Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Doctor Verified

Breakfast Skip செய்கிறீங்களா? இதய நோய், BP, Diabetics அனைத்தும் உங்களை நோக்கி வரலாம்!

காலை உணவைத் தவிர்ப்பது உயர் இரத்த அழுத்தம், இதய நோய், அதிக கொழுப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை எப்படி அதிகரிக்கிறது? நிபுணர் நேஹா சின்ஹா வழங்கும் முக்கிய எச்சரிக்கை மற்றும் காலை உணவுக்கான சரியான வழிமுறைகள் இங்கே.

ஒரு நாளின் முக்கியத்துவம் வாய்ந்த உணவாகக் கருதப்படும் காலை உணவை பலர் நேரமின்மை, பசியின்மை அல்லது எடை குறைக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கையால் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இந்த பழக்கம் உடல்நலத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். லக்னோவின் விகாஸ் நகரில் உள்ள “நியூட்ரிவைஸ் கிளினிக்” ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா கூறிய விளக்கம் இதோ.

காலை உணவை தவிர்ப்பது.. உயர் இரத்த அழுத்தத்துக்கு நேரடி காரணமா.!

நிபுணர் நேஹா சின்ஹா கூறுகையில், “ஆம், காலை உணவைத் தவிர்ப்பது உயர் இரத்த அழுத்தத்தையும், இதய நோய்களையும் அதிகரிக்கிறது” என்றார். காலை உணவை ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் பெற வேண்டிய சக்தி. அதை தவிர்ப்பதால் - வளர்சிதை மாற்றம் (Metabolism) மந்தமாவது, இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்தல், இதயத்துக்கு கூடுதல் பணி ஏற்படுதல் மற்றும் நீண்ட காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகலாம்.

காலை உணவை தவிர்க்கும் பழக்கம் டைப்–2 நீரிழிவு அபாயத்தை உயர்த்தும்

நெடுநேர வெறும் வயிறு உடலை திடீர் சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளுக்கு தள்ளும். இதனால் இரத்த நாளங்கள் சேதமடையும், இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும், நீண்ட காலத்தில் வகை–2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கும். மேலும், காலை உணவைத் தவிர்ப்பதால் பிற்காலத்தில் அதிக பசி ஏற்பட்டு, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை சாப்பிடும் ஆவல் கூடும். இது எடை அதிகரிப்பு + உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டையும் ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: காலையில் காபிக்கு பதில் இதை குடிக்கவும்.. பித்தம் குறையும்.! மருத்துவர் பரிந்துரை..

இதய நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன?

காலை உணவை தவிர்ப்பது இதயத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள்:

* கொழுப்பு அளவு (Bad Cholesterol – LDL) அதிகரித்தல்

* தமனிகள் கடினமாகும் அபாயம்

* இரத்த ஓட்டம் மந்தமாகுதல்

* மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயம் உயர்வு

பல ஆய்வுகளிலும் ‘breakfast skippers’ குழுவில் இதய நோய் அபாயம் அதிகமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்குமா? – ஆம்!

காலை உணவை தவிர்ப்பதால் அட்ரீனல் சுரப்பிகள் கார்டிசோல் ஹார்மோனை அதிகமாக வெளியிடும். இதனால் மன அழுத்தம், கவலை, இரத்த நாளங்கள் சுருங்குதல், உயர்ரத்த அழுத்தம் அதிகரித்தல் என பல பிரச்சனைகள் தோன்றும்.

இதயத்தை பாதுகாக்க காலை உணவில் சேர்க்க வேண்டியவை

ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா பரிந்துரைக்கும் காலை உணவு மெனு:

* முழு தானியங்கள் – ஓட்ஸ், ராகி, ரொட்டி, முழுதானிய டோஸ்ட்

* மெலிந்த புரதம் – முட்டை, பீன்ஸ், பச்சைக் கொத்துக்களைகள்

* ஆரோக்கியமான கொழுப்புகள் – நெய் (அளவோடு), நட்ஸ், விதைகள்

* பழங்கள் – பெர்ரி, ஆப்பிள்

* கார்போஹைட்ரேட்டுகள் – ராகி கஞ்சி, கோதுமை உப்புமா, இட்லி

அவர் கூறிய முக்கிய வழிகாட்டல் - “சமநிலையற்ற இரத்த சர்க்கரை வராமல் இருக்க, எழுந்த 1–2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டும்.”

இறுதியாக..

காலை உணவைத் தவிர்ப்பது உயர்ரத்த அழுத்தம், இதய நோய், அதிக கொழுப்பு (LDL), வகை–2 நீரிழிவு, மனஅழுத்தம் போன்ற பல அபாயங்களை ஏற்படுத்தும். எனவே, காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உண்பது உங்கள் இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க மிக முக்கியம்.

Disclaimer: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுத் தகவல்களும் நிபுணர் கருத்துக்களும் ஆகும். எந்த மருத்துவ ஆலோசனையையும் பின்பற்றுவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

Read Next

பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 22, 2025 09:21 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content