Fri Sep 11, 2026 | 11:18 PM IST

Doctor Verified

காலையில் காபிக்கு பதில் இதை குடிக்கவும்.. பித்தம் குறையும்.! மருத்துவர் பரிந்துரை..

பித்தம் அதிகரிப்பதால் ஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய் அபாயம் வருமா? காலை நேரத்தில் காபி ஏன் தவிர்க்க வேண்டும்? பித்தத்தை குறைக்கும் கசாயங்கள், உணவு பழக்கங்கள், மருத்துவர் சிவராமன் வழங்கும் ஆலோசனைகள் – முழு விளக்கம்.

காலை நேரங்களில் பெரும்பாலானவர்களின் உடலில் பித்தம் இயற்கையாகவே அதிகரித்திருக்கும்து. இதை சமநிலையில் வைத்திருக்க வேண்டிய நேரத்தில், பலர் இதற்கு முற்றிலும் எதிர்மாறாக, பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலையிலேயே உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக - ஜீரணமின்மை, நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், வயிறு சூடு - போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

மருத்துவர் சிவராமன் கூறுவதுபடி, காலையில் சாப்பிடும் உணவுகள் பித்தத்தை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக, கசாயங்கள் பித்தத்தை சமநிலையில் வைத்திருக்க சிறந்த மருந்தாக செயல்படுகின்றன.

பித்தத்தை குறைக்கும் காலை கசாயங்கள்

காலையில் எழுந்தவுடன் பின்வரும் கசாயங்களை குடித்தால் பித்தம் குறைந்து, உடல் இயல்பு நிலையை அடையும்:

* கரிசலாங்கன்னி கஷாயம்

* மொசுமொசக்கை கஷாயம்

* திரிகடுகம் கஷாயம்

* ஆவாரம்பூ கஷாயம்

* நெல்லிக்காய் குடிநீர்

மருத்துவர் சிவராமன் கூறுவதுபடி, இவை அனைத்தும் உடல் சூட்டைக் குறைத்து பித்தத்தை கட்டுப்படுத்தும் இயற்கை மருந்துகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: தொண்டையில் சளி இருந்துட்டே இருக்கா.? மருத்துவர் சொல்வதை மட்டும் செய்யுங்க போதும்.!

ஆவாரம்பூ கஷாயம் – சர்க்கரை நோயைத் தடுக்க உதவும் இயற்கை மருந்து

ஆவாரம்பூ தேநீர் உடலை குளிர்ச்சியூட்டுவதுடன், பித்தம் அதிகரிப்பை குறைக்கிறது. பித்தம் அதிகமானவர்களில் கபம் உயரும்; இதுவே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

மருத்துவர் சிவராமன் கூறுகையில், “ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்” என்றார். இது இயற்கையான, எளிய மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத முறையாக கருதப்படுகிறது.

காலையில் காபிக்கு பதிலாக என்ன செய்யலாம்?

* வெறும் தண்ணீர் அல்லது குளிர்ச்சி தரும் கசாயம் குடிக்கவும்

* பசலைக் கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளை தினசரி உணவில் சேர்க்கவும்

* அதிக உப்பு மற்றும் அதிக காரத்தை குறைக்கவும்

* மன அமைதி மற்றும் போதிய தூக்கம் பேணவும் – இவை இரண்டு பித்தத்தை கட்டுப்படுத்த முக்கியமானது

பித்தம் என்பது உடலின் இயற்கையான மாற்றம். ஆனால் சிறிய உணவு, வாழ்க்கை முறைகள் மூலம் வீட்டிலேயே அதை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

இறுதியாக..

பித்தம் அதிகரிப்பது ஜீரணப் பிரச்சினைகள் முதல் சர்க்கரை நோய் அபாயம் வரை பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம். இதை சமநிலையில் வைத்திருக்க காலை நேர கசாயங்கள், குளிர்ச்சியான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் மிகவும் முக்கியம். காபியை அதிகப்படியாக குடிப்பதைத் தவிர்த்து, உடல் இயல்பை புரிந்து உணவு பழக்கத்தை மாற்றினால், உடல்நலம் மெல்ல மெல்ல மேம்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் மற்றும் நிபுணர் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் கூறப்பட்டவற்றை பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்.

Read Next

Varicose Vein.. ஆபரேஷன் அளவுக்கு போகாம தடுக்க முடியுமா.? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 21, 2025 17:45 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content