Doctor Verified

சுகர் இருக்கறவங்க இந்த 3 பழக்கங்களைக் கட்டாயம் தவிர்க்கணும்.. அதுக்கு பதிலா நீங்க செய்ய வேண்டியவை

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க விரும்புபவர்கள், சில பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். இதில் உயர் இரத்த சர்க்கரை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்கள் உள்ளன. இதில் அதிக இரத்த சர்க்கரை கொண்டிருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சுகர் இருக்கறவங்க இந்த 3 பழக்கங்களைக் கட்டாயம் தவிர்க்கணும்.. அதுக்கு பதிலா நீங்க செய்ய வேண்டியவை

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய மற்றும் இன்னும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் பலரும் பார்த்து வருகிறோம். WHO அறிக்கையின் படி, தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 77 மில்லியன் கணக்கிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


இது தவிர, இன்னும் அதிக அளவிலான மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது வாழ்க்கை முறை தொடர்பான மருத்துவ நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதே ஆகும். எனினும், வாழ்க்கை மற்றும் உணவுமுறைகளை மாற்றுவதன் மூலம், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். உண்மையில், பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் சில அடிப்படை தவறுகளை மீண்டும் செய்கிறார்கள். இவை இரத்த சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

இதில் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுப்பதற்கு அன்றாட வாழ்வில் தடுக்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் குறித்து தி கடம்பா ட்ரீ ஆயுர்வேத நீரிழிவு பராமரிப்பு மருத்துவரான நீல் சவாலியா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், இந்த பழக்கங்களுக்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

தவிர்க்க வேண்டிய இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் பழக்கங்கள்

மருத்துவர் தனது பதிவில் கூறியதாவது, “உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இந்த 3 பழக்கங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் சர்க்கரையின் அளவை அமைதியாக உயர்த்தும்”. நல்ல செய்தியாக சிறிய, எளிய மாற்றங்கள் உங்கள் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை முற்றிலும் மாற்றும் எனக் குறிப்பிடுகிறார்.

இதற்கு, சமச்சீரான உணவு, இரவு உணவு மற்றும் கவனத்துடன் இயக்கம் போன்றவற்றுடன் தொடங்குங்கள் - உங்கள் உடல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் எனக் கூறினார்.

 

பழக்கம் 1 - உணவைத் தவிர்ப்பது / நீடித்த உண்ணாவிரத இடைவெளி

உணவைத் தவிர்ப்பது அல்லது நீண்ட நேர இடைவெளியில் உணவு சாப்பிடாமல் இருப்பது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: எகிறும் சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்க இந்த சிம்பிள் ட்ரிங்க் குடிங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

இது ஏன் தீங்கு விளைவிக்கும்:

- உணவைத் தவிர்ப்பது கார்டிசோலில் ஈடுசெய்யும் உயர்வைத் தூண்டுகிறது. இவை கல்லீரல் குளுக்கோஸ் வெளியீட்டை அதிகரிக்கிறது.

- குளுக்கோனோஜெனீசிஸ் மற்றும் கிளைகோஜெனோலிசிஸ் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியிட கல்லீரலைத் தூண்டுகிறது.

- உணவைத் தவிர்க்கும் போது அதிகப்படியான பசி ஏற்படுகிறது. மேலும் இது அடுத்த உணவில் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. இது உணவுக்குப் பின் கூர்மையான குளுக்கோஸ் ஸ்பைக்கை ஏற்படுத்துகிறது.

பழக்கம் 2 - தாமதமான இரவு உணவு

இரவு உணவைத் தாமதமாக எடுத்துக் கொள்வதும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

இது ஏன் தீங்கு விளைவிக்கும்:

- உடலின் இன்சுலின் உணர்திறன் இரவில் மிகக் குறைவாக இருக்கும். இதனால், குளுக்கோஸ் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

- இவை இரைப்பை காலியாக்குவதை தாமதப்படுத்துகிறது மற்றும் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கிறது. மேலும் இது கிளைசெமிக் கட்டுப்பாட்டை மோசமாக்குகிறது.

- தாமதமான இரவு உணவு உட்கொள்வது ஆழ்ந்த தூக்கத்தில் குறுக்கிடுகிறது. இவை அடுத்த நாள் இன்சுலின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

பழக்கம் 3 - சர்க்கரை பானங்கள் & சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

அதிகப்படியான சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இது ஏன் தீங்கு விளைவிக்கும்:

- இவை விரைவான குளுக்கோஸ் உறிஞ்சுதலை ஏற்படுத்துகிறது மற்றும் இன்சுலின் பதிலைக் குறைக்கிறது.

- இது கல்லீரல் கொழுப்பு திரட்சியை ஊக்குவிக்கிறது மற்றும் காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்குகிறது.

- அடிக்கடி கிளைசெமிக் ஏற்ற இறக்கங்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் பீட்டா செல் திரிபு அதிகரிக்கும்.

image

Dietitian-shares-4-habits-to-reverse-pre-diabetes-effectively-Main

View this post on Instagram

A post shared by The Kadamba Tree | Ayurvedic Diabetes Care | Dr Neal Savaliya (@thekadambatree)

மாற்றாக செய்ய வேண்டியவை

இந்த பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ, இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

- ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கும் ஒரு முறை சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.

- இரவு உணவை (இரவு 8 மணிக்கு முன்) சீக்கிரமாக சாப்பிடலாம்.

- ஒவ்வொரு உணவிலும் புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்க்க வேண்டும்.

- இனிப்பு பானங்களை தண்ணீர் அல்லது மூலிகை கஷாயங்களுடன் மாற்றலாம்.

- குளுக்கோஸ் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு உணவிற்கும் பிறகு 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இந்த பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் உடலில் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கும் புளிப்பு ரொட்டி.. நிபுணரின் விளக்கம்

Image Source: Freepik

Read Next

எகிறும் சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்க இந்த சிம்பிள் ட்ரிங்க் குடிங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 12, 2025 12:15 IST

    Published By : கௌதமி சுப்ரமணி