Sat Sep 12, 2026 | 01:53 AM IST

Aloe Vera Benefits: எதிர்ப்பு சக்தி முதல் நீரிழிவு மேலாண்மை வரை.. கற்றாழையின் நன்மைகள் இங்கே..

Health Benefits Of Aloe Vera Benefits: சர்க்கரை மற்றும் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா? இதற்கான தீர்வு உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ளது. 

நமது வீட்டு முற்றத்தில் உள்ள கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பராமரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. கற்றாழை ஜெல் அல்லது ஜூஸ் உபயோகிப்பது நல்ல ஆரோக்கிய பலன்களை தருவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செரிமானம் மேம்படும்

கற்றாழை சாறு குடிப்பது மிகவும் நல்லது. கற்றாழை சாறு குடிப்பதால் செரிமானம் மேம்படும். மேலும் அஜீரணம், குடல் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கிறது. 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. கற்றாழையின் பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. 

இதையும் படிங்க: Aloe Vera Benefits : கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது

கற்றாழை கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். கற்றாழை ஜூஸ் அல்லது ஜெல் எடுத்துக்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். 

சருமத்திற்கு நல்லது

அதேபோல் கற்றாழை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். முகப்பரு, தழும்புகள் மற்றும் சரும வறட்சி போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. கற்றாழை குடிப்பதால் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து உடலில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

நீரிழிவு மேலாண்மை

கற்றாழை சாறு குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது இன்சுலில் சுரப்பை சீராக்குகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு சிறந்த தேர்வாக இருக்கும். 

துர்நாற்றம் நீங்கும்

கற்றாழை சாறு குடிப்பதால் வாய் துர்நாற்றம் வராது. கற்றாழையில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாயை சுத்தமாக வைத்திருக்கின்றன.

இந்த பதிவில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களின் தனிப்பட்ட கருத்துகள் மற்றும் சந்தேகத்திற்காக மருத்துவரை அணுகுவது நல்லது. 

Read Next

கெட்ட கொலஸ்ட்ராலை சட்டென குறைக்க… இந்த 5 பொருட்கள் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content