Wed Nov 18, 2026 | 01:28 PM IST

Doctor Verified

அரிசியை விட 8 மடங்கு இரும்பு.! கம்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

கம்பில் இருக்கும் 8 மடங்கு அதிகமான இரும்புச்சத்து, நீரிழிவு கட்டுப்பாடு, எடை குறைப்பு, இதய பாதுகாப்பு உள்ளிட்ட நன்மைகளை மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார். கம்பை எவ்வாறு உணவில் சேர்ப்பது? முழு விவரம் இங்கே!
அரிசியை விட 8 மடங்கு இரும்பு.! கம்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..அரிசியை விட 8 மடங்கு இரும்பு.! கம்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

சிறுதானியங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கம்பு, தமிழர் வாழ்க்கை முறையில் ஆயிரம் ஆண்டுகளாக இடம்பிடித்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலும் கூட கம்பின் மகத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறுகிறார். குறிப்பாக, கம்பில் அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.

செரிமானத்தை மேம்படுத்தி, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

கம்பு நிதானமாக செரிமானம் ஆகும் தானியம். இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாது. மேலும், இரத்த சர்க்கரை திடீரென உயர்வது தவிர்க்கப்படும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார்.

Video Link: https://youtu.be/tNaMTy5Qflo

எடை குறைக்க விரும்புவோருக்கான சிறந்த உணவு

பசியை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் கம்பு, உடல் எடை குறைப்பு டயட்டில், குறிப்பாக சப்பாத்தி / வெள்ளை அரிசி தவிர்ப்போருக்கு, மிகவும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. இது குளூட்டன் இல்லாத தானியம். கம்பு 100% குளூட்டன் ஃப்ரீ தானியம். குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிட சிறந்தது.

அலர்ஜி, வீக்கம் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் பாதுகாப்பு

கம்பில் இயற்கையாகவே காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள், பாலிபினால்கள் - உடலின் வீக்கம், அலர்ஜி, ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸ் ஆகியவற்றை குறைத்து, இதய மற்றும் புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Millet Rice: நாவில் எச்சில் ஊறும் சுவையில் நாட்டுக்கம்பு சாதம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

உணவில் கம்பை சேர்க்கும் எளிய வழிகள்

கம்பினால் செய்யக்கூடிய பல ருசியான உணவுகள்:

  • கம்பு கூழ்
  • கம்பு தோசை
  • கம்பு சாதம்
  • கம்பு அவல்
  • கம்பு பொரியல்
  • கம்பு பிரியாணி

வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள்:

  • கம்பு சோறு
  • புழுங்கல் அரிசி
  • தினை சாதம்
  • கேழ்வரகு அடை
  • வரக தோசை
  • சோளம் தோசை
  • குதிரைவாலி இட்லி

உள்ளிட்ட மாறுபட்ட சிறுதானியங்களை சேர்க்க வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.

 

கம்பின் ஊட்டச்சத்து மதிப்பு

ஒரு கப் (சுமார் 160 கிராம்) கம்பு உணவில்:

ஊட்டச்சத்து

 மதிப்பு

 கலோரி  201
 புரதம்  6 கிராம்
 கொழுப்பு  1.7 கிராம்
 கார்போஹைட்ரேட்  40 கிராம் 
 நார்ச்சத்து  2 கிராம்

இதனுடன் இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், தயமின், நியாசின் உள்ளிட்ட பல தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளன.

இதையும் படிங்க: கம்பு vs கேழ்வரகு.. 45 வயதுக்கு பிறகு எது சிறந்தது.? மருத்துவர் விளக்கம்..

இறுதியாக..

கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது நீரிழிவு, உடல் எடை, செரிமானம், இதய நலம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இயற்கையான தீர்வு என கருதப்படுகிறது. அன்றாட உணவில் கம்பை மிதமாகச் சேர்ப்பது நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தனிப்பட்ட உடல்நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.

Read Next

→ உப்பு எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா.? பலர் தவறு செய்கிறார்கள்.. மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.