Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Platelet Count Increase Tips: உடலில் பிளேட்லெட்டுகள் இயற்கையாக அதிகரிப்பதற்கான வீட்டு வைத்தியம்

Natural Remedies For Platelet Count: இயற்கையாகவே உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் அதிகப்படியான பாதிப்பு இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதாகும். மேலும், இன்னும் சில காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படலாம். அதிக இரத்தப்போக்கு மற்றும் இரத்தம் உறைதல் ஏற்படுவதைத் தடுக்க பிளேட்லெட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவது த்ரோம்போசைட்டோபீனியா என அழைக்கப்படுகிறது. இவை உடலில் பல்வேறு கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இப்போது சில எளிய மற்றும் இயற்கை வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இயற்கை முறையில் பிளேட்லெட்டை அதிகரிக்க வீட்டு வைத்தியம்

சில இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கோதுமை புல்

கோதுமைப் புல்லில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குளோரோபில் நிறைந்துள்ளன. இவை இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இந்த கோதுமைப் புல்லில் இருந்து சாற்றை எடுத்துத் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், இந்த கோதுமை புல்லை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!

பப்பாளி இலைச்சாறு

உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பப்பாளி இலைச் சாறு ஒரு இயற்கைத் தீர்வாக அமைகிறது. இவை பிளேட்லெட்டுகளின் உற்பத்தியைத் தூண்டும் கலவையைக் கொண்டிருக்கிறது. பப்பாளி இலைகளை நசுக்கி எடுக்கப்படும் சாற்றை ஒரு நாளைக்கு இரு முறை என ஒரு வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நீரேற்றம் செய்தல்

சீரான இரத்த ஓட்டத்திற்கு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நீரேற்றம் முக்கியமானதாகும். இந்த நீரேற்றத்தைப் பராமரிக்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். அதன் படி குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்

ஆலோவேரா

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழை, அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பிளேட்லெட்டுகளின் அளவை அதிகரிக்க உதவுகிறது. புதிய கற்றாழை இலைகளிலிருந்து ஜெல்லை பிரித்துொரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் இரத்த பிளேட்லெட்டுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

வைட்டமின் சி சத்து

வைட்டமின் சி சத்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கலாம். இவை பிளேட்லெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே வைட்டமின் சி சார்ந்த ஸ்ட்ராபெர்ரிகள், சிட்ரஸ் பழங்கள், கிவி, பெல் பெப்பர்ஸ் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் வைட்டமின் சி சத்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: முத்து போன்ற வெண்மையான பற்களுக்காக இயற்கையான பல் பொடி

பூசணி

பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளுள் பூசணியும் ஒன்று. இது உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பூசணியைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலில் பிளேட்லெட்டுகள் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறலாம்.

இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். த்ரோம்போசைட்டுகளின் கடுமையான நிகழ்வு ஏற்படுவதற்கு முன் அதனைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: Heartburn Natural Remedies: நெஞ்செரிச்சலை குறைக்கும் இயற்கையான வழிகள்

Image Source: Freepik

Read Next

Newborn Jaundice Treatment: பிறந்த குழந்தைகளின் மஞ்சள் காமாலைக்கான இயற்கை சிகிச்சை முறைகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content