Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

Premature Grey Hair: இளநரையை கட்டுப்படுத்த கரிசலாங்கண்ணி கீரை – மருத்துவர் சிவராமன் விளக்கம்

இளைஞர்களுக்கு நரைமுடி உருவாகும் காரணங்கள் என்ன? கரிசலாங்கண்ணி கீரை மற்றும் நெல்லிக்காய் மூலம் இளநரையை சரி செய்ய முடியுமா? மருத்துவர் சிவராமன் கூறும் முக்கிய ஆலோசனைகள்.

இன்றைய வாழ்க்கை முறையில் நரைமுடி என்பது முதியவர்களின் பிரச்சனை என்ற நிலை மாறி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடமே இளநரை தோன்றத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, காதுக்கு மேல், நெற்றிப் பகுதி அருகே நரைமுடிகள் தோன்றுவது பலரையும் கவலையடையச் செய்கிறது. இந்த இளநரை பாதிப்புக்கான காரணங்களையும் அதற்கான இயற்கை தீர்வுகளையும் மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்.

இளநரைக்கு காரணம் என்ன?

  • வாழ்க்கை முறை மாற்றம்
  • தவறான உணவுப் பழக்கம்
  • உடலில் அதிகப்படியான சூடு
  • ரசாயன அடிப்படையிலான முடி அலங்காரம்
  • ஊட்டச்சத்து குறைபாடு

இவை அனைத்தும் முடியில் கருமை நிறத்தை வழங்கும் மெலனின் சுரப்பை பாதிக்கின்றன.

கரிசலாங்கண்ணி கீரை – இளநரைக்கு இயற்கை மருந்து

இளநரை பாதிப்பை கட்டுப்படுத்த கரிசலாங்கண்ணி கீரை அவசியம் என மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார். இந்த கீரை, முடியில் இயற்கையான கருமை நிறத்தை அதிகரிக்கிறது, முடி வேர்களை வலுப்படுத்துகிறது, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. கரிசலாங்கண்ணி கீரை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சத்துகளின் ராஜா இது தான்.! கீரையில் இருக்கும் அதிசய நன்மைகள்.. மருத்துவர் சிவராமன் விளக்கம்..

உணவாக எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்?

கரிசலாங்கண்ணி கீரையை உணவாக சமைத்து சாப்பிடலாம். தினமும் சாப்பிட சிரமம் இருப்பவர்கள் கீரையை உலர்த்தி பொடியாக்கி, உணவுக்கு முன் அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.

இளநரை வராமல் இருக்க என்ன செய்யக் கூடாது?

இன்றைய காலத்தில் முடி அலங்காரம் ஒரு பழக்கமாக மாறிவிட்டது. அடிக்கடி ஹேர் கலர், ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், ஹீட் அடிப்படையிலான ஸ்டைலிங் - இவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், உடலில் சூடு அதிகரிக்கும் உணவுகள் கோழிக்கறி, எண்ணெயில் பொறித்த உணவுகள், ஊறுகாய், சிப்ஸ், ஜங்க் ஃபுட் - இவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

இறுதியாக..

இளநரை என்பது ஒரே நாளில் உருவாகும் பிரச்சனை அல்ல. சரியான உணவு, இயற்கை கீரைகள், வாழ்க்கை முறை மாற்றம், இவற்றை தொடர்ந்து பின்பற்றினால்
நரைமுடி பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். கரிசலாங்கண்ணி கீரை மற்றும் நெல்லிக்காய் இயற்கை முறையில் முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது சுகாதார தகவல்கள் மற்றும் நிபுணர் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு, ஹார்மோன் பிரச்சனை, திடீர் நரைமுடி அதிகரிப்பு, முடி தொடர்பான நோய்கள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே இக்குறிப்புகளை பின்பற்றவும்.

Read Next

உச்சந்தலையில் இந்த 5 அறிகுறிகள் இருக்கா? தவறாம பார்த்து சரி செய்யுங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 17, 2025 14:46 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content