Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Doctor Verified

Kidney Stones: மாத்திரை இல்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்.! மருத்துவர் விளக்கம்..

கிட்னி கல் ஏன் உருவாகிறது? மருந்து இல்லாமல் சிறுநீரக கல்லை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகள் என்ன? தண்ணீர் அளவு, தவிர்க்க வேண்டிய உணவுகள், ஆக்ஸ்லேட் உணவுகள் பற்றிய மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம்.

சிறுநீரக கல் (Kidney Stone) பலரையும் அச்சுறுத்தும் உடல்நல பிரச்னையாகி வருகிறது. ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை இல்லாமலே இதனை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.

Video Link: https://youtu.be/gxeprQysseA

சிறுநீரில் இயற்கையாகவே கல் வெளியேறும்

மருத்துவர் கார்த்திகேயன் கூறுவதுப்படி, ஒவ்வொருவரின் சிறுநீரிலும் மிகச் சிறிய மைக்க்ரான் அளவிலான கற்கள் இயற்கையாகவே வெளியேறிக் கொண்டே இருக்கும். இவை கண்களுக்கு புலப்படாது, எந்த அறிகுறிகளையும் தராது. ஆனால், இந்த கல் மில்லிமீட்டர் அளவுக்கு பெரிதாகும் போது தான் கடும் வலி, சிறுநீரில் எரிச்சல், கீழ்வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கிட்னி கல் உருவாகும் முக்கிய காரணங்கள்

1. சர்க்கரை நோய் & தொற்றுக்கள்

இவை சிறுநீரக செயல்பாட்டை பாதித்து கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

2. மரபு காரணம்

சிலருக்கு மரபணு மூலம் சிறுநீரகத்தில் கல் உருவாகும் சாத்தியம் மிக அதிகம்.

3. தண்ணீர் குறைவாக குடிப்பது

வெயில் காலத்தில் உடலில் வியர்வை அதிகரிக்கும்; ஆனால் தண்ணீர் குறைவாக எடுத்தால், சிறுநீர் அடர்த்தியாகி கல் உருவாகும்.

4. உப்பு & புரதம் அதிகமான உணவுகள்

அதிக உப்பு மற்றும் அதிக புரதம் உடல் சுமையை அதிகரித்து சிறுநீரக கல்லை தூண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பெருங்காயத்தில் இவ்வளவு மகிமை இருக்கா.? மருத்துவர் விளக்கம்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

* உப்பு அதிகம் உள்ள உணவுகள்

* ஆக்ஸ்லேட் நிறைந்த உணவுகள்

இவற்றை குறைத்தாலே கல் உருவாகும் அபாயம் குறையும்.

மருந்து இல்லாமல் கிட்னி கல் தடுக்கும் இயற்கை வழிகள்

* தினமும் போதுமான தண்ணீர். வெயில் காலத்தில் ஒருவர் குறைந்தது 12 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரில் உள்ள கனிமங்கள் குறைந்து, கல் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

* சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும். அதிக சர்க்கரை சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி கல் உருவாக்கும்.

* உப்பு & ஜங்க் உணவுகளை குறைக்கவும். சிறுநீரகத்தின் பணிச்சுமை குறைந்து, இயல்பான செயல்பாடு மேம்படும்.

* ஆக்ஸ்லேட் உணவுகளை கட்டுப்படுத்தவும். இது கிட்னி கல் உருவாகும் அபாயத்தை பெருமளவில் குறைக்கும்.

இறுதியாக..

சிறுநீரக கல் என்பது மருந்து சிகிச்சை தேவைப்படும் ஒரு பிரச்னையாக இருந்தாலும், ஆரம்ப கட்டத்திலேயே உணவுமுறை மற்றும் நீர் உட்கொள்ளலை சரியாகக் கட்டுப்படுத்தினால், அது பெரிதாகாமல் தடுப்பது மிக சுலபம். மருத்துவர் கார்த்திகேயனின் ஆலோசனைப்படி, தினசரி வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களே கிட்னி கல் உருவாகும் அபாயத்தை குறைக்கக்கூடும்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்களின் பொதுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

ஹை யூரிக் ஆசிட் அளவைக் குறைத்து மூட்டு வலியைப் போக்க இந்த 4 பானங்கள் குடிங்க.. மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 24, 2025 21:24 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content