Sat Sep 12, 2026 | 04:00 AM IST

Doctor Verified

Diabetes Prevention Tips: நீரிழிவு நோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியவை

Prevention And Management Of Diabetes: இரத்தத்தில் உள்ள சர்க்கரை என்ற குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது உணவில் இருந்து குளுக்கோஸை நமது உயிரணுக்களில் பெற்று, பின் ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

சில நேரங்களில் நம் உடல் போதுமான அளவிலான இன்சுலின் அல்லது எந்த இன்சுலினையும் உற்பத்தி செய்யாது. இந்த சமயத்தில் குளுக்கோஸ் இரத்தத்தில் தங்கி, உயிரணுக்களை சென்றடையாமல் சர்க்கரை அளவை அதிகமாக்குகிறது. இது உயர் இரத்த சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவைக் கவனித்துக் கொள்வது அவசியம். இப்போது நீரிழிவு நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

நீரிழிவு நோய் மாற்றங்கள்

டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்க முதன்மையான படிகளில் ஒன்றாக வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். இது நோயின் பொதுவான வடிவமாகும். குறிப்பாக, ஒருவர் அதிக உடல் எடை அல்லது அதிகளவிலான கொழுப்பு கொண்டிருக்கும் போது அல்லது நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு காரணமாக ஏற்படும் மரபணு கோளாறு போன்றவை டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த நீரிழிவு நோய் தடுப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ப்ரீடயாபெட்டிஸ், அல்லது முன் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அதாவது நீரிழிவு நோயறிதலின் வாசலை எட்டாத உயர் இரத்த சர்க்கரை நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் இன்டர்னல் மெடிசின் டாக்டர் ஆர்.வி.எஸ் பல்வா அவர்கள் பகிர்ந்துள்ளார். இந்த நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்துவதற்கான மாற்றங்கள் நரம்பு, சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்க உதவலாம்.

நீரிழிவு நோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான குறிப்புகள்

இதில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில வழிகளைக் காணலாம்.

ஆரோக்கியமான தாவர உணவுகள்

அன்றாட உணவில் சேர்க்கப்படும் தாதுக்கள், வைட்டமின்கள், மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை தாவரங்களின் சிறந்த மூலமாகும். கார்போஹைட்ரேட்டுகளில் மாவுச்சத்து, சர்க்கரை போன்றை நிறைந்திருக்கும். இவை உடலுக்குத் தேவையான ஆற்றல் ஆதாரங்களாக உள்ளன. மேலும் தாவர உணவுகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Management: சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட வேண்டும்!

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கூடுதலாக உடல் எடை இழப்பை ஊக்குவிப்பதுடன், நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு ஆரோக்கியமான, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

  • இலை கீரைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
  • பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
  • மிளகுத்தூள், தக்காளி மற்றும் மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள்
  • முழு தானியங்கள் அதாவது முழு கோதுமை நிறைந்த ரொட்டி அல்லது பாஸ்தா, முழு தானிய அரிசி, குயினோவா, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மோசமான கார்போஹைட்ரேட்டுகள் அதாவது குறைந்த நார்ச்சத்து அல்லது ஊட்டச்சத்துக்கள் கொண்ட அதிக சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக வெள்ளை மாவு பாஸ்தா, பேஸ்ட்ரி, வெள்ளை ரொட்டி, பழச்சாறுகள் போன்றவை ஆகும்.

கூடுதல் எடையை இழப்பது

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கலாம். ஆய்வு ஒன்றில் உடல் எடையில் சுமார் 7% இழந்த பின், நீரிழிவு நோய் அபாயம் கிட்டத்தட்ட 60% குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.

தற்போதைய உடல் எடையின் அடிப்படையில், எடை இழப்பு திட்டத்தை அமைக்கவும். குறுகிய கால இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

உடல் செயல்பாட்டில் ஈடுபடுதல்

வழக்கமான உடல் செயல்பாடுகளில் பல்வேறு நன்மைகள் உள்ளது. அந்தவகையில் உடற்பயிற்சி செய்வது உதவும். உடற்பயிற்சி செய்வதன் மூலம்,

  • உடல் எடையைக் குறைக்கலாம்
  • இரத்த சர்க்கரையைக் குறைக்கலாம்
  • இன்சுலினுக்கு உணர்திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை சாதாரண வரம்பிற்கு வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ளுதல்

உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Almond milk Benefits: சர்க்கரை நோயாளிகள் பாதாம் பால் குடிக்கலாமா? 

ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளுதல்

கொழுப்பு நிறைந்த உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே, இதனை எப்போதும் அளவோடு சாப்பிட வேண்டும். இதன் மூலமே உடல் எடையைக் குறைக்கவும், நிர்வகிக்கவும் முடியும்.

கூடுதலாக, உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவில் நிறைவுறா கொழுப்புகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை இரத்த கொழுப்பின் அளவு, நல்ல இதயம் மற்றும் வாஸ்குலார் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் படி,

  • நட்ஸ் மற்றும் விதைகள்
  • சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த மீன்கள்
  • சூரியகாந்தி, ஆலிவ், பருத்தி விதை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

Image Source: Freepik

Read Next

Diabetes Fruits: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content