Fri Sep 11, 2026 | 10:48 PM IST

Doctor Verified

பனிக்காலத்தில் அதிகரிக்கும் சளி இருமல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு.! கரிசலாங்கண்ணி கீரை செய்யும் அதிசயம்.! மருத்துவர் சிவராமன் விளக்கம்..

பனிக்காலத்தில் அதிகரிக்கும் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு கரிசலாங்கண்ணி டீ எப்படி நிவாரணம் தருகிறது? மருத்துவர் சிவராமன் கூறும் எளிய மருத்துவ குறிப்புகள் இங்கே.

பனிக்காலம் வந்துவிட்டால் பலருக்கும் சளி, கெட்டியான இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து விடும். சிலருக்கு இந்த சளி மிகக் கனமாகி, காலை நேரங்களில் அதிகமாக வெளிப்படும். இதற்கு மருந்துகளைக் கேட்டுக் கொள்ளாமல், நம் சுற்றுப்புறங்களில் கிடைக்கும் ஒரு சாதாரண கீரை போதும் என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன். ஹெல்த் பாஸ்கெட் யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்த மருத்துவ குறிப்புகள் இங்கே.

தேனீர் குடிக்கும் போது செய்ய வேண்டிய மாற்றம்

மருத்துவர் சிவராமன் கூறுவதாவது, “தேனீர் குடிக்க வேண்டுமெனில் பாலில்லாமல் குடிப்பதே சிறந்த தேர்வு. நீரை கொதிக்க வைத்து, அதில் தேயிலை 2 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் - சத்துக்கள் அதிகம், செரிமானம் மேம்படும். தேவைப்பட்டால் தேன் அல்லது பனங்கருப்பட்டி சேர்க்கலாம்.” என்றார்.

Video Link: https://youtu.be/OH_8LlMB1Js

ஆவாரம்பூ டீ – சர்க்கரை, உப்பு பிரச்சனைகளுக்கு உதவும்

வறண்ட நிலத்தில் வளரும் ஆவாரம் பூ, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரில் அதிக உப்பு வெளியேறும் ஒருவருக்கு ஆவாரம்பூ டீ சிறந்த தேர்வு என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஹெர்பல் டீ குடிப்பது பாதுகாப்பானதா? – நிபுணர் விளக்கம்

கரிசலாங்கண்ணி – சளி, இருமலுக்கான இயற்கை மருந்து

வள்ளலார் வாழ்த்திய மூலிகை கரிசலாங்கண்ணி பற்றி மருத்துவர் சிவராமன் கூறியதாவது, “கனமான சளி, கெட்டியான இருமல் வெளியேறும் போது வலி போன்றவற்றிற்கு கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து. கரிசலாங்கண்ணி சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி வைத்துள்ள கையாந்தைலம் குடித்தால் - சளி விரைவில் வெளியேறும், மார்பு அடைப்பு குறையும் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான சக்தி அதிகரிக்கும்” என்றார்.

மேலும், தினமும் ஒரே டீயை குடிக்காமல், தேனீர், ஆவாரம்பூ டீ, கரிசலாங்கண்ணி சாறு போன்றவற்றை மாறிமாறி குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்” என அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

இறுதியாக..

தினசரி எடுத்துக் கொள்கிற பானங்களில் சிறிய மாற்றங்கள் செய்தாலே பனிக்காலத்தில் அதிகரிக்கும் சளி இருமல் பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
கரிசலாங்கண்ணி கீரை, ஆவாரம்பூ போன்ற எளிய மூலிகைகள் - சளியை கரைக்கும், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும். இவை மருந்துகளைப் போல பக்கவிளைவில்லாத பாதுகாப்பான இயற்கை நிவாரணங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவ தகவல்கள் மற்றும் நிபுணர் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

மாதுளை ஜூஸ் முதல் கிரான்பெர்ரி ஜூஸ் வரை.. குடல் & கல்லீரல் ஆரோக்கியத்துக்கான 5 முக்கிய பானங்கள்.! டாக்டர் சல்ஹாப் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 05, 2025 08:03 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content