Doctor Verified

சருமம் பளபளப்பாக வேண்டுமா.? இரும்பு சத்து நிறைந்த இந்த உணவுகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்.! மருத்துவர் பரிந்துரை..

சரும ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் இரும்புச் சத்து மிக முக்கியம் என்று டாக்டர் மோகன லக்ஷ்மி விளக்குகிறார். நட்ஸ் & சீட்ஸ் முதல், காய்கறிகள் வரை, மருத்துவர் பரிந்துரைத்த இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
சருமம் பளபளப்பாக வேண்டுமா.? இரும்பு சத்து நிறைந்த இந்த உணவுகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்.! மருத்துவர் பரிந்துரை..


நம்முடைய சருமம் (Skin) அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில் இரும்புச் சத்து (Iron) மிக அவசியமானது. இரும்பு குறைவானால், சருமம் பொலிவிழந்து, உலர்ச்சி அதிகரித்து, முகத்தில் சோர்வு தெரியும். இதனால் இரும்பு நிறைந்த உணவுகளை உணவில் சேர்ப்பது அவசியம் என்று பிரபல டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் மோகன லக்ஷ்மி பரிந்துரை செய்துள்ளார்.

சரும ஆரோக்கியத்திற்கும் இரும்பின் பங்கு என்ன?

* இரும்பு, நம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையானது.

* இரத்த ஓட்டம் சீராக இருந்தால், சருமத்திற்கும் சத்துகள் போதுமான அளவில் சென்று, பளபளப்பும் ஈரப்பதமும் கிடைக்கும்.

* இரும்பு குறைந்தால் முகம் சோர்வாகவும், கரும்புள்ளிகள் தென்படவும் வாய்ப்புள்ளது.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் – மருத்துவர் பரிந்துரை

விதைகள் (Seeds)

* எள்ளு (Sesame seeds)

* பூசணிக்காய் விதைகள் (Pumpkin seeds)

* ஆளி விதைகள் (Flax seeds)

* ஹெம்ப் விதைகள் (Hemp seeds)

இவை அனைத்தும் இரும்பு நிறைந்தவை. தினசரி உணவில் சிறு அளவாவது சேர்த்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

காய்கறிகள் (Vegetables)

* முருங்கைக் கீரை (Spinach)

* பாசிப்பருப்பு (Green lentils)

* கொண்டைக் கடலை (Chickpeas)

* கருப்பு காராமணி / Kidney beans

* சோயா பீன்ஸ் (Soybeans)

* உருளைக்கிழங்கு (Potatoes)

* ப்ரோக்கோலி (Broccoli)

இவை அனைத்தையும் வறுத்து சாப்பிடாமல், ஆவியில் வேகவைத்தோ, சாறு வடிவிலோ எடுத்துக்கொள்ளும் போது சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: முடி அதிகமா கொட்டுதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.!

உலர் பழங்கள் (Dry Fruits)

* அத்தி பழம் (Figs)

* முல்பெர்ரி (Mulberries)

* ஆலிவ் (Olives)

* ப்ரூன்ஸ் (Prunes)

இந்த டிரை ஃப்ரூட்ஸ்கள் இரும்பு மட்டுமல்லாமல், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்தவை. சருமம் பளபளப்பாகவும், சுருக்கங்கள் தாமதமாகவும் உருவாகும்.

நட்டுகள் (Nuts)

* முந்திரி (Cashews)

* பிஸ்தா (Pistachios)

இந்த நட்டுகள் இரும்பு சத்து மட்டுமல்லாமல், ஆரோக்கியமான கொழுப்பும் கொண்டவை. தினசரி ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இனிப்புகள் (Sweets)

* டார்க் சாக்லேட் (Dark Chocolate)

டார்க் சாக்லேட்டில் நல்ல அளவில் இரும்பு உள்ளது. ஆனால், மிகக் குறைவான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவு அதிகரித்து பிற பிரச்சினைகள் ஏற்படலாம்.

 

View this post on Instagram

A post shared by Dr.R.M.MOKANALAKSHMI | DERMATOLOGIST | CHENNAI (@dr.mokanalakshmi_derm)

ஏன் இந்த உணவுகள் அவசியம்?

* இரும்பு சத்து குறைந்தால் முகம் பசப்பாகும்.

* கண்கள் கீழ் கருவளையம் அதிகரிக்கும்.

* முடி உதிர்வு, சோர்வு, உலர்ச்சி, முன்கூட்டிய சுருக்கங்கள் கூட தோன்றும்.

எனவே, உணவில் விதைகள், காய்கறிகள், நட்டுகள், உலர் பழங்கள் ஆகியவற்றைச் சேர்ப்பது அவசியம் என்று டாக்டர் மோகநா லக்ஷ்மி வலியுறுத்துகிறார்.

இறுதியாக..

சரும ஆரோக்கியத்தை பேண வேண்டுமெனில், வெளிப்புற க்ரீம்களும் சிகிச்சைகளும் மட்டும் போதாது. உணவில் இரும்பு நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதே சருமத்தின் இயற்கை பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் வழியாகும். தினசரி விதைகள், பச்சைக் காய்கறிகள், நட்டுகள் மற்றும் சிறு அளவு டார்க் சாக்லேட் எடுத்துக்கொள்வது சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவ தகவல்களையே பகிர்கிறது. ஒவ்வொருவரின் உடல் நிலை, தேவைகள் மாறுபடும். எனவே, உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரின் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

45 நாள்களில் சருமத்தை பளபளப்பாக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது

Disclaimer

குறிச்சொற்கள்