Fri Sep 11, 2026 | 11:44 PM IST

Doctor Verified

தயிரில் நட்ஸ் கலந்தால் என்ன ஆகும்? மருத்துவ நிபுணர் கூறும் 6 அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

தயிருடன் நட்ஸ் சாப்பிடுவதால் செரிமானம், சருமம், நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு வலிமை, எடை குறைப்பு, உடல் பலம் போன்ற 6 முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. நிபுணரின் கருத்துடன் முழு விவரம்!

தினசரி உணவில் இருக்கும் தயிர் பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் ஆரோக்கிய நண்பனாக விளங்குகிறது. கால்சியம், வைட்டமின் B12, புரோபயாடிக்ஸ் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துகளால் நிரம்பிய தயிரை, பலர் உணவுக்குப் பிறகோ, மதிய உணவோடு சேர்த்தோ உட்கொள்கிறார்கள். ஆனால் அதில் நட்ஸ் சேர்த்து சாப்பிடும் பழக்கம் தற்போது ஆரோக்கிய உலகில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் உண்மையில் என்ன நன்மைகள் கிடைக்கின்றன? ஜெய்ப்பூரைச் சேர்ந்த உணவியல் நிபுணரும் Angel Care-A Nutrition & Wellness Center இயக்குநருமான அர்ச்சனா ஜெயின் அவர்கள் இதற்கான விளக்கத்தை வழங்குகிறார்.

தயிருடன் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானம் மேம்பட்டு வயிறு வீக்கம், வாயு குறையும்

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் (Probiotics) குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் நட்ஸ் சேர்ப்பது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும், செரிமானத்தை வேகமாக்கும், அமிலத்தன்மை, மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சினைகளை குறைக்கும். செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த கலவையாக நிபுணர் கூறுகிறார்.

சரும ஆரோக்கியம் கணிசமாக மேம்படும்

தயிரும் நட்ஸும் இரண்டிலும் நிறைந்துள்ளவை:

* ஆரோக்கியமான கொழுப்புகள்

* வைட்டமின் E

* ஆக்ஸிஜனேற்றிகள்

இதனால் முகத்தில் உள்ள வீக்கம் குறையும், முகப்பருக்கள் கட்டுப்படும், சருமம் இயற்கையாக பிரகாசிக்கத் தொடங்கும். இது இயற்கையான “ஸ்கின்-க்ளோ பாக்” போல செயல்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Breakfast Skip செய்கிறீங்களா? இதய நோய், BP, Diabetics அனைத்தும் உங்களை நோக்கி வரலாம்!

நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்

தயிரில் உள்ள புரோபயாடிக்ஸ் + நட்ஸின் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் சேரும்போது - உடல் பாதுகாப்பு சக்தி வலுப்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான சக்தி உயரும். அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு குறையும். நிபுணர்கள் இதை "இம்யூனிட்டி பூஸ்டர் காம்போ" என்று அழைக்கிறார்கள்.

எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்படும்

தயிரும் நட்ஸும் இரண்டும் கால்சியத்தின் சிறந்த மூலாதாரங்கள். இதை தினசரி எடுத்தால் - எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். கூட்டு வலி, முதுகு வலி குறையும். எலும்புகள் பலவீனப்படும் Osteoporosis அபாயம் குறையும். மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு இது அதுமட்டும் சிறந்தது.

எடை குறைப்பு பயணத்தை வேகமாக்கும்

நிபுணர் அர்ச்சனா ஜெயின் கூறுவதுபடி, தயிரும் நட்ஸும் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும். ஸ்னாக்ஸ் ஆகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் பலம், ஆற்றல் அதிகரிக்கும்

தயிரின் புரோட்டீன் + நட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம், வைட்டமின்கள் ஒன்றிணைந்து பலவீனம் நீங்க உதவும், உடலுக்கு தேவையான எரிசக்தி வழங்கும், மனஅழுத்தத்தை குறைத்து மனநிலையை அமைதிப்படுத்தும். களைப்பு அதிகமாக இருக்கும் நாட்களில் இது 'இன்ஸ்டண்ட் எனர்ஜி' உணவாக செயல்படும்.

இறுதியாக..

தயிரில் நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது ஒரு சாதாரண உணவு பழக்கம் அல்ல; இது செரிமானம் முதல் சருமம், எடை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை முழுமையான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு ‘சூப்பர் கலவை’. தினசரி ஒரு கிண்ணம் தயிருடன் நான்கு–ஐந்து நட்ஸ் சேர்த்து எடுத்துக்கொள்வது உடல், மனம் இரண்டிற்கும் பெரிய நன்மை தரும்.

Disclaimer: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. உங்களுக்கு ஏற்கனவே எந்தவொரு மருத்துவ நிலை, அலர்ஜி அல்லது செரிமான பிரச்சினை இருந்தால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இதை உணவில் சேர்க்கவும்.

Read Next

குளிர்காலத்தில் தினமும் முட்டை சாப்பிடலாமா.? நிபுணர்கள் கூறும் சரியான அளவு மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 22, 2025 09:37 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content