Fri Sep 11, 2026 | 11:44 PM IST

Doctor Verified

தினமும் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர் கூறும் 7 அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

நெய் செரிமானம், மூளை செயல்பாடு, இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல நன்மைகள் கொண்டது. தினமும் நெய் சேர்த்தால் கிடைக்கும் 7 சுகாதார பலன்கள் – உணவியல் நிபுணர் கருத்துடன்.

நெய் என்பது ஒரு சாதாரண உணவு பொருளாக மட்டும் அல்ல, மருத்துவ குணங்களால் நிரம்பிய ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்து. ஒமேகா-3, ஒமேகா-6, வைட்டமின் A, D, E, K போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்த நெய், உடல் ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தும். சருமம், முடி, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி என பல துறைகளில் நன்மையை வழங்கும் இந்த நெய்யின் பயன்களைப் பற்றி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த AngelCare-A Nutrition & Wellness Center இயக்குநரும் உணவியல் நிபுணருமான அர்ச்சனா ஜெயின் அவர்கள் விளக்குகிறார்.

தினமும் நெய் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்

1. செரிமானத்திற்கு சிறந்த மருந்து போல செயல்படும்

ஆயுர்வேதம் நெய்யை ‘செரிமான நெருப்பை ஏற்றும் உணவு’ என குறிப்பிடுகிறது. செரிமான அமைப்பு சீராக இயங்க, மலச்சிக்கல் நீங்க, குடல் புறணி மற்றும் செல்களின் வளர்ச்சிக்கு, வயிற்று புண் குறைய, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த, குடல் வீக்கம் குறைய நெய் உதவுகிறது. தினமும் ஒரு டீஸ்பூன் நெய் மட்டும் கூட செரிமான கோளாறுகளை கணிசமாகக் குறைக்கும்.

2. உடலிலுள்ள வீக்கத்தை குறைக்கும்

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் (Butyric Acid) மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory properties), IBS (Irritable Bowel Syndrome) உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். குடல் இயக்கத்தைச் சீர்படுத்தும். உடல் வீக்கம் குறையும். எலும்புகளை வலுப்படுத்தும். வீக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருக்கும் நபர்களுக்கு இது இயற்கையான நிவாரணம்.

3. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை

பலர் நெய்யை கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைத்தாலும், நிபுணர்கள் அது தவறான புரிதல் என கூறுகின்றனர். நெய் சாப்பிடுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மிதமாக எடுத்துக்கொண்டால் நெய் இதயத்திற்குப் பாதகம் அல்ல, பதிலாக பயன்தரும்.

4. நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும்

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும். உடல் நச்சு நீக்கத்தை ஊக்குவிக்கும். சிறிது நெய்யை அன்றாட உணவில் சேர்ப்பது உடலை நோய்களுக்கு எதிராக அதிகம் தயார் நிலையில் வைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Breakfast Skip செய்கிறீங்களா? இதய நோய், BP, Diabetics அனைத்தும் உங்களை நோக்கி வரலாம்!

5. மூளை செயல்பாட்டை கூர்மைப்படுத்தும்

நெய்யில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள், நினைவாற்றலை மேம்படுத்தும். கவனம், செறிவு அதிகரிக்கும். நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவும். மாணவர்களுக்கும், அதிக மனஅழுத்தத்தில் இருக்கும் நபர்களுக்கும் நெய் மிகச் சிறந்த மூளை ஊட்டச்சத்து.

6. சருமத்துக்கும் கூந்தலுக்கும் இயற்கையான ஈரப்பதம்

நெய்யின் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக்கும். முக பளபளப்பை அதிகரிக்கும். முடியைக் கூர்மையாக, பளபளப்பாக வைத்திருக்கும். உலர்ச்சி மற்றும் முடி உடைப்பு குறையும். இது இயற்கையான ஸ்கின் & ஹேர் சப்ப்ளிமென்ட் போல செயல்படும்.

7. உடலுக்கு ஆற்றல் மற்றும் பலம் தரும்

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் பலவீனத்தை நீக்கும். நீண்டநேர எரிசக்தி வழங்கும். உடல் சோர்வு, மனஅழுத்தம் குறையும். தினமும் சிறிதளவு நெய் எடுத்தால் உடல் எளிதில் களைப்படையாது.

தற்காப்பு நடவடிக்கைகள்

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) உள்ளவர்கள், இதய தமனி அடைப்பு பிரச்சினை உள்ளவர்கள், அதிக எடை கொண்டவர்கள், நெய் உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம். "மிதமான அளவு" என்பது நெய் சாப்பிடுவதில் முக்கிய விதி.

இறுதியாக..

நெய் ஒரு பாரம்பரிய உணவு பொருளாக இருந்தாலும், இது செரிமானம், மூளை செயல்பாடு, இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி என பல்வேறு துறைகளில் பெரிய நன்மை வழங்குகிறது. தினசரி ஒரு டீஸ்பூன் நெய்யை உணவில் சேர்ப்பது உடல் முழுவதையும் பலப்படுத்தும். ஆனால் உடல் நிலை, மருத்துவ வரலாறு ஆகியவற்றைப் பொறுத்து மிதமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான கல்வி நோக்கத்திற்கானவை. குறித்த மருத்துவ நிலை, அலர்ஜி, இதய பிரச்சினை, கொழுப்பு கல்லீரல் ஆகியவை இருந்தால், நெய்யை தினசரி உணவில் சேர்க்கும் முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகமாக குளிரை உணர்கிறார்கள்? நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 22, 2025 22:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content