
குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியில் உணவு பழக்கவழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, சில உணவுகள் சரும ஆரோக்கியம் (Skin Health) மற்றும் குடல் ஆரோக்கியம் (Gut Health) மீது நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் மோகன லக்ஷ்மி கூறுகிறார்.
பெற்றோர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் கவனம் செலுத்தாவிட்டால், முகப்பரு (Acne), சருமம் உலர்தல், குடல் கோளாறுகள், கூடவே எதிர்காலத்தில் வயதுக்கு முந்திய சுருக்கங்கள் (Wrinkles) ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார். மேலும் என்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று, டாக்டர் மோகன லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
பால் சாக்லேட் (Milk Chocolates)
பால் சாக்லேட்டில் அதிக அளவு சர்க்கரை (Sugar) மற்றும் பால் (Milk content) இருப்பதால், முகப்பருவின் முக்கிய காரணிகளில் ஒன்றாகிறது. சாக்லேட்டில் உள்ள சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரித்து, முகத்தில் எண்ணெய் சுரப்பை (Oil secretion) தூண்டும்.
டார்க் சாக்லேட் (Dark Chocolate) ஓரளவு சிறந்தது, ஏனெனில் அதில் ஃபிளாவனாய்ட்ஸ் (Flavonoids) உள்ளதால் சருமத்திற்கு சற்றே பாதுகாப்பு கிடைக்கும்.
ஐஸ்கிரீம் (Ice Creams)
குழந்தைகளின் பிடித்த உணவுகளில் ஒன்றான ஐஸ்கிரீமில் சர்க்கரை, பால், கொழுப்பு மிகுந்தளவில் உள்ளது. இத்தகைய கலவைகள் கொலாஜன் (Collagen) மற்றும் எலாஸ்டின் (Elastin) நார்களை சேதப்படுத்தி, இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் (Wrinkles) தோன்றச் செய்யக்கூடும்.
பிரெஞ்ச் ஃப்ரைஸ் (French Fries)
அதிக உப்பு (Sodium) மற்றும் எண்ணெய் (Oily Fats) நிறைந்துள்ள பிரெஞ்ச் ஃப்ரைஸ், சருமத்தில் கூடுதல் எண்ணெய் உற்பத்தியை தூண்டும். தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் போது முகத்தில் முகப்பரு மற்றும் பிம்பிள்ஸ் தோன்றும் அபாயம் அதிகம். எண்ணெய் நிறைந்த உணவுகள் உடலில் பிரதிபலிப்பது போலவே முகத்திலும் பிரதிபலிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.
காபி (Coffee)
சிறிய அளவு காபி குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் அதிக காபி குடிப்பதால், கஃபீன் (Caffeine) உடலின் ஈரப்பதத்தை குறைத்து, சருமத்தை உலர்த்தி, மந்தமாகவும் (Dull) காட்டுகிறது.
சாஃப்ட் டிரிங்ஸ் (Soft Drinks)
குழந்தைகளுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படுத்தும் பானங்களில் ஒன்று சாஃப்ட் டிரிங்ஸ். இதில் உள்ள அதிக சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. இதனால் முகத்தில் முகப்பரு, பிம்பிள்ஸ் எளிதில் தோன்றுகின்றன. மேலும், குடல் ஆரோக்கியத்தையும் (Gut Health) பாதிக்கக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த ஜூஸ் காம்பினேஷன்ஸ் குடிச்சா ஆரோக்கியம் உறுதி.. நிபுணர் பரிந்துரை..
பெற்றோர் கவனிக்க வேண்டியவை
குழந்தைகளின் சருமம் ஆரோக்கியமாகவும், குடல் வலிமையாகவும் இருக்க, பின்வரும் உணவுகளைச் சேர்க்கலாம்:
* பழங்கள் மற்றும் காய்கறிகள் (Fruits & Veggies)
* முழுதானிய உணவுகள் (Whole grains)
* புரதம் நிறைந்த உணவுகள் (Protein-rich foods)
* நீர்ச்சத்து நிறைந்த பானங்கள் (Hydrating drinks)
View this post on Instagram
இறுதியாக..
குழந்தைகளின் உணவில் பால் சாக்லேட், ஐஸ்கிரீம், பிரெஞ்ச் ஃப்ரைஸ், காபி, சாப்டு டிரிங்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது மிக அவசியம். சரும ஆரோக்கியம் (Skin health) மற்றும் குடல் ஆரோக்கியம் (Gut health) பாதுகாக்கும் வகையில் சத்தான, இயற்கையான உணவுகளை பெற்றோர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் மோகநா லக்ஷ்மி வலியுறுத்தினார்.
{Disclaimer: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உங்கள் குழந்தையின் உடல் நிலையைப் பொருத்து உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version