Thu Oct 29, 2026 | 09:51 AM IST

Doctor Verified

உடல்நலம் சீராக இருந்தால் தான் சருமமும் பிரகாசிக்கும் – தோல் நிபுணர் விளக்கம்

சருமப் பிரச்சனைகள் முகத்தில் தோன்றுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? குடல் ஆரோக்கியம், கல்லீரல் செயல்பாடு, மன அழுத்தம், தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் எப்படி தோலை பாதிக்கின்றன என்பதை டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் மோகன லக்ஷ்மி விளக்குகிறார்.
உடல்நலம் சீராக இருந்தால் தான் சருமமும் பிரகாசிக்கும் – தோல் நிபுணர் விளக்கம்உடல்நலம் சீராக இருந்தால் தான் சருமமும் பிரகாசிக்கும் – தோல் நிபுணர் விளக்கம்

பலரும் முகத்தில் ஏற்படும் பிம்பிள், பிக்மென்டேஷன், கருவளையம், உலர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு காஸ்மெடிக் க்ரீம், லோஷன், ட்ரீட்மெண்ட் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில், சருமத்தில் தோன்றும் பிரச்சனைகள் அனைத்தும் உடலின் உள்ளார்ந்த ஆரோக்கிய குறைபாடுகளின் பிரதிபலிப்பு தான் என்று டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் மோகன லக்ஷ்மி விளக்குகிறார்.

குடல் ஆரோக்கியம் குறைந்தால் – முகத்தில் பிம்பிள்கள்

உடலில் உள்ள குடல் (Gut) சரியாக செயல்படாவிட்டால், அதில் உள்ள நல்ல பாக்டீரியா (Good Bacteria) அளவு குறையும். இதனால், சரும அழற்சி (Skin Inflammation) அதிகரித்து, முகத்தில் பிம்பிள், சிவப்பு, வீக்கம் போன்றவை தோன்றும்.

கல்லீரல் சீராக செயல்படாவிட்டால் – முகம் மஞ்சள் நிறம் பெறும்

கல்லீரல் (Liver) உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாகும். அது சீராக செயல்படாவிட்டால், நச்சுக்கள் தோலில் சேர்ந்து, முகத்தில் மஞ்சள் நிறம், இரைச்சல், சுரக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மன அழுத்தம் – சோர்வான முகம், எக்ஸிமா

அதிகமான Stress hormones சுரந்தால், சருமத்தின் இம்யூனிட்டி குறைகிறது. இதனால் Psoriasis, Eczema போன்ற நோய்கள் தோன்றும். மேலும், தூக்கம் போதிய அளவில் கிடைக்காவிட்டால், இரத்த ஓட்டம் குறைந்து, முகம் மங்கலான தோற்றம் பெறும்; கருவளையம் அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: சருமம், முடி இரண்டுக்கும் ஒரே தீர்வு.. உங்க டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள் இதோ

தண்ணீர் குறைவாக குடிப்பது – உலர்ந்த சருமம்

தினசரி போதுமான தண்ணீர் குடிக்காதவர்கள், உலர்ந்த, பிளவுகள் விழும் சருமம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

வைட்டமின் குறைபாடு – சுருக்கம் விரைவில் தோன்றும்

வைட்டமின் C, E மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருந்தால், சருமத்தில் elasticity குறையும். இதனால் முன்கூட்டியே சுருக்கம், மங்கலான தோல் போன்ற பிரச்சனைகள் தோன்றும்.

View this post on Instagram

A post shared by Dr.R.M.MOKANALAKSHMI | DERMATOLOGIST | CHENNAI (@dr.mokanalakshmi_derm)

சருமம் பிரகாசிக்க உண்மையான சிகிச்சை

சருமத்தில் பிரச்சனை ஏற்பட்டால், வெளிப்புற க்ரீம்கள் மட்டும் போதாது. சரியான உணவு பழக்கம் (Protein, vitamins, minerals அதிகம் உள்ள உணவுகள்), போதிய தூக்கம், மன அழுத்த நிர்வாகம், சீரான வாழ்க்கைமுறைஇவையே சருமத்திற்கு உண்மையான தீர்வை அளிக்கும் என்று டாக்டர் மோகன் லக்ஷ்மி கூறுகிறார்.

இறுதியாக..

“Skin care creams க்கு அப்பாற்பட்டு, உண்மையான Skin glow உங்கள் உடல்நலத்தில்தான் இருக்கிறது” என்று நிபுணர் வலியுறுத்துகிறார். எனவே, முகத்தில் பிரச்சனை இருந்தால், முதலில் உங்கள் உடல்நலம், குடல், கல்லீரல், தூக்கம் மற்றும் உணவு பழக்கத்தை சரிசெய்யுங்கள். அப்போதுதான் நீடித்த சரும ஆரோக்கியம் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கியத் தகவல் மட்டுமே. தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைக்காக நிபுணர் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

→ சோப்பு பயன்படுத்துவதால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 29, 2025 20:44 IST

    Published By : Ishvarya Gurumurthy