Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Doctor Verified

இரவு உணவை மாற்றினாலே எடை குறையும் – 48 நாள் கஞ்சி ரகசியம்!

இரவு உணவாக கேழ்வரகு கஞ்சி 48 நாட்கள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர் தீபா பரிந்துரைக்கும் எளிய கஞ்சி செய்முறை மற்றும் அதன் பலன்கள்.

உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க விரும்புபவர்களுக்கு, சத்தான இரவு உணவு மிகவும் முக்கியம் என மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட கஞ்சியை தினசரி 48 நாட்கள் இரவு உணவாக எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து எடை இழப்பு ஏற்படும் என அவர் விளக்குகிறார்.

இந்த கஞ்சி எளிதாக வீட்டிலேயே தயாரிக்கக் கூடியது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் சீராக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. முக்கியமாக, முளைகட்டிய கேழ்வரகை அடிப்படையாகக் கொண்டு இந்த கஞ்சி தயாரிக்கப்படுகிறது.

கஞ்சி தயாரிக்கும் முறை:

முதலில், முளைகட்டிய கேழ்வரகை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.

இதனுடன் கேரட், ப்ரோக்கொலி, காள்ஃபிளவர், பீன்ஸ், கொத்தமல்லி இலை போன்ற காய்கறிகளை விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம். அனைத்துக் காய்கறிகளையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; வீட்டில் கிடைப்பவற்றை பயன்படுத்தலாம். சத்தைக் கூட்டுவதற்காக சிறிதளவு பட்டாணியும் சேர்க்கலாம்.

அனைத்து பொருட்களையும் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கொள்ளு சேர்க்கலாம். கொள்ளு உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள் அதை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ராகி எல்லாருக்கும் நல்லதல்ல! சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டும் – மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை

எப்போது சாப்பிட வேண்டும்?

இந்தக் கஞ்சியை தினசரி இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இரவு 7 முதல் 8 மணிக்குள் இந்த கஞ்சியை குடித்து விட்டு, 9 மணிக்குள் தூங்கச் செல்லுவது உடலுக்கு மிகுந்த நன்மை தரும் என மருத்துவர் தீபா கூறுகிறார். கஞ்சியை குடிப்பதற்கு முன்பு, மாலை நேரத்தில் சற்று நடைபயிற்சி மேற்கொண்டால் எடை குறைவு இன்னும் சிறப்பாக அமையும்.

48 நாட்களில் கிடைக்கும் பலன்கள்:

  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்
  • உடல் எடை இயற்கையாக குறையும்
  • செரிமானம் சீராகும்
  • இரவு நேர கனமான உணவால் ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும்
  • உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

இறுதியாக..

எடை குறைப்பதற்காக கடுமையான டயட் அல்லது மருந்துகளை நாடாமல், பாரம்பரிய உணவான கேழ்வரகு கஞ்சியை இரவு உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான எடை இழப்பை பெற முடியும். தொடர்ச்சியான பழக்கமும், நேரக்கட்டுப்பாடும் இதன் வெற்றிக்கான முக்கிய காரணங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

மல்டிவைட்டமின் மாத்திரைகள் எப்போதும் அவசியமில்லை.. ஏன் தெரியுமா? நிபுணர் தரும் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 18, 2025 11:09 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Dec 18, 2025 11:09 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content