Thu Oct 29, 2026 | 09:52 AM IST

Doctor Verified

பெண்கள் மாதவிடாய் முன்-பின் ஏன் எடை அதிகரிக்கிறார்கள். ? நிபுணர் விளக்கம் மற்றும் தீர்வுகள்..

பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏன் எடை அதிகரிக்கிறார்கள்? ஹார்மோன் மாற்றங்கள், நீர் தேக்கம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் எப்படி பாதிக்கின்றன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். எடை கட்டுப்பாட்டுக்கான முக்கிய ஆலோசனைகளும் இங்கே.
பெண்கள் மாதவிடாய் முன்-பின் ஏன் எடை அதிகரிக்கிறார்கள். ? நிபுணர் விளக்கம் மற்றும் தீர்வுகள்..பெண்கள் மாதவிடாய் முன்-பின் ஏன் எடை அதிகரிக்கிறார்கள். ? நிபுணர் விளக்கம் மற்றும் தீர்வுகள்..

பெண்கள் மாதவிடாய் காலத்தில் மனநிலை மாற்றங்கள், வயிற்றுப்பிடிப்பு போன்றவை பொதுவானவை. ஆனால், மாதவிடாய் முன்பும் பின்னும் எடை அதிகரிப்பது பலருக்கும் கவலைக்குரியதாக உள்ளது. இதன் பின்னால் உள்ள காரணங்களையும், அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதையும் மம்மாஸ் பிளெசிங் IVF மற்றும் பிரசவ பாரடைஸ் மருத்துவமனை இயக்குநரும் IVF நிபுணருமான டாக்டர் ஷோபா குப்தா விளக்குகிறார்.

மாதவிடாய் முன் எடை ஏன் அதிகரிக்கிறது?

டாக்டர் ஷோபா குப்தா கூறுகையில், “மாதவிடாய்க்கு முன்பு, குறிப்பாக அண்டவிடுப்புக்குப் பின், ஹார்மோன்களில் வேகமான மாற்றங்கள் நடக்கின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக, திசுக்களில் நீர் தேக்கம் அதிகரிக்கிறது. இதுவே எடை கூடுவதற்கான முக்கிய காரணம். சுமார் 90% பெண்கள் இதை அனுபவிக்கிறார்கள்” என்கிறார்.

sudden weight gain in womensudden weight gain in women

மாதவிடாய் பின் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

பொதுவாக, மாதவிடாய் முடிந்த பின் ஹார்மோன்கள் சமநிலை அடைந்து, எடை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ஆனால் சில பெண்கள் தொடர்ந்து எடை அதிகரிப்பதைக் காண்கிறார்கள்.

இதற்கான முக்கிய காரணங்கள் ஹார்மோன் மாற்றங்கள் கட்டுப்பாடின்றி நீடித்தல், உணவுக்கான அதிக ஏக்கம், குறிப்பாக இனிப்பு உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல், செயலற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இல்லாமை.

இந்த பதிவும் உதவலாம்: பல பெண்களை பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ்.! இந்த நிலையின் அறிகுறிகள் இங்கே.. மருத்துவர் விளக்கம்..

எடை அதிகரிப்பைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

தண்ணீர் குடிக்கவும்

பெருமளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடலில் தேங்கியுள்ள கூடுதல் நீரை வெளியேற்ற உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு பின்பற்றவும்

மாதவிடாய்க்கு முன் இனிப்புகள் மற்றும் ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்

வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மனநிலையை சீராக்கி, எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

periods postpandperiods postpand

இறுதியாக..

மாதவிடாய் முன்பும் பின்னும் எடை அதிகரிப்பு பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நீர் தேக்கம் காரணமாக ஏற்படுகிறது. இது இயல்பானது, ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆரோக்கியமான உணவு, அதிக தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் எடை மீண்டும் சமநிலையில் வரும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்ல. தொடர்ந்து எடை அதிகரிப்பை அனுபவித்து வருகிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

→ கருப்பை சுத்தம் செய்தால் கர்ப்பம் தாமதம் குறையுமா.? உண்மையை மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 05, 2025 09:00 IST

    Published By : Ishvarya Gurumurthy