Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

கருப்பு ஏலக்காய் தண்ணீர் ஒன்று போதும்.. பல தொண்டை பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு கிடைக்கும்

கருப்பு ஏலக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த சிறந்த மசாலா ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கருப்பு ஏலக்காய் நீரை குடிப்பது தொண்டை பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. தொண்டை ஆரோக்கியத்தில் கருப்பு ஏலக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.

நம் இந்திய சமையலறையில் பயன்படுத்தக்கூடிய மிகவும் பிரபலமான மசாலாக்களில் ஒன்றாக கருப்பு ஏலக்காய் அமைகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மசாலா ஆகும். இது பெரும்பாலான இந்திய உணவுகளில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு ஏலக்காயில் நல்ல அளவிலான ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. அவை தொண்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பெரும்பாலான நேரங்களில் மக்கள் தொண்டை புண், வலி மற்றும் தொற்றுகள் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கருப்பு ஏலக்காய் நீர் பல தொண்டைப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் ஒரு சிறந்த மசாலா ஆகும். அவ்வாறு, யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரும், மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜெய்ப்பூரின் பாபுநகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் கருப்பு ஏலக்காய் நீர் தொண்டைக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cardamom: இவர்கள் எல்லாம் மறந்தும் ஏலக்காய் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

தொண்டைக்கு கருப்பு ஏலக்காய் நீர் நன்மைகள்

மருத்துவர் கிரண் குப்தா அவர்களின் கூற்றுப்படி, கருப்பு ஏலக்காய் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ள மசாலா ஆகும். அதன் நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களைத் தடுக்கவும், தொண்டை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.

தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் அளிக்க

கருப்பு ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், கருப்பு ஏலக்காய் நீர் குடிப்பது, தொண்டை புண் வீக்கம் மற்றும் எரிச்சலைப் போக்க உதவுகிறது. மேலும் இது தொண்டைப் புண்ணையும் போக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள், தொண்டை வலியைக் குறைக்கவும் உதவுகிறது

தொண்டை தொற்றுக்களை நீக்குவதற்கு

சில சமயங்களில் மக்களுக்கு தொண்டை தொற்று ஏற்படுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும், கருப்பு ஏலக்காய் நீரை மிகவும் குடிப்பது நன்மை பயக்கும். கருப்பு ஏலக்காய் நீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வது தொண்டை தொற்றுகளைப் போக்கவும், வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க

கருப்பு ஏலக்காய் நீரில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே, அதன் நீரைக் குடிப்பது இருமலைக் குறைக்கவும், சளியைப் போக்கவும், தொண்டையை நச்சு நீக்கவும், சளியை நீக்கி காற்றுப்பாதைகளை சுத்தம் செய்யவும், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் கருப்பு ஏலக்காய் தரும் நன்மைகள் இதோ! ஆனா இவங்க சாப்பிடக்கூடாது.. மருத்துவர் சொன்னது

தொண்டை பிரச்சனைகளால் ஏற்படும் வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்க

சில நேரங்களில், தொண்டை தொற்று அல்லது நீடித்த வறட்சி காரணமாக மக்கள் துர்நாற்றத்தை அனுபவிக்க நேரிடலாம். இந்நிலையில், கருப்பு மிளகின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் மற்றும் தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி, துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது.

முடிவுரை

மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு ஏலக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கருப்பு ஏலக்காய் நீரை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இவை பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெறவும், தொண்டை தொற்றுகளை நீக்கும், சளி அல்லது இருமலைக் குறைக்கவும், தொண்டைப் பிரச்சனைகளால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், சுவாசப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.

எனினும், இதன் இயல்பு சூடாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, குறைந்த அளவிலேயே இதை உட்கொள்ள வேண்டும். அதேசமயம், ஒவ்வாமை உள்ள பெண்கள், கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள் போன்றோர் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் புதிய பொருள்களை எடுத்துக் கொள்ளும் முன்பாக, நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Cardamom Water: உடல் கழிவு நீங்கி எடை சரசரவென குறைய காலை, இரவு இதை குடிக்கவும்!

Image Source:Freepik

Read Next

மூளை முதல் இதயம் வரை வலிமை தரும் வஞ்சிரம் மீன்.! ஆயுர்வேத மருத்துவர் மைதிலி விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 18, 2025 21:30 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content