Sat Sep 12, 2026 | 01:00 AM IST

Doctor Verified

எகிறும் சுகர் லெவலைக் குறைக்க உங்க டயட்லாம் மாற்ற வேணாம்.. இந்த ஒரு பழக்கத்தை மட்டும் பின்பற்றுங்க

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உணவுமுறைகளை மட்டும் மாற்றத் தேவையில்லை. இதில் இரத்த சர்க்கரையைக் குறைப்பதற்கு எந்தெந்த பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இன்றைய காலத்தில் பலருக்கும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை பார்த்திருப்போம். அதாவது, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உணவுத் தேர்வுகள், மன அழுத்தம், நோய், மருந்துகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல காரணிகளால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

இவ்வாறு, இரத்த சர்க்கரை அளவின் இயல்பான உயர்வானது உடலை விழித்தெழுவதற்குத் தயார்படுத்தும் ஹார்மோன் மாற்றங்களால் இத்தகைய நிகழ்வு தூண்டப்படுகிறது. உண்மையில், இன்றைய உடனடித் தீர்வுகள், துணை மருந்துகள் மற்றும் அதிசய மாத்திரைகள் நிறைந்த உலகில், எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சுகாதாரத் தீர்வு பெரும்பாலும் உதவுகின்றன. இதில் பெரும்பாலானோர் உணவுமுறையை மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றனர். எனினும், சில பழக்கங்களின் மூலம் தங்களது அதிகளவு இரத்த சர்க்கரையைக் கையாளலாம்.

இதில் உணவுமுறையை மாற்றாமல், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்க வழக்கம் குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மருத்துவரின் கருத்து

மருத்துவர் தனது பதிவில் கூறியதன் படி, “உங்கள் உணவை மாற்றாமல் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் வாழ்க்கை முறைப் பழக்கம்” என்று கூறினார்.

மேலும் அவர், இந்த எளிய பழக்கத்தை நீங்கள் தவறாமல் கடைப்பிடிக்கிறீர்களா என்ற கேள்வியும் எடுத்துரைக்கிறார்.

இந்நிலையில், அவர் உங்கள் உணவை மாற்றாமல் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் வாழ்க்கை முறைப் பழக்கம் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

image

Dietitian-shares-4-habits-to-reverse-pre-diabetes-effectively-Main

வாழ்க்கை முறைப் பழக்கம்

மருத்துவர் தனது பதிவில் கூறியதாவது, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த கடுமையான உணவுப் பழக்கங்கள் தேவை என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு எளிய பழக்கம், உணவு மாற்றங்களைப் போலவே கிட்டத்தட்ட அதே அளவு திறம்பட குளுக்கோஸைக் குறைக்க முடியும் என குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் மறந்தும் எடுத்துக் கொள்ளக்கூடாத 3 வைட்டமின்கள் இதோ.. மருத்துவர் தரும் விளக்கம் 

இந்த பழக்கம் எந்தெந்த பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு பலனளிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். அதன் படி,

  • நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை
  • வகை 2 நீரிழிவு நோய்
  • கொழுப்பு கல்லீரல்
  • இன்சுலின் எதிர்ப்பு
  • உடல் எடை அதிகரிப்பு
  • தொப்பை கொழுப்பு
  • சர்க்கரை மீதான ஆசை

இவற்றைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர் கூறிய எளிய பழக்கத்தைப் பின்பற்றலாம்.

இரத்த சர்க்கரையைக் குறைக்கும் பழக்கம்

“சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பது” பழக்கத்தை உடலில் இரத்த சர்க்கையைக் குறைக்கலாம். ஆம் - வெறும் நடைப்பயிற்சிதான் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இது ஏன் வேலை செய்கிறது?

உணவு உட்கொண்ட பிறகு வெறும் 10 நிமிடங்கள் நடப்பது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் காணலாம்.

  • கால் தசைகள் ஒரு கடற்பாசி போல செயல்படுகின்றன.
  • அவை அசையும்போது, அவை குளுக்கோஸை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து நேரடியாக வெளியே இழுக்கின்றன.
  • இரத்தத்தில் குளுக்கோஸ் குறைவாக இருந்தால், இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும்.
  • இன்சுலின் குறைவாக இருந்தால், கல்லீரலுக்கு அனுப்பப்படும் கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு முக்கியமானது.

இது எதற்கு வழிவகுக்கிறது?

  • குறைவான இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள்
  • குறைந்த இன்சுலின் அளவுகள்
  • கல்லீரலில் கொழுப்பு சேமிப்பு குறைதல்
  • குறைவான தொப்பை கொழுப்பு
  • குறைவான சர்க்கரை குறைவு நிலைகள்
  • அதிக நிலையான ஆற்றல்

இது போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற உதவுகிறது.

image

how-to-prevent-type-2-diabetes-in-young-age-main-1763110479226.jpg

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

சிறந்த அம்சங்கள்

- உங்களுக்கு வேகம் தேவையில்லை

- உங்களுக்கு படி இலக்குகள் தேவையில்லை

- உங்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை

- உங்கள் வீட்டிற்குள் நடப்பது கூட பலனளிக்கும்.

இது ஒரு எளிய பழக்கமாகக் கருதப்படுகிறது. இதில் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லை மற்றும் உடற்பயிற்சிகள் இல்லை. அதன் படி, சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடந்தால் போதும், தசைகள் உங்கள் சர்க்கரையை இயற்கையாகவே குறைக்கும் என மருத்துவர் பகிர்ந்துள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் இருக்கறவங்க இந்த 3 பழக்கங்களைக் கட்டாயம் தவிர்க்கணும்.. அதுக்கு பதிலா நீங்க செய்ய வேண்டியவை

Image Source: Freepik

Read Next

நீரிழிவு நோயில் சரியான நேரத்தில் சாப்பிடுவது ஏன் அவசியம்? – நிபுணர் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 19, 2025 17:31 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content