Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Doctor Verified

எண்ணெய் தான் உங்கள் LDL-க்கு பெரிய விதை.! கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த டாக்டர் டிப்ஸ் இதோ..

கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அதை எப்படிச் சரி பார்க்க வேண்டும்? மருத்துவர் தீபா அருளாளன் விளக்கும் உணவு பழக்கங்கள், எண்ணெய் தவறுகள், சிறுதானிய நன்மைகள், நடப்பதின் பயன் உள்ளிட்ட முழு விளக்கம்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. ஆனால் “கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன? எண்ணெய் சாப்பிடக்கூடாதா? எந்த உணவுகள் பாதுகாப்பானது?” போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் பலருக்கும் தெரியாது. இந்த குழப்பத்திற்கு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார் மருத்துவர் தீபா அருளாளன், மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில்.

எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது தவறான நடைமுறை

மருத்துவர் தீபா கூறுவதன்படி:

  • கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A, D, E, K) உடலுக்கு அவசியம்.
  • அதனால் எண்ணெயை முழுமையாக தவிர்ப்பது உடலுக்கு தீங்கு.
  • ஆனால் டீக்கடை, பேக்கரி போன்ற இடங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெய் மிக அபாயகரமானது.
  • இதில் உருவாகும் டிரான்ஸ் கொழுப்பு இரத்த நாளங்களை அடைப்பதற்கும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும் காரணம்.

Video Link: https://youtu.be/KJhh4pSjQzs

கொலஸ்ட்ரால் அளவை எப்படி கண்டறிவது?

லிப்பிட் ப்ரொஃபைல் (Lipid Profile) பரிசோதனையில் மூன்று முக்கிய அளவுகள் பார்க்கப்படுகின்றன:

  • HDL – நல்ல கொலஸ்ட்ரால்
  • LDL – கெட்ட கொலஸ்ட்ரால்
  • Triglycerides – ரத்தத்தில் உள்ள கொழுப்பு சேமிப்பு

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால்:

  • சிறிய வேலை செய்வதற்கே சோர்வு
  • மூச்சுத்திணறல்
  • மார்பு கனத்தல்

போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை வேகமாகக் கரைக்க காலை, மாலை, இரவு இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

சிறுதானியங்கள் – கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இயற்கை மருந்து

மருத்துவர் தீபா பரிந்துரிப்பது:

  • தினை
  • பார்லி
  • ஓட்ஸ்

இவை அனைத்திலும் இருக்கும் பீட்டா-குளுக்கன்:

  • சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவும்
  • ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கும்
  • LDL கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

மேலும் பசலைக் கீரை, சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவை தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டும்.

உடல் பருமனை குறைப்பது அவசியம்

எடை அதிகரித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் தானாக அதிகரிக்கும். தினமும் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது மிகச் சிறந்த exercise. இது:

  • இரத்த நாளங்கள் திறந்திருக்கும்
  • இருதய செயல்பாடு மேம்படும்
  • LDL குறையும்

என்ற மூன்று பெரிய நன்மைகளை தருகிறது.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க:

  • மன அழுத்தம் குறைக்க
  • தினமும் போதுமான தூக்கம்
  • புகைபிடிப்பு, மது — முழுமையாக தவிர்க்க
  • உணவில் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க

பூண்டில் இருக்கும் அலிசின் (Allicin):

  • இரத்த நாளங்களைப் பாதுகாக்கும்
  • இரத்த உறைவை தடுத்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்

என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டது.

இறுதியாக..

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க மருந்துகளை மட்டுமே நம்பாமல், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சி அவசியம். மருத்துவர் தீபா கூறியபடி சிறுதானியங்கள், வீட்டுச்செய் உணவு, நல்ல எண்ணெய், இயற்கை மசாலா பொருட்கள் ஆகியவை உடலை ஆரோக்கியமாகவும் இதயத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிப்பட்ட உடல்நிலை, மருந்து பயன்பாடு போன்றவை மாறுபடக்கூடியதால் எந்தவொரு உணவு மாற்றத்துக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

கிட்சனில் நீங்க மறந்தும் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 06, 2025 13:06 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content