Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

நகத்தில் தெரியும் அறிகுறி.. லேஸ்ல விட்றாதீங்க மக்களே.. மருத்துவர் எச்சரிக்கை.!

கொலஜன் குறைபாடு உடலில் எப்படி தெரிய வருகிறது? நகத்தில் கோடுகள், சரும மெலிவு, மூட்டு பலவீனம் உள்ளிட்ட முக்கிய அறிகுறிகள் பற்றியும், மருத்துவர் கார்த்திகேயன் கூறும் காரணங்கள் மற்றும் உணவு பரிந்துரைகள் பற்றியும் முழு தகவல்கள் இங்கே.

உடலில் இருக்கும் மிக முக்கியமான ஒரு புரதச் சத்து - கொலஜன். இது தசைகள், எலும்புகள், சருமம், இரத்தக் குழாய்கள், செரிமான உறுப்புகள் என உடலின் பெரும்பாலான பகுதிகளை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்பு புரதம். இந்த கொலஜன் குறைய தொடங்கினாலே, பல்வேறு உடல் பிரச்சினைகள் மெதுவாக வெளிப்பட தொடங்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

நகத்தில் நீளமான கோடுகள் - முதன்மை அறிகுறி

சிலரது நகத்தில் நீளமாக ஓடும் கோடுகள், தளர்வான, உடைந்து போகும் தன்மை அனைத்தும் கொலஜன் குறைபாடு காரணமாக ஏற்படக் கூடிய அறிகுறிகள் என மருத்துவர் கூறுகிறார்.

Video Link: https://youtu.be/NJB61LR32nE

சருமம் மெலிதாகுதல் - வயதல்ல, சத்து குறைபாடு

சருமம் எளிதில் இருப்பதை விட மெலிதாக தோன்றும், கசங்கியபடி தோற்றம் தரும். இவை கொலஜன் குறைவால் ஏற்படும் முக்கிய வெளிப்பாடுகள்.

கொலஜன் என்ன செய்கிறது?

  • எலும்புகளை வலுவாக்குகிறது
  • சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது
  • மூட்டுகளில் பசை தன்மையை உருவாக்குகிறது
  • தசைகளின் சீரான செயல்பாட்டை பாதுகாக்கிறது

அதனால் கொலஜன் குறையும்போது

  • எலும்பு பலவீனம்
  •  மூட்டு வலி
  • சரும சுருக்கம்
  • செரிமான பிரச்சினைகள்

வரக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: பலவீனமான கால்களை சரிசெய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய 8 கொலாஜன் நிறைந்த சூப்பர்ஃபுட்கள்..

கொலஜன் ஏன் குறைகிறது?

மருத்துவரின் விளக்கம்:

  • அதிக இனிப்பு உணவுகள்
  • புகைப்பிடித்தல்
  • நீண்ட நேரம் வெயிலில் இருப்பது
  • வயது அதிகரித்தல்

இவை அனைத்தும் கொலஜன் உற்பத்தியை வேகமாக குறைக்கும்.

கொலஜனை அதிகரிக்க வேண்டிய உணவுகள்

மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் உணவுகள்:

  • விட்டமின் C நிறைந்த பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள்
  • புரதம் நிறைந்தவை: முட்டை
  • கொலஜன் உற்பத்திக்கு சிறந்த உணவுகள்: சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள்
  •  கொண்டைக்கடலை, ராஜ்மா, காளான்

விட்டமின் C + புரதம் இரண்டும் சேர்ந்தால்தான் கொலஜன் உற்பத்தி அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்

  • புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்தவும்
  • வெயிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும்
  • எலும்புகளை வலுப்படுத்தும் exercise செய்யவும்

இறுதியாக..

கொலஜன் குறைபாடு ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. நகத்தில் தோன்றும் சிறிய மாற்றம் கூட உடல் விரைந்து கொடுத்த எச்சரிக்கை. சரியான உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் மூலம் கொலஜனை இயற்கையாக அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல்கள் மற்றும் நிபுணர்கள் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட முறைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

எண்ணெய் தான் உங்கள் LDL-க்கு பெரிய விதை.! கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த டாக்டர் டிப்ஸ் இதோ..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 06, 2025 15:02 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content