Sat Sep 12, 2026 | 01:46 AM IST

Iron deficiency in children: உங்க குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால் லேசுல விடாதீங்க..!

What is the most common type of anemia in children: இரத்த சோகை என்பது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் (White blood cells) எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் பிரச்சனையாகும். அதாவது, உடலில் ரத்தம் குறைவாக இருப்பதை குறிக்கிறது. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் (Hemoglobin) என்ற புரதம் உள்ளது. இது நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.

உடலில் இரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறை ஏற்படும் போது, ​​இரத்தம் போதுமான ஆக்ஸிஜனை வழங்காது. இது பெரும்பாலும் பெண்களில் அதிகம் காணப்படுகிறது. தற்போது, குழந்தைகளும் இரத்த சோகை பிரச்சினைக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Healthy Food For Kids: உங்க குழந்தையோட சீரான வளர்ச்சிக்கு இந்த 5 உணவுகள் கட்டாயம்!

குழந்தைகளின் இரத்த சோகை அறிகுறிகள்:

  • உங்கள் பிள்ளை சிறிது நேரம் விளையாடியவுடன் சோர்வடைந்தால், இது இரத்த சோகையின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.
  • இரத்தம் இல்லாததால், நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது, இதனால் குழந்தை மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுவார்கள்.
  • இரத்த சோகை காரணமாக, குழந்தைகளிடம் எரிச்சல் மற்றும் அமைதியின்மை காணப்படும்.
  • ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது படிக்கட்டுகளில் ஏறிய பிறகு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, இவையும் இரத்த சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம். உடலில் போதிய இரத்தம் இல்லாததால், உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் வழங்கப்படவில்லை.

இந்த பதிவும் உதவலாம் : Child Brain Development: குழlந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இத ஃபாலோ பண்ணுங்க

  • உங்கள் குழந்தைக்கு அடிக்கடி தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், இவை இரத்த சோகையின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
  • தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக தோன்றினால் இரத்த சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
  • சில சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரித்து உடல் வெப்பமும் குறைய ஆரம்பிக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளவும். இது தவிர பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவ உணவுகளையும் குழந்தைக்கு ஊட்டலாம்.

இந்த பதிவும் உதவலாம் : இரும்புச்சத்து குறைபாடு: தெரிந்து கொள்ள வேண்டியவை இது தான்...

இவை உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி, ஸ்ட்ராபெரி போன்ற வைட்டமின் சி நிறைந்த சத்தான பழங்களை குழந்தைகளுக்கு கொடுங்கள். இவை இரும்புச்சத்தை விரைவாக உறிஞ்சுவதற்கு உடலை அனுமதிக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Thyroid In Children: குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டாக இருக்கலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content