Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Expert

என்ன செஞ்சாலும் தைராய்டை நிர்வகிக்க முடியலையா? தைராய்டை ஆதரிக்கும் இந்த உணவுகள் சாப்பிடுங்க..

தைராய்டில் ஹைப்போ தைராய்டு, ஹைபர் தைராய்டு என்று இரண்டு வகை உள்ளது. இவை இரண்டுமே தைராய்டு சுரப்பி சீராக செயல்படாததன் விளைவாக ஏற்படுகிறது. இதற்கு நாம் சரியான உணவுமுறையைக் கையாள வேண்டும். இதில் தைராய்டை ஆதரிக்கும் சில உணவுகள் குறித்து காணலாம்.

தைராய்டு சுரப்பி என்பது பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சிறிய சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி அளவில் சிறியதாக இருப்பினும், உடலில் வளர்ச்சிதை மாற்றம், செரிமானம், உடல் எடை கட்டுப்பாடு, மனநிலை போன்றவற்றை சமநிலைப்படுத்தும் முக்கிய பணி செய்கிறது. தைராய்டைப் பொறுத்தவரை ஹைப்போ தைராய்டு, ஹைபர் தைராய்டு என இரண்டு வகைகள் உள்ளது. இவை இரண்டுமே தைராய்டு சுரப்பி சீராக செயல்படாததன் விளைவாக ஏற்படுகிறது. இதில் தைராய்டு ஹார்மோன் சமநிலையற்றதாக மாறினால், உடல் எடையில் மாற்றங்கள் மற்றும் சோம்பல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், பலருக்கு இது தைராய்டு சுரப்பி செயலிழப்பால் ஏற்படுகிறது என்பதை கவனிக்காமல் விடுகின்றனர்.

எனினும், இதற்கு நாம் என்ன வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும், நம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தைராய்டை நிர்வகிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் தைராய்டு ஹார்மோன் சுரப்பை முறைப்படுத்தி மிக விரைவாக தைராய்டு பிரச்சினையை ஆதரிக்கவும் உதவும் உணவுகள் குறித்து ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரும், ஊட்டச்சத்து நிபுணருமான மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

தைராய்டை நிர்வகிக்க உதவும் உணவுகள்

தைராய்டு பிரச்சனையை இயற்கையாகவே நிர்வகிக்கும் வகையில் நம் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளார். அவை,

- அயோடின் நிறைந்த உணவுகள்

- செலினியம் நிறைந்த உணவுகள்

- துத்தநாகம் நிறைந்த உணவுகள்

- அழற்சி எதிர்ப்பு உணவுகள்

image

foods-every-PCOS-and-thyroid-patient-should-stop-eating-daily-Main-1764695534068.jpg

அயோடின் நிறைந்த உணவுகள்

இந்த வகை உணவுகள் T3/T4 தொகுப்புக்கு மிகவும் அவசியமாகும். இது முன் கழுத்துக் கழலை மற்றும் தைராய்டு குறைபாட்டைத் தடுக்கிறது.

  • தயிர்
  • இளநீர்
  • முருங்கைக்காய்
  • கல் உப்பு

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு நோயாளிகள் காலை உணவில் என்ன சாப்பிட வேண்டும்.? எதைத் தவிர்க்க வேண்டும்.?

செலினியம் நிறைந்த உணவுகள்

செலினியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது செயலற்ற T4-ஐ செயலில் உள்ள T3 ஹார்மோனாக மாற்றுகிறது. இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்புச் சக்தி அளிக்கிறது.

  • கருஞ்சீரகம்
  • சூரியகாந்தி விதைகள்
  • கடலைப்பருப்பு
  • பிரேசில் கொட்டைகள்

துத்தநாகம் நிறைந்த உணவுகள்

தைராய்டு நொதி செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் துத்தநாகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  • நீர்க்காய் (Water Chestnut)
  • பிஸ்தா (Pistachios)
  • திராட்சை
  • வறுத்த கிராம்

அழற்சி எதிர்ப்பு உணவுகள்

அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஹாஷிமோட்டோ அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து தைராய்டைப் பாதுகாக்கும் என நிபுணர் குறிப்பிடுகிறார். இதில் ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ் (Hashimoto's Thyroiditis) என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலமே தைராய்டு சுரப்பியைத் தாக்கி, அதை படிப்படியாக அழிக்கும் ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய் ஆகும்.

  • மஞ்சள்
  • கிலோய்
  • வேப்ப இலைகள்
  • கருப்பு மிளகு

image

7-powerful-lifestyle-changes-to-reverse-hypothyroidism-naturally-Main

View this post on Instagram

A post shared by Dt Manpreet Kalra | Hormone and Gut Health Coach | (@dietitian_manpreet)

இதனைத் தொடர்ந்து, ஊட்டச்சத்து நிபுணர் இன்சுலின் சமநிலைப்படுத்தும் தேநீர் ரெசிபியைப் பகிர்ந்துள்ளார்.

இன்சுலின் சமநிலைப்படுத்தும் தேநீர்

தேவையான பொருட்கள்

1. கொத்தமல்லி விதைகள் - 1 தேக்கரண்டி

2. இலவங்கப்பட்டை - ஒரு சிட்டிகை

3. ஏலக்காய் - 2 காய்கள்

4. தண்ணீர் - 200 மில்லி

செய்முறை

இந்த அனைத்து மசாலாப் பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

இந்த இன்சுலின் சமநிலைப்படுத்தும் தேநீர் ரெசிபியை எடுத்துக் கொள்வது, தைராய்டை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 உணவை சாப்பிட்டா போதும்.. தைராய்டு பிரச்னை இருக்கற இடம் தெரியாம போகும்.!

Image Source: Freepik

Read Next

ஃப்ரைடு ரைஸ் ஸ்டைலில் ஹெல்த்தியான குயினோவா ஸ்டிர் ரெசிபி.. இப்படி செய்யுங்க! எக்கச்சக்க நன்மைகள் இருக்கு

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 11, 2025 11:38 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content