Sat Sep 12, 2026 | 01:47 AM IST

Yeast Infection: இந்த வீட்டு வைத்தியம் மூலம் ஈஸ்ட் தொற்றை சரி செய்யலாம்!

Yeast Infection: பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட் தொற்று மிக இயல்பானது தான். பெண்களின் பிறப்புறுப்பு மிக எளிதாக பாக்டீரியா போன்ற தொற்றுக்களுக்கு இடமளிப்பதற்கான வடிவமைப்பை பெற்றிருக்கிறது அதனால் பெரும்பாலும் எல்லா பெண்களும் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அப்படி ஏற்படும் ஈஸ்ட் தொற்றை இயற்கையாக நம்முடைய வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் சாதாரண ஈஸ்ட் தொற்று பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாதவையாகவே இருக்கின்றன.

ஆனால் இந்த தொற்றுக்கள் அசௌகரியத்தையும் வலியையும் உண்டாக்குகிறது. பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் சிகிச்சை அளிக்கப்படாமல் விடும்போது இது நிலைமையை இன்னும் மோசமாக்கலாம்.

இதையும் படிங்க: மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

ஈஸ்ட் தொற்று சரியாக வீட்டு வைத்தியம்

எப்சம் உப்பு

எப்சம் உப்பு சருமத்தில் உண்டாகும் பூஞ்சை தொற்று, சருமத்தில் உண்டாகும் எரிச்சல் போன்றவற்றைப் போக்கி சருமத்தை இதமாக வைத்திருக்க உதவி செய்யும்.

நீங்கள் குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பை சேர்த்தோ அல்லது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பையோ கலந்து பிறப்புறுப்பு பகுதியைக் கழுவுங்கள். குளிக்கும் நீரிலும் கலந்து குளிக்கச் செய்யலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்ய உதவுகிறது.

க்ரீன் பேக்கை எடுத்து ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர ஈஸ்ட் தொற்று ஏற்பட்ட இடத்தில் இருக்கும் வீ்க்கம் குறைவதோடு தொற்றும் குறைய ஆரம்பிக்கும்.

பெப்பர்மிண்ட் ஆயில்

பெப்பர்மிண்ட் ஆயில் மிகச்சிறந்த ஆன்டி ஃபங்கல் பண்புகள் கொண்டது. இந்த எண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதிக எரிச்சலை உண்டாக்கும். இதனால் இந்த பெப்பர்மிண்ட் ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். அதேபோல பெப்பர்மிண்ட் ஆயிலுடன் சில துளிகள் தண்ணீர் கலந்தும் சருமத்தில் அப்ளை செய்யலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள ஆன்டி ஃபங்கல் பண்புகள் ஈஸ்ட் தொற்றுகளைச் சரிசெய்ய உதவுகிறது. ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்வதன்மூலம் தொற்றால் ஏற்பட்ட எரிச்சல் ஆகியவை குறைந்து சருமத்துக்கு இதமளிக்கும்.

மேல்பூச்சாக கற்றாழை ஜெல்லை அப்ளை செய்வதோடு மட்டுமின்றி அதை ஜூஸாக உள்ளுக்குள்ளும் எடுத்துக் கொள்ளலாம். வெறும் கற்றாழை ஜூஸை மட்டும் குடிக்க முடியாமல் போகும்போது ஒரு கிளாஸ் பழச்சாறுடன் 2 ஸ்பூன் அளவு கற்றாழை சாறைக் கலந்து குடிக்கலாம்.

யோகர்ட்

யோகர்ட்டில் உள்ள ப்ரோ பயோடிக் பண்புகள் பாக்டீரியா, லாக்டோபாசில்லஸ் போன்றவற்றால் ஏற்படும் ஈஸ்ட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது. தினசரி உணவில் சர்க்கரையும் ஃபிளேவர்களும் சேர்க்கப்படாத யோகர்ட்டை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ஈஸ்ட் தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் எரிச்சல் மற்றும் வீக்கமடைந்த சருமத்துக்கு இதமளிக்கக் கூடியது. இது தொற்றுநோயை உண்டாக்கும் ஈஸ்ட் தொற்றை எதிர்த்துப் போராடும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக சருமத்தில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்யலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை அப்ளை செய்து வர மிக வேகமாக ஈஸ்ட் தொற்று குணமடைய ஆரம்பிக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினகர் என்பது ஈஸ்ட் தொற்றுக்களைச் சரிசெய்யும் அதிசய மருந்து என்று கூட சொல்லலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஆப்பிள் சிடார் வினிகரை சில துளிகள் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். இதன்மூலம் பிறப்புறுப்பு பகுதியின் pH சமநிலையில் இருக்கும். ஈஸ்ட் தொற்றுக்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க இது உதவி செய்யும்.

இதையும் படிங்க: PCOS Diet : PCOS பிரச்சனையைக் குறைக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்

ஆப்பிள் சிடார் வினிகர் சிறிதளவு எடுத்து அதை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறப்புறுப்பைக் கழுவி வர மிக வேகமாக ஈஸ்ட் தொற்று சரியாகும்.

Image Source: FreePik

Read Next

World Menopause Day: மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க இந்த 5 குறிப்புகளை பின்பற்றுங்கள்!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content