Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Doctor Verified

இந்த 3 உணவு சேர்க்கைகளை உடனே நிறுத்துங்க.. இல்லாட்டி குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.! மருத்துவர் எச்சரிக்கை..

குடல் ஆரோக்கியம் குன்றக் காரணமாகும் 3 பொதுவான உணவு சேர்க்கைகளை மருத்துவர் சுபம் வட்ச்யா பகிர்ந்துள்ளார். எதைத் தவிர்க்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை இங்கே அறியலாம்.

“சாப்பாடு சரியா ஜீரணமாகவில்லை”, “எப்போதும் வயிற்று வீக்கம் வருகிறது”, “வாயு பிரச்சனை குறையவே இல்லை” – இவை பலருக்கும் பொதுவான புலம்பல்கள். பெரும்பாலும் நாம் உணவின் தரம், சத்துக்கள் குறித்து கவனம் செலுத்துவோம். ஆனால் எந்த உணவுடன் என்ன சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

புகழ்பெற்ற Gastroenterologist டாக்டர் சுபம் வட்ச்யா, குடல் ஆரோக்கியத்துக்கு கேடு தரக்கூடிய மூன்று பொதுவான உணவு சேர்க்கைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பொதுவான உணவு சேர்க்கைகள்

ஜங்க் ஃபுட் + கார்பனேற்றப்பட்ட பானங்கள்

பெர்கர், பீட்சா, பிரைட் சிக்கன் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் போது அதனுடன் குளிர்பானங்கள் குடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் இது குடலுக்கு இரட்டை சுமை ஏற்படுத்துகிறது.

“Greasy Foods ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். அதனுடன் சேரும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் (Carbonated Drinks) வயிற்றில் வாயுவை அதிகரிக்கின்றன. இதனால் வயிறு உப்புசம், அமிலத்தன்மை, செரிமான பிரச்னை அதிகரிக்கும்” என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பால் + மீன்

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக் கூடாது என்பது பழங்காலத்திலிருந்தே சொல்லப்பட்ட ஒன்று. அதனை மருத்துவ ரீதியாகவும் தவறானது அல்ல என்று டாக்டர் சுபம் கூறுகிறார்.

“பாலின் புரதம் மற்றும் மீன் புரதம் உடலில் வேறு விதமாக ஜீரணமாகின்றன. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் ஜீரண சிக்கல், வயிறு உப்புசம், செரிமான பிரச்னைகள் ஏற்படும்” என அவர் குறிப்பிட்டார்.

எனவே, மீன் சாப்பிட்ட உடனே பால் குடிப்பதைத் தவிர்த்து, குறைந்தது 3–4 மணி நேர இடைவெளியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள்.. மருத்துவர் விளக்கம்..

உணவுக்குப் பிறகு உடனே பழங்கள்

உணவுக்குப் பிறகு பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது தவறான பழக்கம் என மருத்துவர் எச்சரிக்கிறார்.

“பழங்கள் உடலில் வேகமாக ஜீரணமாகும். ஆனால் உணவுக்குப் பிறகு உடனடியாக சாப்பிட்டால், அவை மற்ற உணவின் மேல் புளித்து - வாயு, பிடிப்புகள், வயிறு உப்புசம் உண்டாகும். பழங்களை உணவுக்கு முன்போ அல்லது தனியாக சாப்பிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Dr. Shubham Vatsya (@dr.shubhamvatsya)

மருத்துவர் பரிந்துரை

* குடல் ஆரோக்கியத்தை பேண, உணவின் தரம் மட்டும் அல்லாமல், உணவு சேர்க்கைகளும் முக்கியம்.

* Fast Food சாப்பிட்டால் தண்ணீருடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

* மீன் சாப்பிட்டால் பால் குடிக்க குறைந்தது சில மணி நேர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* பழங்களை உணவுக்கு உடனடியாக சாப்பிடாமல் தனியாக சாப்பிட வேண்டும்.

இறுதியாக..

குடல் ஆரோக்கியம் என்பது சிறிய பழக்க மாற்றங்களில் தான் உள்ளது. உணவின் சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ, உணவை எப்போது, எதுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதும் அதே அளவு முக்கியம். Fast Food-க்கு பானம், மீனுக்கு பால், உணவுக்குப் பிறகு பழம் போன்ற பழக்கங்களை தவிர்த்தாலே, Gas, Acidity, Bloating போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை, டாக்டர் சுபம் வட்ச்யா பகிர்ந்த மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உணவுப் பழக்கங்களில் மாற்றம் செய்வதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள்.. மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 27, 2025 16:16 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content