Sat Sep 12, 2026 | 12:14 AM IST

Doctor Verified

பக்கோடா, பானி பூரிக்கு No சொல்லுங்க.. அதுக்கு பதில் இதை சாப்பிடுங்க..

உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் தூக்கப் பிரச்னைகளைத் தவிர்க்க, மாலை நேரத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சிற்றுண்டிகள் குறித்து மருத்துவர் விளக்குகிறார்.

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபட முயற்சிக்கிறார்கள். ஆனால் பணி சூழல், நேர பற்றாக்குறை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பலரால் தொடர்ந்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்ற முடியாமல் போகிறது.

மாலை நேர ஸ்நாக்ஸ்தான் பெரிய பிரச்னை

உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமே பல உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விற்கப்படும் ஜங்க் ஃபுட்கள் – பக்கோடா, பானி பூரி, சமோசா போன்றவை இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இவ்வாறு அடிக்கடி ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, செரிமானக் கோளாறு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

“6 மணிக்குப் பிறகு இதை சாப்பிடாதீங்க” – மருத்துவர் எச்சரிக்கை

இந்த நிலையில், பிரபல மருத்துவர் பால் மாணிக்கம், மாலை 6 மணிக்கு பிறகு எந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும், எதை சாப்பிடலாம் என்பதைக் குறித்து முக்கிய ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். மாலை நேர சிற்றுண்டிகள் தான் உடல் எடையையும், சர்க்கரை அளவையும் அதிகமாக பாதிப்பதாக அவர் கூறுகிறார்.

மாலை 6 மணிக்கு பிறகு தவிர்க்க வேண்டிய ஸ்நாக்ஸ்கள்

டாக்டர் பால் மாணிக்கத்தின் அறிவுரைப்படி, சமோசா, ஜிலேபி, பர்கர், பானி பூரி, கச்சோரி, வடபாவ், வறுத்த மோமோஸ், பாவு பஜ்ஜி, உருளைக்கிழங்கு வறுவல், மிக்சர், பீட்சா, ரோல்ஸ் போன்ற எண்ணெய் மற்றும் மைதா அதிகம் உள்ள ஸ்நாக்ஸ்களை மாலை நேரத்தில் தவிர்ப்பது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டா வெயிட் ஏறும்னு கவலை வேணாம்.. ஹெல்த்தியான இந்த 4 ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க

அதற்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?

மாலை 6 மணிக்கு பிறகு ஆரோக்கியமான மாற்று உணவுகளாக,

* வேகவைத்த கோதுமை மோமோஸ்

* சிக்கன் ராப்ஸ் (குறைந்த எண்ணெயில்)

* சென்னா மசாலா

* வேகவைத்த சோளம்

* முளைக்கட்டிய பயிறு

* எண்ணெய் சேர்க்காத பன்னீர் டிக்கா

* வீட்டில் தயாரிக்கும் சூப்

போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை உடலுக்கு தேவையான புரதம் மற்றும் சக்தியை வழங்குவதோடு, தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

View this post on Instagram

A post shared by Dr. Pal Manickam (@dr.pal.manickam)

ஜங்க் ஃபுட் ஆசையை கட்டுப்படுத்த இந்த வழிகள்

ஜங்க் ஃபுட் பழக்கத்தை நிறுத்த, காலை, மதியம், இரவு என சரியான நேரத்தில் சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் பசி எடுத்தால் பழங்களை சாப்பிடலாம். உணவில் காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகரிக்க வேண்டும். கோபம், மன அழுத்தம், கவலை ஆகிய நேரங்களில் துரித உணவுகளை நாடுவதை தவிர்த்து, தண்ணீர் குடிப்பது நல்லது.

நடைபயிற்சி மற்றும் யோகா உதவும்

மாலை நேர நடைபயிற்சி, யோகா, தியானம் போன்றவை துரித உணவுகளின் மீது ஏற்படும் ஆசையை குறைக்க உதவும். சிறிய திட்டமிடல் இருந்தாலே, மாலை நேர சிற்றுண்டிகளையும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும் என மருத்துவர் பால் மாணிக்கம் நினைவூட்டுகிறார்.

இறுதியாக..

மாலை நேரத்தில் சாப்பிடும் சிற்றுண்டிகளே பல உடல்நலப் பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. பக்கோடா, பானி பூரி போன்ற ஜங்க் ஃபுட்களுக்கு ‘நோ’ சொல்லி, ஆரோக்கியமான மாற்று உணவுகளை தேர்வு செய்வதன் மூலம் உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பழக்கங்களை பின்பற்றுவதற்கு முன், நீரிழிவு, இதய நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் தங்கள் குடும்ப மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

லெமன் ஜூஸ் இப்படித்தான் குடிக்க வேண்டும்.. மருத்துவர் எச்சரிக்கை.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 17, 2025 19:33 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content