
நம் அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஊட்டச்சத்துக்களைப் பொறுத்த வரை ஏராளமானவை உள்ளன. அவை ஒவ்வொன்றுமே உடலில் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு முக்கிய பங்களிக்கின்றன. இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பல வழிகளில் மோசமாக பாதிக்கக்கூடும். மேலும், உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதபோது, அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவது, அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிப்பு, மேலும் சோர்வு அல்லது பலவீனம் போன்றவை ஏற்படலாம்.
முக்கியமான குறிப்புகள்:-
மேலும் நாள்பட்ட குறைபாடுகள் காரணமாக உடலில் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, ஸ்கர்வி மற்றும் பல நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். நாம் சத்தான உணவை உட்கொண்டாலும், சில ஊட்டச்சத்து குறைபாடுகள் உடல் ஆரோக்கியத்தை அமைதியாகப் பாதிக்கின்றன. எனவே, இவற்றை அடையாளம் காண்பது உணவில் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்யவும், நாள்பட்ட குறைபாடுகளைத் தடுக்கவும் உதவுகிறது.
இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் முதலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பது குறித்து பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Malnutrition in Obesity: ஊட்டச்சத்து குறைபாடு உண்மையில் உடல் எடையை அதிகரிக்குமா?
பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகள்
இரும்புச்சத்து குறைபாடு
"இரும்புச்சத்து குறைபாட்டின் முதல் அறிகுறிகள் தூங்கிய பிறகும் சோர்வாக உணர்கின்றன" என்று மருத்துவர் சேத்தி குறிப்பிட்டுள்ளார். அதாவது, உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் சோர்வு, பலவீனம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு பலவீனமடைதல் போன்றவை ஏற்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் மோசமான உணவு உட்கொள்ளல் அல்லது இரும்புச்சத்து உறிஞ்சுதல் பிரச்சினைகள் உள்ள நபர்களில் இந்த குறைபாடு மிகவும் பொதுவானது எனக் கூறப்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாடு
மருத்துவரின் கூற்றுப்படி, "உங்கள் கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படுவது வைட்டமின் பி12 குறைபாட்டின் முதல் அறிகுறியாகும்" என்று கூறினார். இந்த வைட்டமின் குறைபாடு பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வயதான நபர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். இது இரத்த சோகை, சோர்வு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றன.
வைட்டமின் டி குறைபாடு
“எந்த காரணமும் இல்லாமல், குறிப்பாக குளிர்காலத்தில் சோகமாக உணர்ந்தால், அது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்” என்று டாக்டர் சேதி கூறுகிறார். பொதுவாக, வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பது உடலில் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஏனெனில் இது உடலில் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு முக்கியமானதாகும். இது நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக, நாம் நோய்த்தொற்றுகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Nutrient Deficiency: உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது இதுதான் நடக்கும்!
புரதக் குறைபாடு
சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் தேவைப்படும் ஒரு அத்தியாவசிய மைக்ரோநியூட்ரியண்ட் ஆக புரதம் விளங்குகிறது. இந்த புரத குறைபாட்டின் காரணமாக, தசை இழப்பு ஏற்படலாம். எனினும், டாக்டர் சௌரப் சேதி புரதக் குறைபாட்டின் அசாதாரண அறிகுறியைப் பகிர்ந்து கொண்டார். அவரின் கூற்றுப்படி "உங்கள் அடுத்த உணவைப் பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தால் (தொடர்ச்சியான ஏக்கம் மற்றும் அதிகரித்த பசியின்மை என்று பொருள்)," நீங்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறார். மேலும், புரதக் குறைபாட்டின் பிற அறிகுறிகளாக முடி உதிர்தல், சோர்வு, உடையக்கூடிய நகங்கள், மனநிலை மாற்றங்கள் மற்றும் அடிக்கடி ஏற்படும் நோய்கள் போன்றவை அடங்குகிறது.
மெக்னீசியம்
உடலுக்கு தினமும் தேவைப்படும் ஒரு முக்கியமான கனிமமாக மெக்னீசியம் விளங்குகிறது. கண்களில் திடீரென ஏற்படும் துடிப்பு மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் சேதி கூறினார். தசைப்பிடிப்பு மற்றும் பிடிப்பு, சோர்வு மற்றும் பலவீனம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் பதட்டம் அல்லது மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்கள் போன்றவை பிற அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. இது தவிர, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, பசியின்மை, குமட்டல் மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை பிற அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளைக் குறிக்கிறது. எனவே அன்றாட உணவில் சத்தான, நன்கு சமநிலையான உணவை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளும், அவற்றை சரிசெய்யும் முறைகளும்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 20, 2025 15:15 IST
Published By : கௌதமி சுப்ரமணி