Fri Sep 11, 2026 | 10:48 PM IST

Doctor Verified

தினமும் ஹெர்பல் டீ குடிப்பது பாதுகாப்பானதா? – நிபுணர் விளக்கம்

தினமும் ஹெர்பல் டீ குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானதா? எந்த வகை ஹெர்பல் டீ தினசரி சாப்பிடலாம்? பக்கவிளைவுகள் என்ன? கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள், மருந்து உட்கொள்பவர்களுக்கு உள்ள அபாயங்கள் என்ன? நிபுணர் கருத்து அடிப்படையில் முழுமையான செய்தி.

சமீப காலங்களில் கிரீன் டீ, துளசி டீ, கெமோமில் டீ போன்ற ஹெர்பல் டீக்கள் அதிகப் பிரபலமாகி வருகின்றன. காலை எழுந்ததும் அல்லது இரவு உறங்கும் முன்பும் பலர் இதை வழக்கமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த ஹெர்பல் டீக்கள் தினமும் குடிப்பது உண்மையில் பாதுகாப்பானதா? என்பதே பலரின் சந்தேகம். OnlyMyHealth தளத்தின் ஆசிரியர் குழுவினர், ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஸ்டான டாக்டர் கீதிகா சோப்ராவை சந்தித்து இந்த கேள்விக்கான பதிலை பெற்றுள்ளனர்.

தினமும் ஹெர்பல் டீ குடிக்கலாமா?

“ஆம், பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு தினமும் ஹெர்பல் டீ குடிப்பது பாதுகாப்பானதே. ஆனால் குறைந்த அளவில், நல்ல தரமான மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,” என்கிறார் டாக்டர் கீதிகா.

ஹெர்பல் டீக்கள் கஃபைன் இல்லாதவை. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்கள், பாலிபீனால்கள், தாவரச் சேர்மங்கள் நிறைந்தவை. இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் குடிப்பது உடலுக்கு நுண்ணிய தாக்கங்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கிறார். தினமும் 1–2 கப் மட்டுமே குடிப்பது பாதுகாப்பான அளவாகும்.

artical  - 2025-11-22T224721.515

தினசரி குடிக்க ஏற்ற மென்மையான மூலிகைகள்:

  • கெமோமில்
  • துளசி
  • லெமன் கிராஸ்
  • பெப்பர்மின்ட்

அளவாக மட்டும் குடிக்க வேண்டிய வலுவான மூலிகைகள்:

  • லைக்ரைஸ்
  • ஹிபிஸ்கஸ்

இந்த பதிவும் உதவலாம்: ஹெர்பல் டீ குடிப்பவர்களுக்கு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!

ஹெர்பல் டீயின் பக்கவிளைவுகள் என்ன?

“இயற்கை என்றாலே எல்லாம் பாதுகாப்பில்லை,” என்று நிபுணர் கூறுகிறார். அதிக அளவில் ஹெர்பல் டீ குடித்தால் சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்:

1. ஜீரண பிரச்சினைகள்

வலுவான இஞ்சி அல்லது பெப்பர்மின்ட் டீ –

  • அமிலத்தன்மை (acidity)
  • எரிச்சல்
  • வயிற்றுப் போக்கு

2. இரத்த அழுத்த மாற்றங்கள்

  • ஹிபிஸ்கஸ் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • BP மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு அபாயம்.

3. லைக்ரைஸ் டீ – நீர் தங்குதல்

  • உடலில் தண்ணீர் தங்குதல்
  • BP உயரும் அபாயம்

4. ஒவ்வாமை

கெமோமில் , லாவெண்டர் போன்ற பூவியல் மூலிகைகளுக்கு சிலருக்கு allergy.

5. மருந்துகளுடன் தொடர்பு (Interaction)

கீழ்கண்ட மருந்துகள் உட்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்:

  • இரத்தக் கட்டி தடுக்கும் மருந்துகள்
  • சக்கரை மருந்துகள்
  • தைராய்டு மருந்துகள்

ஹெர்பல் டீ குடிப்பதன் நன்மைகள்

ஒவ்வொரு மூலிகைக்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. நிபுணர் பட்டியலிட்ட நன்மைகள்:

  • உடலின் வீக்கம் குறைதல்
  • செரிமானம் மேம்பாடு
  • உப்புசம் குறைதல்
  • மனஅழுத்தம் குறைப்பு
  • எடை மேலாண்மை
  • இதய ஆரோக்கியம் மேம்பாடு 
  • உடல் நச்சு நீக்கம்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

artical  - 2025-10-13T075059.586

யாரெல்லாம் ஹெர்பல் டீ தவிர்க்க வேண்டும்?

நிபுணர் கூறுவதாவது:

  • கர்ப்பிணி / பாலூட்டும் தாய்மார்கள் – செம்பருத்தி, ரோஸ்மேரி, அதிமதுரம் தவிர்க்க வேண்டும்.
  • BP, தைராய்டு, நீரிழிவு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்
  •  அமிலத்தன்மை, gastritis உள்ளவர்கள்
  • கிட்னி நோயாளிகள் – அதிக ஹிபிஸ்கஸ் தவிர்க்க
  • ஒவ்வாமை உள்ளவர்கள் – Chamomile போன்றவை கவனத்துடன்

ஹெர்பல் டீயை தினசரி சேர்ப்பது எப்படி?

  • தினமும் ஒரு கப் ஆரம்பித்து, தேவைக்கேற்ப இரண்டு கப் வரை.
  • Loose-leaf herbs சிறந்த தேர்வு.
  • உணவுக்கு பின் குடிப்பது செரிமானத்திற்கு சிறப்பு.
  • காலியாக வயிற்றில் குடிக்க வேண்டாம்.
  • வாரம் முழுவதும் மூலிகைகளை மாற்றி மாற்றி குடிக்கவும்.
  • சர்க்கரை சேர்க்காமல், தேன்/எலுமிச்சை பயன்படுத்தவும்.

கடைசியாக…

மெத்தனமாக, அளவோடு குடிக்கும் போது ஹெர்பல் டீ பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானது. இயற்கை மூலிகைகள் உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் மேம்படுத்த உதவும். ஆனால் எந்தஒரு மூலிகையையும் அதிகப்படியாக குடித்தால் பக்கவிளைவுகள் ஏற்படும். உடல் நல பிரச்சினை அல்லது மருந்து உட்கொள்வோர் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களை மட்டும் வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. நீண்டகால நோய்கள், கர்ப்பம், மருந்து உட்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

இந்த ஒரே இலை 8 பெரிய நோய்களை கட்டுப்படுத்தும்.! வேப்பிலையின் அசுர நன்மைகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 30, 2025 22:20 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content