழுத்தம் அல்லது இதய தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.

Read Next

ஆரோக்கியமற்ற குடலின் 5 ஆரம்ப அறிகுறிகள்.. மருத்துவர் பகிர்ந்துள்ளார்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 14, 2025 07:48 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content