Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Doctor Verified

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள் – நாள் முழுவதும் கவனம் அதிகரித்து உற்பத்தித்திறன் இரட்டிப்பாகும்!

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 5 எளிய பழக்கங்கள் உங்கள் கவனம், நினைவாற்றல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். மனநல மருத்துவர் விளக்கும் அறிவியல் ஆதாரங்களுடன் முழு விளக்கம்.

வேலை, படிப்பு, தொழில் – எதுவாக இருந்தாலும், நாள் முழுவதும் கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும் என்றால், அதற்கான அடித்தளம் காலை நேரத்தில் தான் உருவாகிறது. ஆரோக்கியமான, குறுகிய காலை பழக்கங்கள் மூளையின் நரம்பியல் பாதைகளை (Neural Pathways) வலுப்படுத்தும். டோபமைன், செரோடோனின் போன்ற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். கவனம், நினைவாற்றல் மற்றும் மன வலிமையை உயர்த்தும். இந்த விஷயத்தில் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கிறார், ஹைதராபாத் யசோதா மருத்துவமனை மூத்த மனநல மருத்துவர், டாக்டர் நவீன் குமார் டகுடு.

நாள் முழுவதும் கவனம் & உற்பத்தித்திறனை உயர்த்தும் 5 காலை பழக்கங்கள்

1. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்

எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது – தண்ணீர் குடிப்பது. 500 மில்லி வெதுவெதுப்பான நீரில், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இது இரவு முழுவதும் ஏற்பட்ட நீரிழப்பை சரிசெய்யும், வளர்சிதை மாற்றத்தை தூண்டும், மூளையை மந்தநிலையிலிருந்து சுறுசுறுப்பான நிலைக்கு மாற்றும் Journal of Nutrition ஆய்வின் படி, இரவு நேர நீரிழப்பு, முடிவெடுக்கும் திறனை 20% வரை குறைக்கும் என டாக்டர் நவீன் குமார் டகுடு கூறுகிறார்.

2. வெயிலில் அமர்ந்து லேசான நீட்சி & சுவாசப் பயிற்சி

காலை 10 நிமிடங்கள் வெயிலில் அமருங்கள் அல்லது லேசான நீட்சி பயிற்சி செய்யுங்கள். இயற்கை ஒளி, உடலின் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சரிசெய்யும், செரோடோனின் அளவை அதிகரிக்கும், மெலடோனின் அளவை குறைக்கும்.

American Journal of Psychiatry ஆய்வின் படி, காலை சூரிய ஒளி, மதிய நேர சோர்வை 30% வரை குறைக்கிறது. வெயிலில் அமர்ந்து சுவாசப் பயிற்சி செய்வது நல்லது. 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 4 விநாடிகள் தடுக்கவும், 6 விநாடிகள் மூச்சை வெளியிடவும். இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைத்து, கவனத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: நைட் தூங்கலனாலும் காலை உணவு ரொம்ப முக்கியம்.. இதற்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க.!

3. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை தவிர்க்காதீர்கள்

காலை உணவு – மூளைக்கான எரிபொருள். சிறந்த தேர்வுகள் - ஓட்ஸ், பெர்ரி வகைகள், பாதாம் / வால்நட். இவை இரத்த சர்க்கரை நிலை சீராகும், மதிய சோர்வு தவிர்க்கப்படும். வால்நட்ஸில் உள்ள Omega-3 Fatty Acids - நினைவாற்றல், பல்பணி திறன் (Multitasking), கவனம் - அனைத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

4. 2 நிமிட குளியல்

PLOS One ஆய்வின் படி, குளியல் - நோர்பைன்ப்ரைன் ஹார்மோனை வெளியிடுகிறது, காஃபின் இல்லாமலே மூளையை விழிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இது இயற்கையான “Brain Booster”.

இறுதியாக..

உற்பத்தித்திறன் என்பது அதிக நேரம் வேலை செய்வது அல்ல, உங்கள் மனதை புத்திசாலித்தனமாகத் தயார்படுத்துவது. இந்த 5 பழக்கங்களை 21 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், அவை உங்கள் வாழ்க்கை முறையாக மாறும். சிறிய காலை மாற்றங்கள் – நாள் முழுவதும் பெரிய தாக்கம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நல மற்றும் உற்பத்தித்திறன் விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்களுக்கு மனநலப் பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள் அல்லது நீண்டகால சோர்வு இருந்தால், மருத்துவர் அல்லது மனநல நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

தைராய்டை சைலன்டாக வரவைக்கும் இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 15, 2025 22:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content