Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Expert

இதய பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு காய்கறி போதும்.. எப்போது, எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கோங்க

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இதயத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் பெரிதும் நன்மை பயக்கும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் அடங்குகிறது. குறிப்பாக, இதய பாதிப்புகள் தொடர்பான பிரச்சனைகள் இன்று பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. இதய ஆரோக்கியத்தியப் பாதிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இதில் உணவுமுறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதயம் தொடர்பான பிரச்சனையைக் குறைப்பதற்கு அன்றாட உணவில் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க வேண்டும். அதன் படி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், இதயத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, பீட்ரூட் உட்கொள்வது எவ்வாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வேதா ஷா அவர்கள் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த காய்கறி

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, இந்த ஒரு காய்கறி தமனிகளை சுத்தப்படுத்தவும் இதய அடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். அது பீட்ரூட் ஆகும்.

இதில் காணப்படக்கூடிய இயற்கை நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்சைடாக மாறி, உடலில் சிறந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இவை தளர்வான தமனிகள், குறைவான பிளேக்கிற்கு காரணமாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஜூஸ் மட்டும் போதும்.. சருமம் ஜொலிக்கும்.! கல்லீரல் ஆரோக்கியமாகும்.! மருத்துவர் பரிந்துரை..

பீட்ரூட் ஏன் உங்கள் இதயத்திற்கு உதவுகிறது?

பீட்ரூட் உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் பீட்ரூட் இயற்கையாகவே இயற்கையான நைட்ரேட்டுகளால் நிறைந்ததாகும். இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக (NO) மாறுகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானதாகும்.

உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்ன செய்கிறது?

இதய ஆரோக்கியத்தில் நைட்ரிக் ஆக்சைடு பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. அவை என்னென்ன என்பதை நிபுணர் விளக்கியுள்ளார்.

  • இரத்த நாளங்களை தளர்த்துகிறது
  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
  • தமனிகளில் அழுத்தத்தைக் குறைக்கிறது
  • பிளேக் படிவதைத் தடுக்கிறது
  • சுத்தமான, ஆரோக்கியமான தமனிகள்

தினமும் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்றாலும், அதை சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.

  • 1 சிறிய பீட்ரூட் அல்லது
  • 1/2 கிளாஸ் பீட்ரூட்-கேரட்-இஞ்சி சாறு அல்லது
  • சாலட்டில் வேகவைத்த பீட்ரூட் க்யூப்ஸ்

இது போன்ற வழிகளில் பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம்.

எடுத்துக் கொள்வதற்கான சரியான நேரம்

நிபுணர் பீட்ரூட்டை எடுத்துக் கொள்வதற்கான சிறந்த நேரம் குறித்து விவரித்துள்ளார்.

காலை அல்லது உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு எடுத்துக் கொள்வது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா..? இந்த 5 காய்கறிகள் தினமும் சாப்பிடுங்க – நிபுணர் அறிவுரை

பீட்ரூட்டை யார் தவிர்க்க வேண்டும்?

  • சிறுநீரக கற்கள் பிரச்சனை கொண்டவர்கள் (ஆக்சலேட்டுகள்)
  • மிகக் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • பூஞ்சை தொற்று உள்ளவர்கள் (அதிக சர்க்கரை)
  • நீரிழிவு நோயாளிகள்

View this post on Instagram

A post shared by Shweta Shah (@shweta_shah_nutritionist)

உடலை சுத்தம் செய்யும் பீட்ரூட் கலவை

இதயத்தை சுத்தம் செய்யும் எளிய பீட்ரூட் கலவை ரெசிபி குறித்த தகவலை நிபுணர் பகிர்ந்துள்ளார்.

  • பீட்ரூட் - 1/2
  • நெல்லிக்காய் - 1
  • கேரட் - 1/2
  • இஞ்சி - 1 அங்குலம்

இந்தக் கலவையை வாரத்திற்கு 3-4 முறை குடிக்கலாம்.

இந்த சிறிய பழக்கங்களின் உதவியுடன் இதயம் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்யலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாறு குடிப்பது பாதுகாப்பானதா? நிபுணர் விளக்கம் இதோ!

Image Source: Freepik

Read Next

குறைந்த நைட்ரிக் ஆக்ஸைடு இதய ஆபத்தை அதிகரிக்கும்.. நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 18, 2025 20:48 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content