How to make your skin glow naturally at home: இன்று பலரும் ஆரோக்கியமான, தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்புகின்றனர். அவ்வாறே, சரும ஆரோக்கியத்திற்கு சில கடைகளில் விற்பனை செய்யக்கூடிய பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இதில் இரசாயனங்கள் கலந்திருக்கக்கூடும். இவை சரும ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலர் சரும பராமரிப்புக்கு வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர். அவ்வாறு, 45 நாள்களில் தெளிவான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கான குறிப்புகளை மருத்துவர் விவேக் ஜோஷி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
தெளிவான சருமம்
மருத்துவர் முதலில் தெளிவான சருமம் என்றால் என்ன என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். தெளிவான சருமம் என்பது சருமத்தில் முகப்பரு அல்லது பருக்கள் அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற எந்த நோயியல்களும் இல்லாததைக் குறிப்பதாகும். எந்த வகையான நோயும் இல்லாமல், சருமம் பளபளப்பாக இருப்பது மற்றும் ஆரோக்கியமாக இருப்பது தெளிவான சருமம் என்று அழைக்கப்படுகிறது. ஆம். தோல் ஒரு உறுப்பு ஆகும். எனவே தான் இதை நாம் உள்ளே இருக்கு சிகிச்சையளிக்க வேண்டும். இது உங்களுக்கு மிகவும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தங்கம் போன்ற பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே ஃபேஸ் சீரம் செய்யுங்க..
சரும பராமரிப்புக்கு தவிர்க்க வேண்டியவை
சருமத்தை உள்ளிருந்து பாதுகாக்கவும், சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து 45 நாள்களுக்கு தவிர்க்க வேண்டியவற்றைக் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
உணவு முறைகள்
மருத்துவரின் கூற்றுப்படி, புளித்த உணவைத் தவிர்க்க வேண்டும். அதாவது பச்சை தக்காளியையும் தவிர்க்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமலலாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரு நாளைக்கு ஒரு நடுத்தர அளவிலான தக்காளியை பச்சையாக சாப்பிட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முடிந்தால், தெளிவான சருமம் வேண்டுமென்றால், பச்சையான தக்காளியை உட்கொள்வதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
அதிக காரமான மற்றும் அதிக எண்ணெய் நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெள்ளை மாவில் தயாரிக்கப்படும் எதையும் உங்களால் முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இது தவிர சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது போன்றவற்றைக் கையாள வேண்டும். இப்போது இந்த கடுமையான டயட்டைத் தேர்ந்தெடுப்பதை விட, இந்த சருமத்துடன் இருப்பது நல்லது என நினைக்கலாம். உண்மையில் இது கடுமையானது அல்ல. உங்களால் முடிந்தவரை அதைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர் விளக்குகிறார்.
இந்த விஷயங்களை 45 நாள்கள் செய்வது சருமத்திற்கு உதவும். அப்போது முடிவுகளைப் பார்க்கலாம். நாளடைவில் இந்த எளிய வாழ்க்கை முறை அல்லது இந்த எளிய உணவைத் தொடர அதிக உந்துதலுடன் இருப்பீர்கள். இதில் செரிமானத்திற்கு, வயிற்றுக்கு மற்றும் குடலுக்கு கூடுதல் சுமையை கொடுக்க முயற்சிக்கவில்லை. அதன்படி, செரிமானம் செய்ய கடினமாக இருக்கும் எதையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆயுர்வேத குறிப்புகள்
ஆயுர்வேதத்தின் படி, சருமம் ஆனது பித்தத்திற்கு ஏற்ற இடம் என்று கூறப்படுகிறது. பித்தம் என்பது உடலின் நெருப்பு கூறு ஆகும். எனவே சருமத்தை சமநிலைப்படுத்த விரும்பினால், பித்தத்தை சமநிலைப்படுத்துவது அவசியமாகும். அதாவது நெருப்புக் கூற்றை சமநிலையில் இருக்க வேண்டும். எனவே உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 45 நாட்களுக்கு இந்த எளிய பரிந்துரையைப் பின்பற்றுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும் போது நீங்க செய்ய கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்
உடற்பயிற்சி செய்வது
அன்றாட வாழ்வில் வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை உடற்பயிற்சிகளைச் சேர்க்க வேண்டும். இதில் அவரவர்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம். ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உங்களுக்குப் பிடித்ததை செய்ய வேண்டும். ஆனால், ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறை செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கலாம். இதன் மூலம் நல்ல இரத்த ஓட்டம், உடல் முழுவதும் நல்ல நிணநீர் சுழற்சி இருக்க வேண்டும். இது நல்ல மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.
இரசாயனப் பொருள்களைத் தவிர்ப்பது
மற்றொரு பரிந்துரையாக, சருமத்தில் முடிந்தவரை ரசாயனப் பொருட்களைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சருமம் பளபளப்பாக மாறுவதற்கு ரசாயனங்களைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள், மூலிகைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தலாம். நல்ல சரும ஆரோக்கியத்திற்கு, ரசாயனங்களால் தயாரிக்கப்படும் அல்லது நிறைய ரசாயனங்கள் உள்ள ஃபேஸ் வாஷைத் தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
காபி, பிளாக் டீ, கிரீன் டீ உட்கொள்வதைக் குறைப்பது
கிரீன் டீயில் நிறைய ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் கிரீன் டீயில் காஃபின் உள்ளது. இந்த வகை பானங்கள் உடலை நீரிழப்பு அடையச் செய்யலாம். இவை சருமத்தையும் நீரிழப்பு செய்யலாம். எனவே, முடிந்தவரை நீரேற்றமாக இருக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வித்தியாசத்தைக் காணலாம்.
நல்ல தூக்கம்
நன்கு, ஆழமான தூக்கத்தைப் பெறுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கு குறிப்பிட்ட அளவிலான மெக்னீசியம் உட்கொள்ள மருத்துவர் பகிர்ந்துள்ளார். ஆரோக்கியமான, தெளிவான சருமத்தைப் பெற நல்ல ஆரோக்கியமான தூக்கம் பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க ஸ்கின் கேர் வழக்கத்தில் இருக்க வேண்டிய மூன்று எளிய பராமரிப்பு முறைகள்..
Image Source: Freepik